குளிர்காலம் தொடங்கிட்டாலே சரும பராமரிப்பில் மாற்ற செய்ய வேண்டியது அவசயம். ஆம். ஒவ்வொரு காலநிலைக்கும் ஏற்ப சரும பராமரிப்பில் கவனம் செலுத்துவது முக்கியம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 


குளிர்காலத்தில் சருமம் வறண்டுபோகும் வாய்ப்புகள் அதிகம். இதை தடுக்க நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அதோடு, சரும் பராமரிப்பில் என்ன செய்ய வேண்டும் என தோல் மருத்துவர்களின் பரிந்துரைகளை காணலாம். 


சருமம் - ஈரப்பதத்தை பாதுகாக்க..


ஒரு நாளைக்கு தேவையான தண்ணீர் குடிப்பதை உறுதி செய்வதுடன் மாய்ஸ்சரைஸர் பயன்படுத்த வேண்டும். கோடைகாலத்தைவிட குளிர்காலத்தில் சிறப்பு வாய்ந்த மாய்ஸ்சரைஸர் தேவைப்படும். க்ரீம் வகையிலான மாய்ஸ்சரைஸை தேர்வு செய்யலாம். கை, கால், முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் எண்ணெய் தேய்துவிட்டு குளிப்பதை பின்பற்றலாம். போலவே, குளித்துவிட்டு வந்ததும் எண்ணெய், லோசன், மாய்ஸ்சரைஸர் அப்ளை செய்ய வேண்டும். இதை மறந்தும் செய்யலாமல் இருந்தால் சருமம் வறண்டுவிடும். 


humidifier:


காற்றில் ஈரப்பதத்தை அதிகரிக்க உதவும் ‘humidifier’ மெசின்களை பயன்படுத்தலாம். இது சருமம் வறண்டுவிடாமல் இருக்க உதவும். 


க்ளன்சிங்:


கோடை காலத்தில் அடிக்கடி முகம் கழுவுவது பரிந்துரைக்கப்படலாம், குளிர்காலத்தில் அது தேவையில்லை. ரசாயனம் அதிகம் உள்ள ஃபேஸ்வாஷ்,. சோப் போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம். ஹைட்ரேட்டிங் க்ளன்சர்கள் கடைகளில் கிடைக்கும். அதேபோல, முகத்தில் உள்ள இயற்கையான எண்ணெயை எடுக்கும் அளவிற்கான சோப், ஃபேஸ்வாஷ் ஆகியவற்றை பயன்படுத்த வேண்டாம். குளிர்காலத்தில் குளிப்பதற்கு அதிக கெமிக்கல் இல்லாத சோப் பயன்படுத்தலாம். கெமிக்கல் அதிகம் இருந்தால் அது சருமத்தில் உள்ள எண்ணெயை முற்றிலுமாக எடுத்துவிடும். குளித்தவுடன் மாய்ஸ்சரைஸ் பயன்படுத்துவது சருமத்தின் ஈரப்பதத்தை பாதுகாக்க உதவும் என்பதை நினைவில் கொள்க.


காலை உணவை தவிர்க்க கூடாது


காலை உணவை அரசனைப் போல சாப்பிட வேண்டும் என்று சொல்வதுண்டு. நீண்ட நேர இடைவேளைக்கு பிறகு சாப்பிடும் உணவு அன்றைய நாளுக்கான ஆற்றலை வழங்கும். எந்த காரணத்திற்காகவும் காலை உணவை சாப்பிடாமல் இருக்காதீர்கள். நிறைய ஊட்டச்சத்து இருக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும்.


எண்ணெய் / துரித உணவுகளை தவிர்க்கவும்


எண்ணெயில் பொரித்த உணவுகள், பாக்கெட்களில் அடைத்து விற்கப்படும் உணவுகளை சாப்பிடுவதை குறைப்பது நல்லது. இது கல்லீரல், குடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது.


கற்றாழையும் சரும் பரமாரிப்பும்


கற்றாழை ஒரு சிறந்த மாய்ஸ்சரைசர். இதன் காரணமாகவே அழகுசாதன பொருட்களில் அதிகளவில் கற்றாழை பயன்படுத்தப்படுகிறது. சன் ஸ்கிரீன், லோசன் உள்ளிட்டவைகளில் கற்றாழை பயன்படுத்தப்படுத்தப்படுகிறது. சரும பராமரிப்பில் கற்றாழையில் முக்கியத்துவம் வாய்ந்தது. சருமத்தை ஈரப்பத்தத்துடன் வைத்துகொள்ள உதவுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றன. சிலருக்கு கற்றாழை அலர்ஜி தரக்கூடியது என்பதால் தேவையெனில் மருத்துவரை அணுகுவது நல்லது.


கோடையில் சரும பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சூரிய கதிர்களினால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கு கற்றாழை  பயன்படும். ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. கற்றாழையில் உள்ள தண்ணீர் சத்து சருமத்தின் ஈரப்பதத்தைப் பாதுகாக்கிறது.