கற்பூரவல்லி என்றவுடனேயே நமக்கு அதன் உயர்வான நறுமணம் தான் நினைவுக்கு வரும். மூலிகைகளிலேயே நறுமணம் மிகுந்தது கற்பூரவல்லி. எவ்வளவு மணம் இருக்கிறதோ அதே போல் அதிகளவு ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மருத்துவ நன்மைகள் உள்ளடக்கியது. ஆயுர்வேதத்தில் அருமருந்தாக இது பயன்படுத்தப்படுகிறது.


கற்பூரவல்லியால் என்னென்ன பயன்கள்?


* குழந்தைகளுக்கு சளி பிடித்து இருமிக் கொண்டே இருக்கிறார்கள். இருமல் மருந்தை நாடுவதற்கு முன்னர் கற்பூரவல்லி இலைச்சாற்றில் சிறிது பனங்கற்கண்டு சேர்த்துக் கொடுங்கள். இருமல் மற்றும் சளி நெரிசல் போன்றவற்றால் நெஞ்சுவலியை அனுபவிக்கும் குழந்தைகளுக்கு இது சிறந்த நிவாரணி.


* பால்குடிக்கும் பச்சைக்குழந்தைகளுக்கு சளி, இருமல் என்றால் பாலூட்டு அண்ணை கற்பூரவல்லி இலைச் சாற்றி மார்பகங்களில் காம்பில் தடவிக் கொள்ளலாம். அப்படிச் செய்தால் குழந்தை பால் அருந்தும் போது சாறு குழந்தைக்குள்ளும் செல்லும்.


* மூக்க அடைக்கிறதா, தொண்டையில் புண் இருக்கிறத? அட ஆமாம்பா ஆமா எனச் சொல்லும் நீங்கள்.. கற்பூரவல்லி சாறு அருந்துங்கள். மூக்கடைப்பு நீங்கி, தொண்டை கரகரப்பும் நீங்கி குணம் பெறுவீர்கள். கற்பூரவல்லி இலைச்சாற்றை கொதிக்கும் நீரில் சேர்த்து ஆவி பிடித்து வந்தால் நிவாரணம் விரைவாக கிடைக்கும்.


* காய்ச்சல் மற்றும் தொண்டை வலி இருக்கும் போது இதன் இலையை எண்ணெயில் பொரித்து அந்த எண்ணெயை தொண்டையில் தடவி வந்தால் நிவாரணம் கிடைக்கும்.




* ஆஸ்துமா நோய் உள்ள பெரியவர்கள் கற்பூரவல்லி இலைச்சாற்றை தேனுடன் கலந்து சாப்பிடலாம். இலையை மென்றும் சாப்பிடலாம்.


* சளி, காய்ச்சல், இருமல் தாண்டி கற்பூரவல்லியால் மூட்டுவலிக்கும் குணம் கிடைக்கும். மூட்டுவலிக்கு கற்பூரவல்லி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த நீரை குடித்து வந்தால் மூட்டுவலி படிப்படியாக குறையும். சிறுநீர் தொடர்பான பிரச்சினைகளும் இதனால் அகலும்.


* பல் சிதைவு, ஈறுகள் பிரச்சனை, வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சனைகளுக்கும் கற்பூரவல்லியை கைவைத்தியமாக பயன்படுத்தலாம். 


* வயிற்றில் இருக்கும் பூச்சிகள் வெளியேற கற்பூரவல்லி இலைச்சாறை குழந்தைகளுக்கு மாலை அல்லது அதிகாலை வேளையில் ஒரு டீஸ்பூன் அளவு கொடுக்கலாம்.


* சர்க்கரை நோயாளிகள் தவிர்க்காமல் எடுத்துக் கொள்ள வேண்டிய மூலிகை இது. கால் புண்களைக் குணப்படுத்தும். மேலும் வாயுப் பிரச்சினைகளுக்கும் இது நல்ல தீர்வு தரும்.


இத்தனை பலன் தரும் கற்பூரவல்லி வீடுகளிலேயே எளிதாக வளரக் கூடிய செடியாகும். ஒரு சிறிய தொட்டியில் கற்பூரவல்லி, துளசி, வெற்றிலை போன்ற தாவரங்களை வளர்த்தால் கைவைத்தியத்திற்கு மிகவும் உதவும். கொரோனா போன்ற கொடிய சுவாசப் பாதை நோய் தாக்கும் காலக்கட்டத்தில் இதுபோன்ற மூலிகைகளை அவ்வப்போது சேர்த்துக் கொள்வது நலம் பயக்கும்.