தை வந்தாச்சு. பொங்கல் பண்டிகை நான்கு நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது.பொங்கல் விழாவை கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். உலக அளவில் பல்வேறு வகையான அறுவடை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இயற்கையையும் உழவையும் போற்றும் திருநாள். இதில் நான்காவது நாளான காணும் பொங்கல்  கொண்டாடப்படும் முறையும் எதற்காக கொண்டாடப்படுகிறது என்பது குறித்தும் காணலாம். 


 காணும் பொங்கல்: 


பொங்கல் விழாவின் நான்காவது நாள் காணும் பொங்கல் என்றழைக்கப்படுகிறது. கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் இந்த நாள் அழைக்கப்படுகிறது.  உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களை காணுதல் குடும்பப் பெரியவர்களிடம் ஆசி பெறுதல் போன்றவைகள் காணும் பொங்கல் அன்றைக்கு நடைபெறும்/ உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் இந்தநாளில் நடைபெறும். 


கன்னிப் பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக திருமணம் ஆகாத பெண்கள் ஒரு தட்டில் பழங்கள், தேங்காய், பூஜை செய்வதற்கு தேவையான பொருட்களுடன் அருகில் இருக்கும் ஆறு அல்லது குளங்களுக்கு செல்வார்களாம். ஆற்றங்கரையில் எல்லாருமாக சேர்ந்து கும்மியடித்து பாடி இறை வழிபாடு நடத்துவார்கள் என்று சொல்லப்படுவது உண்டு. காணும் பொங்கல் அன்று சிலர் நோன்பு கடைப்பிடித்து சிறப்பு வழிபாடு செய்வதும் உண்டு. இது உடன்பிறந்தவர்களின் நலனுக்காக செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. 


காணும் பொங்கல் அன்று வீட்டில் பொங்கல் வைத்து குல தெய்வ வழிபாடு நடத்துவதையும் சிலர் பழக்கமாக கொண்டுள்ளனர்.


நல்ல நேரம்:


காணும் பொங்கல் அன்று காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை வழிபாட்டிற்கான நல்ல நேரம். 


எல்லோரது வாழ்க்கையும் பிசியாகிவிட்ட நேரத்தில் விடுமுறை, திருவிழா, பண்டிகை நாட்களில் குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக சேர்ந்து மகிழ்யோடு பண்டிகையை கொண்டாடுவர். காணும் பொங்கல் அன்று கடற்கரை, பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சென்று குடும்பத்துடன் நண்பர்களுடன் நேரம் செலவிடுவர். அன்றைய தினம் விதவிதாமான உணவுகளை சமைத்து பகிர்ந்துண்டு மகிழ்வர்.


ஹேப்பி பொங்கல் மக்களே!