Bookings.com நடத்திய ஆய்வின் படி சீனர்களை பின்னுக்குத் தள்ளி இந்தியர்கள் முன்னிலை வகிக்கின்றனர். ஆசியாவிலேயே இந்தியர்கள் தான் முதலிடம் வகிக்கின்றனர்.
மிகவும் பிரபலமான டிஜிட்டல் சுற்றுலா பயணத் தளமான Bookings.com நடத்திய ஆய்வில் சீனர்களை பின்னுக்குத் தள்ளி இந்தியர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். Bookings.com நடத்திய ஆய்வில், கொரோனா பெரும் தொற்று பரவலுக்குப் பிறகு, உலகின் பல இடங்களுக்குச் சென்று அந்த இடத்தினைப் பற்றி ஆராய்ச்சியில் ஈடுபடுவதில் இந்தியர்கள் பெரும் ஈடுபாடு கொண்டவர்களாக உள்ளனர். இந்த ஆய்வின் APAC குறியீட்டின் படி, இந்தியர்கள் தங்களுக்குப் பிடித்த இடங்களுக்குச் செல்ல மிகவும் ஆர்வமாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு ஒருவர் உலகம் முழுவதும் பயணித்து ஆராய்வதில் எந்த அளவிற்கு ஆர்வமாக உள்ளனர் என்பதை மையமாக கொண்டதாக உள்ளது. இதில், பயணிகளின் சௌகரியம் மற்றும் அசௌகரியங்கள், பயணம் செய்ய மிகவும் ஆவலைத் தூண்டும் விதமாக இருப்பவர்கள் யார் என்பதையும் மைய்யமாக கொண்டிருந்தது. இந்த ஆய்வின் படி, தரவரிசைப் படுத்தப்பட்ட நாடுகளின் பட்டியலில், இந்தியா முதலிடத்திலும், வியட்நாமிய மற்றும் சீன நாடுகள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
இந்த ஆய்வின் முடிவினைப் பற்றி, APAC Booking.com இன் வணிக இயக்குனர் ரிது மெஹ்ரோத்ரா கூறியுள்ளதாவது,Booking.com இன் APAC பயண நம்பிக்கைக் குறியீட்டில் இந்தியா முதலிடத்தில் இருப்பதைப் பார்ப்பது உற்சாகமாக இருக்கிறது. இந்த ஆய்வின் முடிவுகள் இந்திய பயணிகளின் பயணத்தின் மீதான ஆர்வத்தையும், உலகை மீண்டும் ஒருமுறை ஆராய்வதற்கான ஆயத்தத்தையும் எடுத்துக்காட்டுகின்றன" என்று கூறினார்.
COVID-19 கட்டுப்பாடுகள் மற்றும் தொற்றுநோய்க்குப் பிறகு உலகம் ஏற்பட்ட நடத்தை மாற்றங்கள் இருந்தபோதிலும், 86 சதவீத இந்தியப் பயணிகள் அடுத்த 12 மாதங்களில் பயணம் செய்ய விரும்புகிறார்கள் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. மொத்த எண்ணிக்கையில், இந்தியப் பயணிகளில் 70 சதவீதம் பேர் பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தங்களது பயணம் தடைபடலாம் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர். 78 சதவீதம் பேர் ஒட்டுமொத்த உடல்நலம் மற்றும் பாதுகாப்பை மனதில் வைத்து ஓய்வு மிகவும் முக்கியமானது என்று வாதிட்டுள்ளனர். ஆசிய-பசிபிக் பிராந்தியங்களில் உள்ள 11 நாடுகளைச் சேர்ந்த 11,000 பயணிகளை ஆய்வுக்கு உட்படுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டுருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்