நம் வீட்டு அஞ்சறை பெட்டியில் உள்ளவைகள் நம் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் திறன் கொண்டவை. நம் வீடுகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் பல காய்கறிகள் மற்றும் மூலிகைகள் நோய்களைக் குணப்படுத்தும் திறன் கொண்டவை என்பது அவ்வளவு உண்மை. சளி, இருமல் இருந்தால் இஞ்சியை தேனுடன் சாப்பிடலாம். மஞ்சள்,மிளகு சேர்த்து பால் குடிக்கலாம்.


இது தொண்டையை எளிதில் குணப்படுத்துகிறது மற்றும் தொண்டை கரகரப்பு, எரிச்சலில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது. நாம் அனைவரும் வீட்டில் வைத்திருக்கும் அத்தகைய அடிப்படை மசாலாப் பொருட்களில் ஒன்று மஞ்சள். மஞ்சளின் முக்கியத்துவம் அனைவரும் அறிந்ததுதான்.  சளி தொல்லை நீக்க மஞ்சள் பால் குடித்திருப்போம். காயங்கள் ஏற்படும்போதும் அது மேலும் அதிகரிக்காமல் இருக்க, காயம்பட்ட இடத்தில் மஞ்சள் வைப்போம்,  அது பயனுள்ளதாக இருந்தது. ஆனால் எடை இழப்புக்கு மஞ்சள் எப்படி உதவும்னு யோசிக்கிறீங்களா?






மஞ்சள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது; இன்சுலின் அதிகரிப்பதை கட்டுப்படுத்துகிறது. எனவே கொழுப்புகள் உடலில் தக்கவைக்கப்படுவதில்லை. பருமனானவர்கள் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்கள் மஞ்சள் சாப்பாடில் எடுத்துக்கொள்வதால்  நிறைய நன்மை பெறலாம் என்று கூறப்படுகிறது.  கெட்ட கொழுப்புகள் குறைக்க மஞ்சள் பயன்படும். 


மஞ்சள் மற்றும் இலவங்கப்பட்டை தேநீர் தினமும் குடிக்கலாம். புதினா இலைகளையும் அதோடு சேர்க்கலாம். இலவங்கப்பட்டை இன்சுலின் சுரப்பை கட்டுக்குள் வைக்கும். மற்றும் புதினா செரிமான மண்டலத்தை சீராக இயங்க உதவுகிறது.


 உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இஞ்சி மஞ்சள் தேநீர் குடிக்கலாம்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண