பாதுகாப்பான உடலுறவு உங்களை எதிர்பாராத கருவுருதலில் இருந்து காப்பாற்றுவது மட்டுமல்லாமல், பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றிலிருந்து (STI) உங்களைப் பாதுகாக்கிறது. பின்விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் உடலுறவு கொள்ள பாதுகாப்பு உறைகளை அணிவது மிகவும் வசதியான கருத்தடை முறையாகும். இருப்பினும், பெரும்பான்மையான பெண்கள், தங்கள் துணைகள் இதுபோன்ற முக்கியத் தருணங்களில் இதுபோன்று ஆணுறைகளைப் பயன்படுத்த மறுக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். பொறுப்பேற்று பெண்களுக்கான தனித்துவமான பாதுகாப்பு உறையை சந்தைபடுத்துவதற்கான தருணம் இது என்பதை சந்தைபடுத்துபவர்கள் அறிய வேண்டும். பெண்களுக்கான பிரத்யேகப் பெண்ணுறையை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் அதை சரியாக அகற்றுவது எப்படி என்பதை இங்கே காணலாம். 


பெண்ணுறை அல்லது பெண்களுக்கான பாதுகாப்பு உறையை எவ்வாறு பயன்படுத்துவது?



ஸ்டெப் 1: பாக்கெட்டைத் திறப்பதற்கு முன், உங்கள் கரங்களை நன்கு கழுவவும். கிருமிகள் அதனை அண்டாது இது பாதுகாக்கும்.


ஸ்டெப் 2: உங்களுக்கு வறண்ட பிறப்புறுப்பு இருந்தால், உராய்வைக் குறைக்க பெண்களுக்கான பாதுகாப்பு உறையின் வெளிப்புறத்தில் லூப்களை உபயோகிப்பது பரிந்துரைக்கப்படுகிறது.


ஸ்டெப் 3: மாதவிடாய் காலத்தில் உபயோகிக்கும் மென்ஸ்சுரல் கப்களைச் செருகுவது போல அரைக்காலில் அமர்ந்த நிலையில் இதனைச் செருக வேண்டும்.


ஸ்டெப் 4: உங்கள் பிறப்புறுப்புக்குள் உள் வளையத்தை சற்று திருகிய நிலையில்  உள்ளே நுழைக்கவும். நுழைத்த பின்பு அதனை உங்களது நீளமான விரலால் செருகவும். தொடர்ந்து உள்ளே அழுத்த அழுத்த பெண்ணுறை சரியான இடத்தில் சென்று வாட்டமாக அமரும். 


ஸ்டெப் 5: அது முழுமையாக உள்ளே சென்றுவிட்டதா என்பதை எப்படிக் கண்டறிவது? உங்கள் பிறப்புறுப்புக்கு வெளியே தெரியும் மறுமுனையானது, உங்கள் பிறப்புறுப்பு இதழ்களை (Vulva) எட்டுகிறதா என்று பார்க்கவும். உங்கள் பிறப்புறுப்பு இதழ்களுக்கும் துளைக்கும் இடையில், ஒரு அங்குலத்திற்கு மேல் இடைவெளி இருக்க வேண்டும். இருந்தால், அதை உள்ளிருந்து தொடர்ந்து தள்ளுங்கள். இதைப் பொருத்துவதற்கு உங்கள் பார்ட்னரின் உதவியையும் நீங்கள் பெறலாம். 


ஸ்டெப் 6: உங்கள் விரலைத் தற்போது அகற்றிவிடுங்கள். ஆணுறையை விடப் பெண்ணுறை கருவுறுதலை குறைவான சதவிகிதம் தான் கட்டுப்படுத்துகிறது என்றாலும் பாலியல் ரீதியாகத் தொற்றும் நோய்களில் இருந்து இது பெரிதும் பாதுகாப்பு அளிக்கிறது.


ஆணுறையுடன் ஒப்பிடும்போது பெண்ணுறையை உடனடியாக அகற்றவேண்டும் என்கிற அவசியம் இல்லை. உறையை 7 அல்லது 8 மணிநேரத்துக்கு முன்பே கூடப் பொருத்திக் கொள்ளலாம். 


பார்ட்னருடனான காதல் அளவுக்கு உங்கள் உடல்மீதான காதலும் அதனை நன்கு பாதுகாக்க வேண்டும் என்கிற எண்ணனும் அதி முக்கியம்தானே.