’சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் கடுஞ்சொற்களைப் பயன்படுத்துவார்கள்.’, சிலருக்கு பிறரிடம் எப்படி பேசுவதென்று தெரியாது.’, இப்படியான மனிதர்களை நாம் சந்தித்திருப்போம் இல்லையா. மும்கோபம் ஒருவித மனச்சிதைவின் வெளிபாடு என்கிறது மருத்துவ உலகம். இப்படியிருக்க, ஒருவருக்கு மற்றவர்களிடம் பேசுவதற்கோ, ஓர் உரையாடலை தொடங்குவதற்கு தயக்கம் இருந்தால், அந்த நபர் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்று அர்த்தம். ஏதோவொரு நிகழ்வால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார். ‘ நீங்கள் பிறரை காதலிப்பதற்கு முன், உங்களை அளவில்லாமல் நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள்.” என்று சொல்வார்கள். உங்களை நீங்கள் நேசிக்க தொடங்கும் நேரத்தில்தான் சுற்றி உள்ளவர்கள் மீதும் அன்பு செலுத்த முடியும். அதாவது, உங்களுக்காக கொடுதற்கே அன்பு இல்லையென்ற நிலையில், பிறருக்கு உங்களால் எப்படி நேசத்தை வழங்கிட முடியும். ஒருவர் வேதனையில் உழன்றுக்கொண்டிருக்கும்போது பிறருக்கு நேசத்தினை வழங்கிட முடியாது; குறுகிய உரையாடல் நிகழ்த்துவது கூட கடினமானதாக இருக்கும். மன உளைச்சலில் இருப்பவர்களுக்கு உறவுகளைப் பேணுவதில் சிக்கல் ஏற்படுமா என்று கேட்டால், ‘ஆம்’. என்பதுதான் பதில்.
உறவுகளை பேணுவதில் மனநலனின் முக்கியத்தும் என்ன?
உறவுகளை தொடங்குவதில் இருந்து, அதன் அடுத்தடுத்த நகர்வுகளை மேற்கொள்ள நம் மனம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். மன ஆரோக்கியம் என்பது, ஒருவர் தன் வாழ்வை நிகழ் காலத்தில் வாழ்வது. கடந்த காலத்தில் சிக்கிக்கொள்ளாமல், எதிர்காலம் குறித்த அச்சத்தில் மூழ்காமல் இருப்பதாகும். ஆனால், பெரும்பாலானோர் இன்று மன உளைச்சல், மன சிதைவு உள்ளிட்டவைகளால் பாதிக்கப்படுகின்றனர். இப்படியான சூழலில் உறவுகளுக்குள் சிக்கலை ஏற்படுத்தும்.
நம் மனதின் தேவையை உணராமல் இருப்பது, கோபம், ஏமாற்றம், அதிர்ச்சி, சோகம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தாமல் இருப்பது ஆகியவை ஒருநாள் உங்களை எரிமலைபோல வெடிக்கச் செய்யும். எந்த உணர்வுகளையும் மனதிற்குள் தேங்காவிட்டால், அது தரும். அழுத்தம் தாங்க முடியாததாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இப்படியான நிலையில் மற்றவர்களுடன் பேசுவது என்பது நிச்சயம் எளிதாகவோ, பிரச்சனை இல்லாமலோ இருக்காது.
நிபுணர்கள் சொல்வது என்ன?
மன உளைச்சலால் பாதிக்கப்பட்டால் அதிலிருந்து விடுபட மனநல மருத்துவர்களை அணுகுவது நல்லது.
நமது மனநலம் மோசமாக இருக்கும்போது, சமூக தொடர்புகளில் இருந்து விலகவே விரும்புவோம். காரணமின்றி எரிச்சல் உணர்வு அதிகரிக்கும்; ஒரு செயலை செய்வதில் சிரமம் ஏற்படலாம்; இதன் விளைவாக நமது உறவுகள் பாதிக்கப்படலாம். புதிய உறவுகளை உருவாக்குவதில் சிக்கல் இருக்கலாம் அல்லது ஏற்கனவே உள்ள உறவுகளில் பிரச்சினைகள் அதிகரிக்கும். என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.
”நமது உடல் ஆரோக்கியத்தைப் போலவே நமது மனநலமும் முக்கியமானது என்பதை நினைவில் கொள்வது அவசியம். ஒருவரின் மனநிலை சமநிலையற்றதாக இருக்கும்போது, அது அவரை சுற்றி இருப்பவர்களின் வாழ்விலும் விளைவை ஏற்படுத்தும். நாம் மனநலப் பிரச்சினைகளைக் கையாளும்போது, ஒரு தகுதி வாய்ந்த நிபுணரிடம் உதவி பெறுவது முக்கியம். முறையான சிகிச்சையின் மூலம், நமது மன ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நமது உறவுகளை வலுப்படுத்த முடியும்" என்கிரார். உளவியல் நிபுணர்.
இப்பூமியில் இருக்கும் உயிர்களுக்கும் அடிப்படை கடமை என்றிருக்கிறது. அதிலும் குறிப்பாக, மனிதன் செய்ய வேண்டிய தலையாய கடமை- மகிச்சியாக இருப்பது. எப்போதும் மகிழ்ச்சியுடன் இருங்கள். மகிச்சியாக இருப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.