இட்லி மிகவும் பிரபலமான தென்னிந்திய உணவுகளில் ஒன்றாகும். தென்னிந்தியாவில் ஏராளமான இட்லி பிரியர்கள் உள்ளனர்.  குறைந்த நேரத்தில் மிக எளிதாக செய்து விட முடியும் என்பதால் இல்லத்தரசிகளின் சாய்ஸாக இது உள்ளது. இட்லி பாத்திரத்தை சுத்தம் செய்ய வேண்டும் என்பதற்காக சிலர் இட்லி செய்ய தயங்குவதுண்டு. ஏனென்றால் தட்டில் ஒட்டிக் கொள்ளும் இட்லியை சுத்தம் செய்வது சற்று கடினமானது. இனி உங்களுக்கு இந்த கவலை வேண்டாம். இட்லி தட்டை எப்படி ஈசியா சுத்தம் செய்வது என்பது குறித்து தான் இப்போது நாம் பார்க்கப் போகின்றோம். 


1. வெதுவெதுப்பான நீரில் கழுவவும்:


நீங்கள் எப்போதும் உங்கள் இட்லி தட்டை எப்போழுதும் வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். தட்டில் இருந்து இட்லிகளை எடுத்த உடனேயே, இட்லி தட்டுகளை வெதுவெதுப்பான தண்ணீரிலேயே கழுவ வேண்டும். இதைப் பயன்படுத்திய உடனேயே செய்வது நல்லது. நீண்ட நேரம் வைத்தால் தட்டுகளில் ஒட்டியுள்ள இட்லி துண்டுகள் கெட்டியாகிவிடும். வெதுவெதுப்பான ஒட்டியிலுள்ள மாவு கறைகளை தளர்த்த உதவுகிறது மற்றும் சுத்தம் செய்யும் செயல்முறையை மிகவும் எளிதாக்குகிறது. உங்களால் உடனடியாக சுத்தம் செய்ய முடியாவிட்டாலும், வெதுவெதுப்பான நீரை இட்லி தட்டுகளின் மீது ஊற்றி வைக்க மறக்க கூடாது. குளிர்ந்த நீரைப் பயன்படுத்துவதால் எஞ்சியுள்ள இட்லி கரைகள் மேலும் கெட்டியாகி விடும் .


2. பாத்திரங்களைக் கழுவும் திரவத்தைப் பயன்படுத்தவும்:


முதலில் இட்லி தட்டை பாத்திரம் துலக்கப் பயன்படுத்தும் நாரை பயன்படுத்தி துலக்கிக்கொள்ள வேண்டும். இந்த முறையில் இட்லி கரை போகவில்லை என்றால், ​​ஒரு பெரிய கொள்கலனில் வெதுவெதுப்பான நீர் மற்றும் பாத்திரங்களைக் கழுவும் திரவத்தின் சில துளிகள் நிரப்பவும். அதில் இட்லி தட்டுகளை 15-20 நிமிடங்கள் ஊறவைத்து, பின்னர் ஸ்க்ரப் செய்து, வெதுவெதுப்பான நீரில் மீண்டும் கழுவவும்.


3. வினிகர் கரைசல் தயாரிக்கவும்:


உங்கள் இட்லி தட்டுகளை சுத்தம் செய்ய வினிகரையும் பயன்படுத்தலாம். இது இட்லி தட்டில் ஒட்டியிருக்கும் இட்லி கரைகளை உடனடியாக அகற்றி விடும். ஒரு பெரிய கொள்கலனில் இரண்டு பங்கு வெதுவெதுப்பான நீரில் ஒரு பங்கு வினிகரை கலக்க வேண்டும். இப்போது உங்கள் இட்லி தட்டுகளை சிறிது நேரம் ஊறவைத்து மீண்டும் தண்ணீரில் கழுவவும். 


4. பேக்கிங் சோடா பயன்படுத்தவும்:


 பல்வேறு வகையான சமையலறை பாத்திரங்கள் மற்றும் உபகரணங்களை சுத்தம் செய்ய பேக்கிங் சோடா பயன்படுத்தப்படுகிறது. ஒரு பெரிய வாளி தண்ணீரில் 1-2 டீஸ்பூன் சேர்த்து, அதில் அனைத்து தட்டுகளையும் ஊறவைத்து, பின்னர் மென்மையான கிச்சன் ஸ்பாஞ்சைப் பயன்படுத்தி துலக்கினால் போதும் உங்கள் இட்லி தட்டுகள் சுத்தமாகி விடும்.


5. எலுமிச்சை மற்றும் தண்ணீரை பயன்படுத்தவும்:


நாம் எப்படி வினிகர் மற்றும் பேக்கிங் சோடா கரைசலை தண்ணீரில் செய்தோமோ, அதையே எலுமிச்சையிலும் செய்ய வேண்டும். வெதுவெதுப்பான நீரில் நிரப்பப்பட்ட ஒரு வாளியில் 1 அல்லது 2 எலுமிச்சை பழ  சாற்றை பிழியவும். ஊறவைத்து, துலக்கி கழுவி எடுத்தால் இட்லி தட்டுகள் சுத்தமாகி விடும்.