சமீபகாலமாக கொரியன் நாடகங்கள், சினிமா,உணவு முறை மிகவும் பிரபலமாகி வருகிறது. இந்த நேரத்தில் கொரியன் எடை குறைப்பு உணவு மிகவும் பிரபலமாகி கொண்டு இருக்கிறது. இந்த உணவு முறை கொரியன் பாரம்பரிய உணவுகள் அதிகமாக பரிந்துரைக்கப்படுகிறது. கொரியன் உணவு முறை என்றால் என்ன ?கே பாப் உணவு முறை அல்லது K POP weight loss diet என அழைக்கப்படுகிறது. இது முழுக்க முழுக்க கொரியன் பாரம்பரிய உணவு வகையை சார்ந்தது.
இந்த உணவுமுறையின் விதிகள்: -
குறைந்த அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஊட்டச்சத்துகள் நிறைந்து இருக்கவேண்டும். அதிகளவு பழங்கள் மற்றும் காய்களை எடுத்துக்கொள்ள வேண்டும். குறைந்த கலோரி கொண்ட உணவுகளை சாப்பிடவேண்டும். அதிகளவு காய்கள், அரிசி மற்றும் முட்டைகோஸ் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
என்ன உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும்?
- காய்கள்,
- மீன், கடல் உணவுகள்,
- முட்டை, கறி
- கோதுமைக்கு பதிலாக அதிகளவு பாசிப்பயறு சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- அரிசி
என்ன உணவுகளை தவிர்க்க வேண்டும் ?
- பால் மற்றும் பால் பொருள்கள்
- ஐஸ் கிரீம்
- பிரட், பாஸ்தா, கோதுமை,
- எண்ணையில் பொறித்த வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
- அதிக நேரம் வறுத்த உணவுகள், கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள்
- குளிர்பானங்கள், சோடா, பேக்கரி உணவுகள்
- செயற்கை சர்க்கரை
எடைகுறைவது சாத்தியமா ?
இந்த உணவு முறையை பின்பற்றும் போது கட்டாயம் எடை குறையும். ஊட்டச்சத்து மிக்கது, எளிதாக அனைவராலும் பின்பற்றக்கூடியது. மேலும் இந்த மாதிரி உணவு முறைகளை வாழ்வியல் முறையாக பின்பற்றலாம்.
பொதுவாக கொரியன் உணவு முறை காய்கள் நிறைந்து. ஒரு முழு சாப்பாடு எடுத்து கொண்டால் கூட, அதில் அதிகளவு காய்கள் நிறைந்து இருக்கும். குறைந்த கலோரி கொண்ட உணவை எடுத்து கொள்வது அவசியம். இது உடல் எடை குறைக்க முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த கொரியன் உணவு முறை உடல்நலம் மற்றும் மனநலத்திற்கு நல்லது. ஊட்டச்சத்துகள் நிறைந்த இந்த உணவு முறை தொடர்ந்து பின்பற்றுவதால்,உடல் எடை குறையும், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். உடலில் கொலெஸ்டெரோல் அளவு குறையும்.
சமீபத்தில் பிரபலமானாலும், மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது. உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் இதையும் முயற்சி செய்து பாருங்களேன்