மோசமான உறக்கம் ஒருவரது மன நலனை மோசமாக பாதிக்கிறது, அவரை மிருகத்தனம் கொண்டவராக மாற்றுகிறது என்பதற்கான ஆதாரச் சான்றுகள் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.


பரவலான, நீடித்த தூக்கமின்மை சமூகத்தில் இன்று இயல்பான ஒன்றாக மாறிப்போயுள்ளது. இது, உண்மையில், பல ஆண்டுகளாக சினிமாக்களிலும் பொது சமூகத்திலும் நகைச்சுவையாகவே விவாதிக்கப்பட்டு வருகிறது. இச்சூழலில்  புதிய ஆய்வு ஒன்று ஒருவர் எரிச்சல் அடைவதற்கு பின்னால் என்ன இருக்கிறது என்பது குறித்த  ஆராய்ச்சியை மேற்கொண்டது.


“மனிதர்கள் ஒருவருக்கொருவர் பொதுவாக உதவுகிறார்கள். ஹோமோ செப்பிபியன்ஸின் இந்த அடிப்படை அம்சம், நவீன நாகரிகங்களின் வருகையை மெருகேற்றும் சக்தி வாய்ந்த அம்சங்களில் ஒன்று. ஆனால், மனிதர்கள் ஒருவருக்கு உதவ முனைவதற்கான காரணத்தை எது தீர்மானிக்கிறது என்பதை இந்த ஆய்வு குறிப்பிடுகிறது. பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு இந்த கேள்விக்கு பதிலளிக்க முயன்றது.


முன்னதாக PLOS உயிரியல் எனும் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, சில சோதனைகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதலாவது, நம்மைச் சுற்றியுள்ளவர்களுடன் பச்சாதாபம் கொள்ளும் திறனுடன் தொடர்புடைய மூளையின் நரம்பு மண்டலத்தில், தூக்கமின்மை காரணமாக எவ்வாறு செயல்திறன் குறைகிறது என்பதை நிரூபித்துள்ளது. மூளை ஸ்கேன் மூலம் இது கண்டறியப்பட்டுள்ளது.


இரண்டாவது பரிசோதனையில், பங்கேற்பாளர்களின் தனிப்பட்ட நற்பண்புகளை அளவிட சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி நீண்ட நேரம் தூங்குபவர்கள் அதிக நற்பண்புகளுடன் அதிக  மதிப்பெண்களை பெற்றனர்.


துரதிர்ஷ்டவசமாக தூக்கமின்மையின் விளைவாக, சமூகம் பலவற்றையும் இழக்க நேரிடுகிறது என இந்த ஆய்வு கூறுகிறது. ”தூக்கமின்மை ஒரு தனிநபரின் ஆரோக்கியத்தை சேதப்படுத்துவது மட்டுமல்லாமல், தனிநபர்களுக்கிடையேயான சமூக தொடர்புகளையும் சீர்குலைக்கிறது, மேலும், மனித சமுதாயத்தின் கட்டமைப்பை சீரழிக்கிறது என்பதை இந்த ஆய்வு நிரூபித்துள்ளது.


நாம் ஒரு சமூக இனமாக எவ்வாறு செயல்படுகிறோம் என்பது நாம் எவ்வளவு தூக்கத்தைப் பெறுகிறோம் என்பதைப் பொறுத்து தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது" என UC பெர்க்லியின் உளவியல் பேராசிரியரான இணை எழுத்தாளர் மேத்யூ வாக்கர் குறிப்பிடுகிறார்.


கடந்தகால ஆராய்ச்சிகள் குறிப்பிடுவது போல, மன அழுத்தம் அவரவரின் மேல் பச்சாதாபத்தை அதிகப்படுத்தி, பிறரிடம் நாம் வெளிப்படுத்தும் இரக்க குணத்தை பாதிக்கிறது.


முன்னதாக நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் எனு இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி,  தூக்கமின்மை மக்களின் தனிமை உணர்வுகளை அதிகரிக்கிறது. மேலும் ஒருவரது சமூக ஈடுபாட்டை அதிகரிக்கும் மூளையின் நரம்பு மண்டலத்தில் செயல்திறனைக் குறைத்து மற்றவர்களுடன் உரையாடுவதையும் குறைக்கிறது. 


மேலும், ஆரோக்கியமான தூக்கமானது சமூகப் பிணைப்பு, பச்சாதாபம், கனிவான மற்றும் தாராளமான மனித நடத்தையை ஊக்குவிக்கப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது


கடந்த மே மாதம் வெளியான ஒரு ஆய்வின்படி,  வெப்பமான காலநிலை மக்களின் தூக்கத்தை கடினமானதாக்குகிறது. இதில் சுவாரஸ்யமானத் தகவல் என்னவென்றால், அதிக வெப்பநிலை மக்களுக்கு ஏற்படும் ஆக்ரோஷம் மற்றும் மோசமான மனநிலையுடன் தொடர்புடையது. 




மேலும் படிக்க: Imran Khan on Salman Rushdie: ’இஸ்லாமியர்களின் கோபம் புரிகிறது... ஆனால் நியாயப்படுத்த முடியாது’ - சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல் குறித்து இம்ரான் கான்


Chinese Spy Ship: இலங்கையில் சீன ‘உளவு’ கப்பல்.. இந்தியாவின் ப்ளான் என்ன? நிலைமையைச் சொன்ன அமைச்சர் ஜெய்சங்கர்!