ப்பா..என்னா வெயிலு! என்று சொல்லிக்கொண்டே வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பியதும், ஃபிரிட்ஜை திறந்து ஐஸ் வாட்டரை  மடக்..மடக்கென்று அருந்துபவர்களா நீங்கள்? ஃபிரிட்ஜில் ஐஸ் வாட்டர் வைக்க மறந்துவிட்டதால், ஐஸ் கட்டிகளை தண்ணீரில் போட்டு குடிப்பவரா?


குளு குளு ஐஸ் வாட்டர் குடித்ததும் ஆஹா என்று உணர்பவர்களின் கவனத்திற்கு…


சுட்டெரிக்கும் வெயிலில் வெளியில் போயிட்டுவந்து வீட்டிற்கு வந்தால் நம் கை பிரிட்ஜில் உள்ள ஐஸ் வாட்டரைத்தான் தேடும்.


வெயிலுக்கு குளிர்ந்த நீரைக் குடிப்பதால் வெயிலின் களைப்பு சட்டென காணாமல் போவதோடு, குளு குளு என்றொரு உணர்வும் இருக்கும். ஆனால், ஐஸ் வாட்டர் குடிப்பதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக மருத்துவர் எச்சரிக்கிறரர்கள்.


உணவு சாப்பிட்டவுடன் குளிர்ச்சியான தண்ணீரோ, குளிர்பானமோ குடிப்பவர்களுக்கு இதய, சிறுநீரக பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஐஸ் வாட்டர் குடிப்பதால், 0உணவில் உள்ள எண்ணெய் துகள்கள், கொழுப்புகள் கெட்டியாகி ரத்த நாளங்களில் படிய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர்.


தெர்டர்ந்து ஐஸ் வாட்டரை குடிப்பது புற்றுநோய்க்கும் வழி வகுக்கும்.


செரிமான கோளாறு:


ஐஸ்  வாட்டர் குடிப்பதால் உடல் வெப்பநிலையில் ஏற்படும் பாதிப்பால் செரிமான மணடலம் சீராக வேலைச் செய்தில் சிக்கல் ஏற்படும். செரிமானம் சீராக இல்லை என்றாலே மலச்சிக்கல் தானாக உண்டாகும்.


தொண்டை கரகரப்பு :


குளுர்ச்சியாக ஃபிரிட்ஜில் இருந்து தண்ணீரை அப்படியே குடிப்பதால் தொண்டை வலி, கரகரப்பு, வீக்கம் உண்டாகும். மூக்கடைப்பு ஏற்படும். சிலருகு சளி தொல்லை ஏற்படும்.


உடல் பருமன் :


உணவு சாப்பிட்ட பின், குளுர்ச்சியான நீரைக்குடிப்பதால் உணவில் உள்ள கொழுப்புகளை உடல் பிரிப்பதற்கு முன்பாகவே அவை குளுர்ச்சியால் திடமாக மாறிவிடும். பின் அவை உடலிலேயே தங்கி கெட்ட கொழுப்புகளாக சேர்ந்துவிடுகிறது. இதனால், உடல் பருமன் அதிகரிக்கிறது.


இதய பாதிப்பு :


மிகவும் குளுர்ச்சியான நீரைக் குடிப்பதால் அவை இதயத்திற்குச் செல்லும் நரம்பு மண்டலங்களை பாதித்து இதயத் துடிப்பை குறைக்கிறது என்பது பல்வேறு ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.


ஐஸ் வாட்டர் குடித்த கொஞ்ச நேரத்தில் மீண்டும் தண்ணீர் தாகம் ஏற்படும். இதற்குக் காரணம் உடல் சூட்டை தணிக்க நீரை அதிகமாக உறிஞ்சி நீர்ப்பற்றாக்குறையை உண்டாக்கும்.


உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம்.வெயிலுக்கு குளூ குளூ தண்ணீர் ஜில்லுன்னு இருக்கும். ஆனால், அதனால் ஏற்படும் பின்விளைவுகள் ஆபத்தானவை. இதற்கு மாற்றாக, பானைகளில் தண்ணீர் வைத்து அதைப் பருகலாம். இப்போது, மண் பானை பாட்டில்கள், மண் குடுவை உள்ளிட்டவை சந்தைகளில் கிடைக்கின்றது. பானைதான் வாங்க வேண்டும் என்றில்லை. மண்ணால் தாயாரிக்கப்பட்ட கொள்கலனில் தண்ணீர் வைத்து குடிப்பதால் உடலுக்கும் குளிர்ச்சி. தாகமும் தீரும். குறிப்பாக, இதனால் உடல்நலனுக்கு எவ்வித பாதிப்புகளும் இல்லை.


கோடைக்காலம் மட்டுமல்ல, எப்போதும் உடலுக்குத் தேவையான அளவு தினமும் தண்ணீர் குடிக்க தவறாதீர்கள். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண