காதலர் தின வாரத்தில் இன்று முத்த தினம் (Kiss Day) கொண்டாடப்படும் நிலையில் ஒவ்வொரு வகையான முத்தம் பற்றி காணலாம்.
சின்ராசை கையில் பிடிக்கவே முடியாது என சூர்யவம்சம் படத்தில் மணிவண்ணன் பேசும் வசனத்தைப் போல பிப்ரவரி வந்துவிட்டாலே போதும் காதலர்களை கையில் பிடிக்க முடியாது. நாள் கணக்கில் காதலித்தவர்களும் சரி, வருட கணக்கில் காதலிப்பவர்களுக்கும் சரி, ஏன் காதலே செட்டாகாமல் இருப்பவர்களுக்கும் பிப்ரவரி 14 காதலர் தினம் என்றுமே ஸ்பெஷல் தான்.
அதிலும் பிப்ரவரி 7 முதல் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை கொண்டாடப்படும் அந்த காதலர் தின வாரம் பற்றி சொல்லவா வேண்டும். ரோஸ் டே, ப்ரபோஸ் டே, சாக்லேட் டே, டெடி டே, ப்ராமிஸ் டே, ஹக் டே, கிஸ் டே, லவ்வர்ஸ் டே என ஒவ்வொரு நாளும் ஒரு சிறப்பை குறிக்கும் வகையில் இருக்கும். அதில் காதலர் தினத்துக்கான முந்தைய நாளான இன்று முத்த தினம் கொண்டாடப்படுகிறது.
எந்த வகையான உறவிலும் சரி ஒரு அன்பின் வெளிப்பாடு என்பது முத்தம் சார்ந்து தான் உள்ளது. ஆனால் அது காதலர்கள் இடையே கொஞ்சம் அதீதமாக இருக்கும். முத்தம் உடலளவிலும், மனதளவிலும் ஒரு நெருக்கத்தை துணையிடம் உண்டாக்குகிறது என்பது பல ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. அப்படியான நிலையில் நாம் இங்கு 7 வகையான முத்தம் பற்றியும் அவற்றின் அர்த்தங்கள் பற்றியும் காணலாம்.
பிரெஞ்ச் முத்தம்: லிப் கிஸ் என்பதை விட அதையும் தாண்டி நாவினை தீண்டும் வகையில் கொடுக்கப்படும் பிரெஞ்ச் முத்தம் ஒருவர் தன் துணை மீதான அன்பின் ஆழத்தை காட்டும் வகையில் இருக்கும் என சொல்லப்படுகிறது. இது மகிழ்ச்சியாக உணரவும், உணர்வுகளை தூண்டவும் செய்கிறது. இது உடல் ரீதியாக பல நன்மைகளை தருகிறது.
கழுத்து முத்தம்: கழுத்தில் முத்தம் கொடுப்பது என்பது பாலியல் நோக்கங்களை கொண்டது. அதாவது ‘இந்த தருணம் நீ எனக்கு வேண்டும்’ என்ற அர்த்தத்திலான அன்பை பரிமாறிக் கொள்வதாகும். பொதுவாக பெண்களுக்கு இவ்வகையான முத்தம் என்பது பிடித்தமான ஒன்று என சொல்லப்படுகிறது.
காது மடல் முத்தம்: உணர்வுபூர்வமான முத்தங்களில் ஒன்றான காது மடல் முத்தம் ஒருவரின் உணர்ச்சிகளை தட்டி எழுப்பும் வகையில் அமைகிறது. தன்னுடைய பாலியல் விருப்பத்தை தெரிவிக்கவும் இது பயன்படுத்தப்படும்.
கன்னத்தில் முத்தம்: பாசத்தையும் உறவின் நெருக்கத்தையும் வெளிப்படுத்தவே கன்னத்தில் முத்தம் கொடுக்கப்படுகிறது. பொதுவாக இது எல்லா வகையான உறவிலும் இருக்கும்.
மூக்கில் முத்தம்: அழகிய முத்தங்களில் ஒன்று தான் மூக்கில் கொடுப்பது. இது மிக அரிதாக நிகழும் உணர்வுகளில் ஒன்றாகும். காதலர்களிடையே மட்டுமே இது பரிமாறப்படும்.
நெற்றி முத்தம்: பாதுகாப்பு மற்றும் பாராட்டின் வெளிப்பாடு தான் நெற்றியில் முத்தம் கொடுப்பதாகும். பொதுவாக பெரியவர்கள் குழந்தைகளை பாராட்ட இந்த வகையான முத்தத்தை வழங்குவதை பார்க்கலாம்.
கைகளில் முத்தம்: இது ஒரு உறவைத் தொடங்குவதன் ஆர்வம் காரணமாக வெளிப்படுவது ஆகும். பல்வேறு கலாச்சாரங்களின் மரியாதை மற்றும் போற்றுதலின் அடையாளமாக கைகளில் முத்தம் கொடுக்கப்படுகிறது.