சமீப காலங்களில், பரபரப்பான வாழ்க்கை முறை மற்றும் பிற காரணிகளால் இளம் தலைமுறையினர் அதிக கொலஸ்ட்ரால் பாதிப்பை எதிர்கொள்கின்றனர். நமது பிஸியான வாழ்க்கை முறை காரணமாக நாம் நமது ஆரோக்கியத்தில் சிறிதும் அக்கறை செலுத்துவதில்லை. தவறான வாழ்க்கை முறை தேர்வுகள், ஆரோக்கியமற்ற உணவு முறைகள் மற்றும் உடல் உழைப்பின்மை ஆகியவை உடலில் கொலஸ்ட்ரால் திரட்சியின் பிரச்சனைக்கு வழிவகுக்கிறது. கொழுப்பு நிறைந்த உணவுகள், புகைபிடித்தல் அல்லது மது அருந்துதல் ஆகியவற்றால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பு முதன்மையாக ஏற்படுகிறது.


கெட்ட கொலஸ்ட்ரால் என்பது மெழுகு போன்ற ஒரு பொருளாகும், இது நரம்புகளில் குவிந்து, இதன் காரணமாக இரத்த நாளங்கள் சுருங்கத் தொடங்குகின்றன. இது உடலில் நீண்ட காலம் சேர்வது நாட்பட்ட இதய நோய்க்குக்  கூட வழிவகுக்கும்.




கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, இரத்த ஓட்டம் பாதிக்கப்படும் மற்றும் இரத்தம் சரியாக இதயத்திற்குச் செல்லாதபோது, ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படலாம்.


வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம், ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தலாம். ஒரு சுகாதார நிபுணருடன் கலந்தாலோசிப்பதன் மூலம் மருந்துகளின் மூலம் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தலாம், அல்லது வீட்டு வைத்தியம் மூலம் இயற்கையான முறையில் அதைக் கட்டுப்படுத்தலாம். குறிப்பாக வெந்நீர் அருந்துவது கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்கிறது.


குறிப்பாக, இரத்த நாளங்களில் கெட்ட கொழுப்பு சேர்வதால் அதிக கொலஸ்ட்ரால் ஏற்படுகிறது என்பதை நாம் அறிவோம், இந்த பிரச்சனைக்கு வெந்நீர் குடிப்பது மிகவும் பயனுள்ள தீர்வாகும். தொடர்ந்து சூடான நீரை உட்கொள்வது லிப்பிட் ப்ரோபைலை கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் தமனிகளில் கொழுப்பு சேருவதைத் தடுக்கிறது.


சூடான நீர் இரத்த திரவத்தை விரைவாக அதிகரிக்கிறது. இரத்த திரவங்கள் இல்லாததால், இரத்தம் நரம்புகளில் தடிமனாகத் தொடங்குகிறது. இது இரத்த ஓட்டத்தை பாதிக்கிறது. வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால் இரத்தம் மெலிந்து, இரத்த ஓட்டம் மேம்படும்.


கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதற்கு மிகப்பெரிய காரணம் எண்ணெய் உணவுகள்தான். இதன் காரணமாக, உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் வேகமாக அதிகரிக்கிறது. ட்ரைகிளிசரைடு எண்ணெய் உணவுகளிலிருந்து உருவாகிறது, இது கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம். ட்ரைகிளிசரைடு துகள்கள் நரம்புகளில் சேர்வதை வெந்நீர் தடுக்கிறது. அதனால் தினமும் வெதுவெதுப்பான நீர் அருந்தப் பரிந்துரைக்கப்படுகிறது.


கூடவே பூண்டை வெந்நீரில் சேர்த்து சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் பிரச்சனை குறைகிறது. வெறும் வயிற்றில் பூண்டை தண்ணீருடன் சேர்த்து சாப்பிட்டால், இதயம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.


அதனால் தினமும் காலையில் அல்லது இரவு உறங்குவதற்கு முன்பு நன்கு காய்ச்சிய வெதுவெதுப்பான நீரை அருந்துவதை வழக்கப் படுத்திக் கொள்வது நல்லது.