சிறுசிறு பொருட்கள் பரபரப்பாக விற்பனையாகும் திநகர் சாலையில் கடை வைத்திருக்கும் உமாவை பெரும்பாலும் யாருக்கும் தெரியாது. ஆனால் விஐபிக்கள் கூட இப்படிப் பேச முடியாது என்னும் ரகமாக கேட்கும் கேள்விகளுக்கு நறுக் கென்று பதில் அளிக்கிறார் அவர். தனது அப்பா நடத்தி வந்த ‘வளையல் மணி அணிகலன்கள்’ கடையை தற்போது கொரோனா காலத்துக்குப் பிறகு தான் ஏற்று நடத்தி வருகிறார். அவரிடம் பிகைண்ட்வுட்ஸ் சில கேள்விகளை கேட்டது. அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கான பதில்களும்... 


உமா: நாம வாழ நினைச்சா லட்சம் ரூபாய் இருந்தாதான் வாழ முடியும்னு இல்லை. பத்தாயிரம் இருந்தாலும் வாழலாம். அதிக பட்சம் என்னுடைய கடையில் இருக்கும் பொருட்களின் விலை 100 ரூபாய்தான் எவ்வளவு ரூபாய்க்கு விற்றாலும் 10 ரூபாய்தான் லாபம் கிடைக்கும். இந்த பிழைப்பில் பெரிய லாபம் இல்லை. சரியாக வியாபாரம் செய்தால் அதிக பட்சம் ஒருநாளைக்கு 500 ரூபாய் வரை கிடைக்கும். சில நாட்களில் அதுவும் இருக்காது. 


நிருபர்:  இந்த வருமானத்தை வைத்து குடும்பம் நடத்த முடியுதா? 



உமா: இதை வைத்துதான் நடத்துகிறோம்.வேற வழியில்லையே!


நிருபர்: மாதச் செலவு எவ்வளவு? 


உமா: 15000 முதல் 20000 வரை செலவாகும். தேவையானதை மட்டும் சாப்பிட்டு, தேவைப்பட்டதுக்கு மட்டும் செலவழித்து வந்தால் 15000 ரூபாயே போதுமானது மற்றபடி 20000 ரூபாய் இருந்தால் செழிப்பாகவே வாழலாம். 




நிருபர்: இது எதற்கெல்லாம் செலவாகும்?


உமா: வீட்டு வாடகை, உணவு, மருந்து, பசங்களுக்கான ஸ்நாக்ஸ், சொந்தக்காரர்களுடைய வீட்டு விசேஷம் இப்படி எல்லாத்துக்கும் இந்த வருமானம் சரியா இருக்கும். பசங்க மெட்ரிகுலேஷன் படிக்கிறாங்க.அதற்கு ஃபீஸ் கட்ட சேர்த்து வைக்கனும். இதுபோக மாசம் ஆயிரம் ரூபாயாவது வருமானத்துல சேர்த்து வைக்கனும். அவசரத் தேவைக்கு உபயோகமா இருக்கும். 


நிருபர்: லட்ச ரூபாய் வாங்கினாலும் பத்துறது இல்லைனு சிலர் சொல்லும்போது அதைக் கேட்க எப்படி இருக்கு?


உமா: அடிக்கடி வெளிய சாப்பிடுறது, டிரெஸ் நிறைய எடுக்கறது. அல்லது ஓவ்வொரு விஷேசத்துக்கும் வீட்டில் புதுத்துணி எடுப்பது, நிறைய வெளியூர் போறது, இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு தேவைகள் இருக்கும். அந்த சூழலில் பணப்பற்றாக்குறை இருக்கும்தான். 


நிருபர்: 15000 இருந்தாலும் சந்தோஷமான வாழ்க்கையை வாழமுடியும்னு சொல்லறிங்க?


உமா: நாங்களாம் வாழ்ந்துட்டுதானே இருக்கோம்.


நிருபர்: ஆடம்பரமான வாழ்க்கையை பற்றி என்ன நினைக்கறிங்க?


உமா: எங்கள மாதிரி இருக்கறவங்களுக்கு அது தேவை இல்லைனுதான் தோனும்.ஆனா ஐ.டி துறையில் இருப்பவர்களுக்கு எல்லாம் அதுதான் வாழ்க்கை. 


நிருபர்: லாக்டவுன் காலத்துல எதெல்லாம் சிரமமா இருந்தது?


உமா: எல்லாமே சிரமம் தான் ஆயிரம் அல்லது இரண்டாயிரம்தான் மாசத்துக்கே செலவழிச்சுருப்போம்


நிருபர்: அதிகபட்சமா எவ்வளவு செலவழிச்சுருப்பிங்க? 


உமா: 3000 ரூபாய்.