தேவையான பொருட்கள்
300 கிராம் பலாக்காய், ஒன்றரை டம்ளர் அரிசி, இரண்டு பெரிய வெங்காயம், இரண்டு பெரிய தக்காளி, 2 பச்சை மிளகாய், 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 2 ஸ்பூன் கெட்டி தயிர், அரை எலுமிச்சம்பழம், ஒரு குழி கரண்டி சமையல் எண்ணெய், நாலு ஸ்பூன் நெய், ஒரு பட்டை, இரண்டு ஏலக்காய், மூன்று கிராம்பு, ஒரு அன்னாசிப்பூ, 1 பிரியாணி இலை, ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள், 1/2 ஸ்பூன் பிரியாணி மசாலா, கால் ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு கைப்பிடி புதினா, சிறிது கொத்தமல்லி இலை, தேவையான உப்பு, தண்ணீர் தேவையான அளவு.
செய்முறை
பலாக்காயை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். இஞ்சி,பூண்டு அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும். அடுப்பில் குக்கரை வைத்து சமையல் எண்ணெயை ஊற்றி நெய் 2 ஸ்பூன் ஊற்றி ,பட்டை, கிராம்பு ,ஏலக்காய் ,பிரியாணி இலை சேர்க்க வேண்டும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை 2 நிமிடம் வதக்க வேண்டும். பின் தக்காளியை சேர்த்து நன்கு வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள பலாக்காயை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும். பிறகு பிரியாணி மசாலா, மிளகாய் தூள்,மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி விட்டு அரை டம்ளர் தண்ணீர் விட்டு குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.
குக்கரில் அழுத்தம் போனதும் மூடியைத் திறந்து அடுப்பில் வைத்து தயிர் சேர்த்து கிளறிவிட்டு அரிசியை போட்டு ஒரு நிமிடத்திற்கு கிளறிவிடவும். பிறகு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கைப்பிடி புதினா கொத்தமல்லி இலை கொஞ்சம் சேர்த்து கிளறி விட்டு எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து விட்டு, கொதி வந்ததும் குக்கரை மூடி அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும். 15 நிமிடங்களுக்கு பிறகு
பிறகு குக்கரின் விசில் அடங்கியதும் மூடியைத் திறந்து கிளறிவிட்டு, மீண்டும் 10 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து தம் போட வேண்டும்.
பிறகு அடுப்பை அணைத்து விட்டு, விசில் அடங்கியதும் குக்கரைத் திறந்து, 2 ஸ்பூன் நெய்யை ஊற்றி லேசாக கிளறி விட்டு இறக்கினால் பலாக்காய் பிரியாணி தயார்.