ஆண் மற்றும் பெண் யாராக இருந்தாலும் மன அழுத்தத்தினால் பாதிக்கப்படும்போது அவர்களின் செக்ஸ் வாழ்க்கையில் மிகப்பெரிய பிரச்சனையை சந்திக்க நேரிடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


 இன்றைக்கு வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கேற்ப தங்களது வேலையில் நிலைத்து நிற்கவேண்டும் என 24 மணிநேரமும் பணிபுரிய வேண்டிய சூழலுக்கு மக்கள் தள்ளப்பட்டு விட்டார்கள். குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் தங்களது வேலையைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என நிறுவனம் என்ன வேலை கூறினாலும் தட்டாமல் செய்து வருகின்றனர்.


இதனால் செக்ஸ் வாழ்வில் பல்வேறு பிரச்சனைகளை மக்கள் சந்திக்க நேரிட்டது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதோடு இதுகுறித்து யாரும் வெளிப்படையாகப் பேசாத காரணத்தினால் பலரும் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர் எனவும் கூறுகின்றனர்.



பொதுவாக  மூளையின் பிடியூட்டரி கிளாண்ட் என்ற பகுதியில் இருந்து உடலின் பல்வேறு பாகங்களுக்கான ஹார்மோன்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன என்றும், இது தனது நிலையை மாற்றிக்கொண்டு உடலில் செரோடினின் அளவை குறைப்பதோடு, கோர்டிசோல் அளவை அதிகரிப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.


இந்த கோர்டிசோல் அளவு அதிகரிக்கும்போது உடலில் செக்ஸ் உணர்வுக்கான ஹார்மோன் உற்பத்தி குறைகிறது. எனவே ஆண் மற்றும் பெண் என இருவருமே மன அழுத்தத்தினால் பாதிக்கப்படும் போது அவர்களது உடலிலும், மனதிலும் இந்த பாதிப்பு ஏற்படும். எனவே செக்ஸ் வாழ்க்கையில் எவ்விதப் பிரச்சனையும் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் முதலில் மன அழுத்தத்தை நீங்கள் குறைக்க முயல வேண்டும். ஆனால் இதுகுறித்து யாரும் வெளிப்படையாகப் பேச மாட்டோம். எனவே செக்ஸ் வாழ்க்கையில் எவ்வித பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க இந்த வழிமுறைகள் கொஞ்சம் பின்பற்ற முயலுங்கள்..


மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிமுறைகள்:


மன அழுத்தத்தைக் குறைக்க முதலில் நம் உடலை மகிழ்ச்சியாக வைத்திருக்கக் கூடிய செயல்பாடுகளை மேற்கொள்வது அவசியம். இதன் மூலமாக உடலில் பாலுணர்வுக்கு அடிப்படையான செரோடினின் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கும். இதற்கு சரியான நேரத்தில் சாப்பிடுவது, நன்றாக தூங்குவது, போதிய அளவிற்கு தண்ணீர் அருந்துவது போன்ற நடவடிக்கைகள் மூலமாக செரோடினின் அளவை அதிகரிக்க முடியும்.


இதோடு உங்களுக்குப் பிடித்தமான உணவுகளைச் சாப்பிடுவது அல்லது நண்பர்களைச் சந்திப்பது, புத்தகம் வாசிப்பது போன்ற பழக்கங்கள் மூலமாகவும் மன அழுத்தத்தைக் குறைக்க முயற்சி செய்யவேண்டும்.



குறிப்பாக ஆண்கள், பெண்கள் மது அருந்துவது மற்றும் புகைப்பிடிப்பது ஆகிய கெட்ட பழக்க வழக்கங்களைக் குறைப்பதன் மூலமாக மன அழுத்தத்தைக் குறைக்க முயலும்.  மேலும் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகம் உட்கொள்வதன் மூலமாகவும் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் எனக்கூறப்படுகிறது. ஆனால் டிரான்ஸ் ஃபேட் கொழுப்பு வகைகள், நிறையூட்டப்பட்ட சர்க்கரை போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.


பாலியல் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 12-ஆம் தேதி செக்ஸ் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கிய நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.