உணவில் உப்பு, காரம் கூடுவது என்பது சாதாரணமாக அன்றாடம் நம் வீடுகளில் நிகழும் ஒரு குட்டி விபத்து. உப்பு அதிகமாகும் உணவுகளை நம்மால் உண்ண முடியாது. எனினும் காரம் அதிகமானால் அதனைச் சரி செய்ய நமக்குச் சில வாய்ப்புகள் உண்டு. இரண்டாம் வாய்ப்புகளுக்கு எப்போதுமே அதிக ஆற்றல் இருக்கின்றது. உங்கள் சமையலில் காரம் அதிகமாக சேர்க்கப்பட்டுவிட்டால், பதறாமல் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பொருள்களைச் சேர்த்து காரத்தைக் குறைத்து, உங்கள் விருப்பத்திற்கேற்ப உங்கள் உணவை உண்ணுங்கள். 


1. பால் வகைகள்


பால் வகைகளைக் காரம் அதிகமான உணவில் சேர்ப்பது மசாலாவின் அளவைக் குறைப்பதோடு குளிர்ச்சியையும் உருவாக்கும். மசாலா அளவைச் சரிசெய்ய நாம் பால், தயிர், க்ரீம் முதலானவற்றைச் சேர்க்கலாம். உணவைச் சமைத்து சேர்க்காமல், சூடான காரமான உணவாக சமைக்கும் போதே தண்ணீர் சேர்க்காமல் பால் சேர்ப்பது காரத்தைக் குறைக்கும். 



2. கூடுதல் பொருள்களைச் சேர்ப்பது


சாதாரண செயல் போல தோன்றினாலும், பெரிதும் கை கொடுக்கக்கூடிய செயல் இது. தற்செயலாக சூப், குழம்பு வகை உணவுகளைச் சமைக்கும் போது, அதில் காரம் அதிகமாக சேர்க்கப்பட்டால், அதனைச் சமநிலைக்குக் கொண்டுவர தண்ணீரை அதிகமாக சேர்க்கலாம். மேலும் அவற்றில் அதிக காய்கறிகளைச் சேர்ப்பதும் பலன் தரும். கேரட், பீன்ஸ், வெங்காயம் முதலான காய்கறிகள் உணவில் உள்ள காரத்தைக் குறைக்கும்.


3. முந்திரிகள் சேர்க்கப்பட்ட வெண்ணெய்


மசாலாவில் உள்ள காரத்தைக் குறைக்க பீனட் பட்டரைப் பயன்படுத்தலாம். அது சேர்க்கப்பட்ட உணவைச் சாப்பிடும் போது, பீனட் பட்டரின் சுவை முழுவதுமாக மறைந்து போகும். மேலும் இதற்காக பாதாம் பட்டரையும் பயன்படுத்தலாம். இதுவும் சரியாக செயல்படும்.


4. எலுமிச்சை சாறு 



எலுமிச்சை சாற்றில் உள்ள கசப்புத் தன்மை உணவின் காரத் தன்மையைக் குறைக்க உதவுகிறது. எனவே அதிக காரம் சேர்க்கப்பட்ட உணவில் எலுமிச்சையைப் பிழிந்து, அதன் சாற்றை அதனோடு சேர்ப்பது காரத்தைக் குறைக்க உதவும். 


5.அமிலங்கள்


வினிகர், சிட்ரஸ், கெட்ச் அப் முதலான அமிலப் பொருட்களைக் காரம் அதிகம் சேர்க்கப்பட்ட உணவில் ஒரு டீஸ்பூன் அல்லது இரண்டு டீஸ்பூன் அளவு சேர்ப்பது உணவை உண்ணத் தகுந்ததாக மாற்றும். 


மேலும் படிக்க..


Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..


முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!


Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..


மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்