பொதுவாகவே ஒரு பழமொழி உள்ளது, அது, “ ஆயிரம் வார்த்தைகளுக்கு நிகரானது ஒரு புகைப்படம்” என்பது. அதுபோல அன்பினை வெளிப்படுத்த பயன்படுத்தப்படும் ஆயிரக்கணக்கான வார்த்தைகளுக்கு இணையானது ஒரு முத்தம் எனலாம். அப்படி இருக்கும் முத்ததிற்கு ஒருநாள் கொண்டாடப்படுகிறது என்றால் அதனை பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளலாமே. 


காதலர் தின வாரத்தில் ஒவ்வொரு நாளும் கொண்டாட்டங்கள் நிறைந்த நாள் தான். அதிலும் குறிப்பாக காதலர் தினத்திற்கு முன் தினம் பிப்ரவரி 13ல் கொண்டாடப்படும் கிஸ் டே ஒரு தனிச்சிறப்பினை கொண்டுள்ளது எனலாம். ஆமாம், உங்கள் காதலுக்குரியவருக்கு கொடுத்த முதல் முத்தத்தினைப் போல் இந்த கிஸ் டே வில் கொடுக்கும் முத்தமும் நினைவில் எப்போதும் ஆட்கொண்டுவிடும். அதேபோல் இந்த தினம் காதலர்களுக்கானது மட்டுமல்ல. இது சிங்கிள்களும் கொண்டாடலாம். 


என்னதான் டெக்னாலஜி வளர்ந்தாலும், நடு ராத்திரி போன் செய்து கிஸ் கொடுத்தாலும் அல்லது எமோஜிகளை மாறி மாறி கட் காபி பேஸ்ட் செய்து அனுப்பிக் கொண்டாலும், காதலுக்குரியவரின் முகம் பார்த்து மகிழ்ச்சியுடன் ஆழ்மனதில் இருந்து கொடுக்கும் முத்தத்தை போல் வராது என 90 கிட்ஸ் சொல்வதை யார் மறுப்பார்கள். 


முத்தம் அன்பின் வெளிப்பாடு என பூசி முழுகிவிட முடியாது. எல்லா முத்தங்களும் வெறுமனே அன்பினை மட்டும் அடிப்படையாக கொண்டதாக இருக்காது. காதலுக்குரியவருக்கு தரும் முத்தத்தில், காதல், ஆசை, அக்கறையில், காமம், மகிழ்ச்சி, குதூகலம் ஏன் கண்ணீரின் வெளிப்பாடாகவும் கூட இருக்கலாம். 


அன்பிற்குரியவருக்கு கொடுக்கும் முத்தம், உடலின் எந்த பாகத்தில் முத்தம் கொடுக்கப்படுகிறது என்பதை பொறுத்து அதன் அர்த்தங்களும் நோக்கங்களும் மாறுபடுவதாக கூறப்படுகிறது. அது குறித்து இங்கே காணலாம். 


கன்னத்தில் முத்தம் : பாசம் மற்றும் நெருக்கம் அதிகம் உள்ள மனிதர்கள் தங்களின் அன்பை முத்தமாக வெளிப்படுத்தும் போது அதனை கன்னத்தில் ஒரு முத்தமாக கொடுப்பார்களாம். 


நெற்றியில் முத்தம் : நெற்றியில் கொடுக்கப்படும் முத்தம் என்பது ஒரு நபர் பாதுகாப்பாக இருப்பதைக் கூறுவதற்கான ஒரு அமைதியான வழியாம். 


கைகளில் முத்தம் : இது ஒரு உறவைத் தொடங்குவதற்கான ஆர்வத்தின் அடையாளமாம். இது பல்வேறு கலாச்சாரங்களில் மரியாதை மற்றும் போற்றுதலின் அடையாளமாக செய்யப்படுகிறது.


உதட்டு முத்தம் : இது தீவிரமான மற்றும் உணர்ச்சிமிக்க முத்தத்தின் ஒரு வடிவமாகும், இது பொதுவாக ஒருவரையொருவர் ஆழமாக  காதலிக்கும் நபர்களால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.


காது மடல் முத்தம் : இது தனது அன்பிற்குரியவரின் காமத்தினை தூண்டுவதற்குப் பயன்படுத்தப்படும் முத்தத்தின் ஒரு வடிவமாம். இது ஒரு உணர்ச்சியின் வெளிப்பாடாக கொடுக்கப்படுகிறதாம். 


கழுத்து முத்தம் : இந்த வகையான முத்தம் பொதுவாக பாலியல் நோக்கங்களுக்காக கொடுக்கப்படுகிறதாம்.  மேலும் ஒருவர் மீது ஒருவர் ஆழ்ந்த ஆர்வமாக இருக்கும் போது இவ்வகையான முத்தம் பகிர்ந்து கொள்ளப்படுகிறதாம். 


மூக்கு முத்தம் : முத்தங்களின் அழகான வடிவங்களில் ஒன்று மூக்கில் தரப்படும் முத்தம் தானாம். இது காதலில் உள்ளவர்களால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது