பெண்களோ ஆண்களோ தங்கள் பிறப்புறுப்பை சுத்தமாக வைத்திருப்பது அவசியமான ஒன்று. சுத்தமின்மை என்பது காலப்போக்கில் மிகப்பெரிய உடல் உபாதைகளை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும். பிறப்பு உறுப்பில் அதிகப்படியான ஈரப்பதம் இருப்பதால் அந்த பகுதிகளில் ஈஸ்ட் மற்றும் பாக்டீரியா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே அவற்றை முறையாக பராமரிப்பது அவசியமாகிறது. பெண்கள் நல மருத்துவர்கள் தரும் பொதுவான ஆலோசனை பட்டியலிட்டுள்ளோம்




பொதுவாக நாம் பயன்படுத்தும் தண்ணீரில் நிறைய கிருமிகள் இருக்க வாய்ப்புகள் இருக்கிறது. இதன் காரணமாக தொற்றுகள் எளிமையாக ஊடுறுவி செல்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அந்தரங்க உறுப்புகளை நம்மால் அடிக்கடி பார்த்து பரமாரிக்க முடியாது என்றாலும் அதனை தனி கவனத்துடன் பராமரிப்பது முக்கியம் என்கின்றனர் மருத்துவர்கள். பாலியல் உறுப்புகளின் சுத்தம் என்பது  உங்கள் குழந்தை இன்மையை உருவாக்கலாம். அதாவது பிறப்புறுப்பு தொற்று உண்டானால் அது அங்கிருந்து கருப்பைக்கு பரவி எதிர்காலத்தில் அந்த தொற்றின் பாதிப்பு குழந்தை இன்மைகளை உருவாக்கும். அதோடு மட்டுமல்லாமல் கிட்னியையும் பாதிப்படைய செய்யும். உலகின் 68 சதவிதத்திற்கு அதிகமான பெண்கள் , தங்கள் வாழ்நாளின் ஏதாவது ஒரு காலக்கட்டத்தின் இப்படியான தொற்றுகளால பிரச்சனையை சந்திக்க நேரிடுகிறது.மெடிக்கல் மற்றும் சில விளம்பரங்களில் பெண் உறுப்புகளை சுத்தம் செய்வதற்காகவே சில பொருட்கள் பிரத்யேகமாக கிடைக்கின்றன.


அவ்வகை பொருட்களில் எல்லாம் சோப் முலக்கூறுகள் நிச்சயம் இருக்கும் அவற்றை பயன்படுத்தக்கூடாது. உறுப்புகள் மிகவும் மென்மையானதாக இருக்கும் என்பதால் அவற்றை சாதாரண தண்ணீரில் சுத்தம் செய்தால் மட்டுமே போதுமானது. வேண்டுமென்றால் சிறிது உப்பு கலந்து சுத்தம் செய்யலாம். அதுவும் வெளிபுறத்தில் மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும் . உள் பகுதிகளை தண்ணீரால் சுத்தம் செய்வது கூட தவறு என்கின்றனர் மருத்துவர்கள்.




சுத்தம் செய்த பிறகு அந்த இடத்தை ஈரமாக விடக்கூடாது. இல்லையென்றால் ஃபங்கல் இன்ஃபெக்‌ஷன் வரக்கூடும். மாதவிடாய் காலங்களில்  பயன்படுத்தும் சானிட்டரி பேட்களில் அதிக அளவு நச்சு பொருட்கள் உள்ளன. அவை கேன்சரை உருவாக்கும் அளவிற்கு மோசமானவை.எனவே ஆர்கானிக் சானிட்டரி பேட்ஸை பயன்படுத்தலாம். அதேபோல டாம்போன்ஸ் பயன்படுத்தும் பெண்கள் 4 மணி நேரத்திற்கு ஒருமுறை அதனை மாற்ற வேண்டும் . இல்லையென்றால் அது கர்ப்பப்பை தொற்றை ஏற்படுத்திவிடும்.


திருமணமான பெண்கள் தாம்பத்ய உறவு வைத்துக்கொண்டால் உடனடியாக பாலியல் உறுப்பை சுத்தம் செய்வது அவசியமான ஒன்று. வெளிப்புற உறுப்பை சுத்தம் செய்வதனால் குழந்தை பாக்கியம் கிடைப்பது தடையாக இருக்காது. மாதவிலக்கு நின்ற 40 வயதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் அளவு மிக மிக குறைவாக இருக்கும் எனவே அவர்களுக்கு தொற்று பரவுவது இன்னும் எளிதாகிவிடும். எனவே அவர்களும் மேற்கண்ட பரமாரிப்பை கவனமாக மேற்கொள்வது அவசியம்.