பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் பத்து நாட்களுக்கு முன்பாக மார்பகங்களில் ஏற்படும் வலி அதிகமானாலோ அல்லது அதிலிருந்து திரவம் வெளியேறினாலோ அல்லது கட்டி போன்று இருந்தாலோ நீங்கள் மருத்துவரை பார்க்க வேண்டும்.
  மார்பகங்களில் வீக்கம் வலி தசை பிடிப்பு போன்றவை ஏற்படுவது மாதவிடாய் வருவதற்கான அறிகுறிகள் ஆகும். மேலும் மார்பகங்கள் இந்த நேரத்தில் மிகவும் மென்மையாக மாறிவிடுவதினால் புண்ணாகி போகிறது. மாதவிடாய் காலங்களில் பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் மார்பக காம்புகளின் வளர்ச்சியை தூண்டி ஒரு வித வலியை உண்டாக்குகிறது. ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஆகியவை மார்பகங்களுக்குள் வளர்ச்சியை உண்டு பண்ணுவதால் மார்பகங்கள் கனமாகி வலியை உணர்த்துகின்றன. ஒவ்வொரு மாதமும் இந்த வலி மிகக் கடுமையாக இல்லாதவரை ஒன்றும் பிரச்சனை இல்லை. அப்படி இல்லாமல் திடீரென்று மார்பகங்களில் இருந்து திரவம் கசிந்தாலோ அல்லது அதிகப்படியான வலி இருந்தாலும் அல்லது கட்டி போன்று ஏதாவது இருந்தாலும் நீங்கள் மருத்துவரை கலந்தாலோசிப்பது மிக முக்கியமானதாகும்.


ஈஸ்ட்ரோஜனின் அதிகரித்து  மார்பக குழாய்களை பெரிதாக்குகிறது. மேலும் புரோஜெஸ்ட்டிரோன் அளவு உயரும் போது பால் சுரப்பிகள் பெரிதாகின்றன. அவை ஒன்றாக சேர்ந்து, உங்கள் மார்பகத்தை புண்படுத்தும். ஆகையால் இந்த நேரத்தில் இத்தகைய வலிகளை சரி செய்ய,நீர்ச்சத்து நிறைந்த பழங்களையும்  மற்றும் பழச்சாறுகளையும் உண்ணுங்கள்.


நன்கு சமநிலையான உணவை உண்ணுங்கள்.


மாதவிடாய் காலங்களில் அதிக கொழுப்புள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதை தவிருங்கள். மாதவிடாய் ஆரம்பமாகும் 10 நாட்களுக்கு முன்பு இருந்தே உணவில் உப்பு சேர்ப்பதை குறைத்துக் கொள்ளுங்கள்.


உங்கள் மார்பக அளவிற்கு ஏற்றமாதிரி சரியான பிராவை தேர்ந்தெடுத்து அணியுங்கள். விட்டமின் ஈ ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள்.


ஆரோக்கியமான உடல் எடையை பராமரியுங்கள், ஊட்டச்சத்துக்கள் மிக்க உணவுகளை உண்ணுங்கள்.
மாதந்தோறும் மார்பக சுய பரிசோதனை செய்து கொள்வது நல்லது. 


பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள்  நிறைந்த உணவை பாதிக்கப்பட்ட பெண்கள் உண்ண வேண்டும் . உப்பு, சர்க்கரை, ஆல்கஹால் மற்றும் காபியை உட்கொள்வதை குறைத்து விடுங்கள்.புகைபிடிப்பதை தவிர்க்கவும். ஃபோலிக் அமிலம், கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் பி6, கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவற்றைக் கொண்ட உணவுகளை  நீங்கள் எடுத்துக் கொள்ளலாம், இது கனத்தையும் வலியையும் குறைப்பதோடு உங்கள் படபடப்பை குறைத்து மனநிலையை சீராக்கும்.


பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலியை போக்க சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுக்கலாம். இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து மார்பக வலியை குறைக்கும்.


ஒரு துணியில் ஐஸ் கட்டிகளை கட்டி அதை மார்பகத்தில் வைத்து 20 நிமிடங்கள் ஒத்தடம் கொடுங்கள்.


விளக்கெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய்யை மார்பகத்தில் தடவி மசாஜ் செய்து வரலாம். இதுவும் வலியை குறைக்க உதவி செய்யும்.


மாதவிடாய் காலங்களில் வாழைப்பழத்தை சாப்பிடுவது உங்க மார்பக வலியை போக்க உதவியாக இருக்கும். இதற்கு காரணம் இதிலுள்ள பொட்டாசியம் சத்து இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது.



நன்றாக தூங்குங்கள்.


மாதவிடாய்க்கு முன்பு ஏற்படும் வலி நிறைந்த இந்த காலகட்டத்தில்   ஏழு முதல் ஒன்பது மணி நேரம் தூங்குவது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும்,உங்கள் மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.



சரியான அளவில் உடற்பயிற்சி செய்யுங்கள். 


மாதவிடாய்க்கு முன்பு பத்து நாட்கள், மார்பு கனமாவது, அதிகப்படியாக மென்மையாவது,அதிகப்படியான வலி மற்றும் மார்பகத்தில் இருந்து திரவம் கசிவது மற்றும் மார்பக புண் ஆகிய பிரச்சினைகளால் பாதிக்கப்படும் மகளிர்,தினமும் ஆக குறைந்தது அரை மணி நேரமாவது உடற்பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும். இதனால் உடல் ஆரோக்கியத்தோடு இருப்பது மட்டுமல்லாமல் மாதவிடாய் சார்ந்த அனைத்து பிரச்சனைகளும் சரி செய்யப்படுகிறது.