சரும ஆரோக்கியத்திற்கு அன்றாடம் நாம் செய்யும் விஷயங்களும், உணவு முறையும் முக்கிய பங்கு வகிக்கிறது. முகப்பரு வருவதற்கான காரணிகளையும், அது வராமல் தடுக்க என்ன மாதிரியான விஷயங்களை பின்பற்ற வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்வோம்.


ஹார்மோன் ஏற்ற தாழ்வு - பருவ வயது ஆண்கள், பெண்கள் இருவருக்கும் இந்த முகப்பரு பிரச்சனைகள் வருவதற்கு முக்கிய காரணம், ஹார்மோன் ஏற்றத்தாழ்வு தான். இது உடலில் இயற்கையாக நடக்கும் நிகழ்வு தான். சில வாழ்வியல் முறை மாற்றம் மற்றும், உணவு முறைகள் காரணமாக முகப்பரு வருகிறது.




தேவையான அளவு தண்ணீர் குடியுங்கள் - சருமத்தை நேரேற்றமாக வைக்க தண்ணீர் குடியுங்கள். ஒரு நாளைக்கு குரைந்தது 2 லிருந்து 3 லிட்டர் அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடல் ஆரோக்கியத்திற்கும், சருமம் புத்துணர்வுடன் வைப்பதற்கு உதவும். தண்ணீர் குடிப்பதும், முகப்பரு வராமல் தடுக்கவும், முகப்பரு வந்த பிறகு வரும் சருமத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மறைவதற்கு தண்ணீர் குடிக்க வேண்டும்.




அழகு சாதன பொருள்கள் - சில அழகு சாதன பொருள்கள் முகப்பரு வருவதற்கு காரணமாக அமைகிறது. அதனால் அழகு சாதன பொருள்களை தேர்ந்தெடுக்கும் போது கவனம் வேண்டும். ஒவ்வொருவரின் சருமத்திற்கும் தகுந்தாற் போல் பொருள்களை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். முகப்பரு இருக்கும் சமயங்களில் அழகு சாதன பொருள்கள் பயன்படுத்துவதை தவிர்த்திடுங்கள். இது முகப்பருவை மேலும் அதிகரிக்கும்.




சுத்தமாக வைத்து கொள்ளுங்கள் - அடிக்கடி முகத்தை கழுவுவது, முகத்திற்கு பேஷ் பேக் போடுவதை ஆகியவற்றை செய்யுங்கள். இது சருமத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்குவதற்கும், சரும புத்துணர்வுக்கும் உதவியாக இருக்கும். சருமம், ஆரோக்கியமாக வைத்து இருங்கள். வெளியில் சென்று வந்தவுடன், முகத்தை கழுவுவது, முகத்தில் கை வைக்காமல் இருப்பது, முகப்பரு இருந்தால் அதை கிள்ளிவிடாமல் இருங்கள். இது போன்றவற்றை செய்தல், முகப்பரு பிரச்சனையில் இருந்து சருமத்தை பாதுகாக்கலாம்.




சீரான சரிவிகித உணவு - சரும ஆரோக்கியாயத்திற்கும் ஹார்மோன் மாற்றத்திற்கும் இந்த உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. பழங்கள், காய்கள், கீரைகள் சேர்த்த ஆரோக்கியமான உணவை எடுத்து கொள்ளுங்கள். வைட்டமின் சி, ஒமேகா 3 அமிலங்கள் ஆகிய ஊட்டச்சத்துகள் நிறைந்து இருக்க வேண்டும். சர்க்கரை, இனிப்புகள், சோடா, பதப்படுத்த பட்ட உணவுகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.


மனஅழுத்தம் இல்லாத வாழ்வியல் முறையை பின்பற்ற வேண்டும். மனஅழுத்தம் , ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும். இதனால் முகப்பரு வருவதற்கு காரணமாக அமைந்து விடும். அதனால் மனஅழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும்.


இது போன்ற விஷயங்களை பின்பற்றுவதன் மூலம், முகப்பரு வராமல் தடுக்க முடியும்