தூக்கம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் முக்கியமான ஒன்றாகும். ஒருவருக்கு தூக்கம் இல்லை என்றால் தினசரி வேலை கூட செய்யாத அளவு சிக்கல்கள் ஏறபடும். ஒரு மனிதனுக்கு குறைந்தபட்சம் 7 முதல் 9 மணி நேரம் வரை தூக்கம் தேவை. அப்படி தினசரி இரவு தூங்கினால் உடலில் பிரச்சனைகள் வராமல் இருக்கும். சரியான தூக்கம் இல்லை என்றால் மன ரீதியாக மட்டுமல்லாமல் உடல் ரீதியாகவும் பல பிரச்சனைகள் ஏற்படும்.


ஒழுங்கற்ற தூக்கம் உங்கள் குடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களுடன் தொடர்பு இருக்கலாம் என்று ஒரு புதிய ஆய்வு கூறுகிறது. தி ஐரோப்பிய ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஆய்வில், சோஷியல் ஜெட்லாக் (ஒரு நாள் முழுவதும் ஏற்படும் சோர்வு) மற்றும் உணவு முறைகளுக்கு இடையே ஒரு தொடர்பைக் கண்டறிந்துள்ளது. சோஷியல் ஜெட்லாக் என்பது biological clock ல் ஏற்படும்  மாற்றமாகும். இந்த மாற்றம் வேலை நாட்கள், வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் நாம் தூங்கும் முறை மாறும்போது ஏற்படுகிறது. அதிக அளவில் இடையூறு ஏற்படும் தூக்கம் ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வு கூறுகிறது. உறங்கும் நேரம் மற்றும் விழித்திருக்கும் நேரங்களை சீராக வைத்திருப்பது மற்றும் சமச்சீரான உணவுகளை உட்கொள்வது நோய் அபாயத்தைக் குறைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 


சோஷியல் ஜெட்லாக் என்பது ஆரோக்கியத்துடன் தொடர்பு கொண்ட மைக்ரோபயோட்டா போன்ற கிருமிகளின் உருவாக்கத்தை ஊக்குவிக்கும் என சுகாதார அறிவியல் நிறுவனமான ஜோவின் மூத்த ஊட்டச்சத்து விஞ்ஞானி கேட் பெர்மிங்காம் தெரிவித்துள்ளார்.  லண்டனின் கிங்ஸ் கல்லூரியில், ஏறக்குறைய 1,000 பேரிடம்  நடத்திய ஆய்வின் அடிப்படையில் இந்த புதிய கண்டுபிடிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு சாதாரண வாரத்தில் உங்கள் இரவு தூக்கத்தில் 90 நிமிட வித்தியாசம் கூட மனித குடலில் காணப்படும் பாக்டீரியா வகைகளை பாதிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்கள், பங்கேற்பாளர்களின்  தூக்க முறை இரத்தம் மற்றும் மல மாதிரிகளை பகுப்பாய்வு செய்து அவர்கள் சாப்பிட்ட அனைத்தையும் பதிவு செய்தனர். அந்த ஆய்வின் முடிவில் சரியான தூக்கம் இல்லை என்றால் குடலில் இருக்கு நல்ல பாக்டீரியாக்களின் மீது நேரடி தாக்கம் ஏற்படுத்தும் என கண்டறியப்பட்டது.


டாக்டர் பெர்மிங்காம், மோசமான தூக்கம் அல்லது சரியான தூக்கம் இல்லாத நபர்கள் அதிக கார்போஹைட்ரேட் அல்லது சர்க்கரை உணவுகளை விரும்புகிறார்கள் என கூறியுள்ளார். அதுமட்டுமின்றி, தூக்கமின்மை  biological clock –யை சீர்குலைப்பது மட்டுமல்லாமல் சர்க்கரை நோய், உடல் எடை அதிகரிப்பு மற்றும் இதய பிரச்சனை போன்ற பல பிரச்சனை வர வழிவகுக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.