’கேஜிஎஃப்’ என்ற ஒற்றைப் படத்தின் மூலம் நாட்டின் ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் தூக்கி வைத்து கொண்டாடித் தீர்க்கும் பிரம்மாண்ட கதாநாயகனாக உருவெடுத்தவர் கன்னட நடிகர் யஷ்.


ராக்கி பாய் யஷ்!


2018ஆம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில், யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் படம், பிற மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி, சத்தமே இல்லாமல் ஹிட் அடித்து ஒட்டுமொத்த இந்தியாவின் சிறந்த டான் படங்களில் ஒன்றாக உருவெடுத்தது.


வசூலிலும் சாதனைப் படைத்த இப்படத்தின் 2ஆம் பாகம் தொடர்ந்து சென்ற ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸ் ரெக்கார்டுகளை துவம்சம் செய்து பட்டையைக் கிளப்பியது.


படத்தில் ராக்கி பாயாக வாழ்ந்த நடிகர் யஷ் கன்னட சினிமா தாண்டி ஒட்டுமொத்த இந்தியாவின் இண்டு இடுக்குகளிலும் உள்ள ரசிகர்களை சலாம் சொல்ல வைத்து அனைவரது மனங்களிலும் இடம்பிடித்தார்.


திருமணம், குடும்பம்


2007ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் ’ஜம்படா ஹுடுகி’ எனும் படத்தில் அறிமுகமான யஷ், முதலில் கன்னட சீரியல் மூலம் உலகிலேயே தன் பயணத்தைத் தொடங்கினார். கேஜிஎஃப் படத்துக்குப் பிறகு பான் இந்தியா ஸ்டாராக உருவெடுத்துள்ள யஷ் தன் அடுத்த படம் குறித்த எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.


தன்னுடன் முதல் படத்தில் நடித்த நடிகை ராதிகா பண்டிட்டை காதலிக்கத் தொடங்கிய யஷ் அவரை 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆர்யா என்ற மகளும் யாத்ரவ் என்ற மகனும் உள்ளனர்.


கன்னட சினிமா ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் யஷ் - ராதிகா ஜோடியின் புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அடிக்கடி ஹிட் அடிப்பது வழக்கம். மேலும் இவர்களது குடும்ப சுற்றுலா படங்கள் தொடங்கி குழந்தைகளின் புகைப்படங்கள் வரை இணையத்தில் ஹிட் அடித்து லைக்ஸ் அள்ளி வருகின்றன.


மகனுடன் க்யூட் வீடியோ!


அந்த வகையில் யஷ் தன் மகன் யாத்ரவ் உடன் இருக்கும் க்யூட்டான வீடியோ ஒன்று இன்ஸ்டாவில் ஹிட் அடித்துள்ளது.


தன் புஜ பலத்தை மகன் யாத்ரவிடம் யஷ் காட்டும் நிலையில், “இது சாஃப்டா இருக்கு; என் கை இறுக்கமா இருக்கு” என மழலை மொழியில் யஷ்ஷின் மகன் யாத்ரவ் பேசும் இந்த க்யூட்டான வீடியோ இன்ஸ்டாவில் லைக்ஸ் அள்ளி வருகிறது.


 






தன் மகன் உடனான அழகிய உரையாடலை யஷ் தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், 10 லட்சத்தும் மேற்பட்ட இதயங்களைப் பெற்று இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


கேஜிஎஃபின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு யஷ் இதுவரை எந்தப் படத்திலும் ஒப்பந்தமாகாத நிலையில், கேஜிஎஃப் 3 படத்தில் யஷ் அடுத்ததாக நடிக்கலாம் எனத் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.