யாரோ ஒருவர் மீது நமக்கு காதல் ஏற்படுகிறது. அது இயல்பான ஒன்றுதான் என்றாலும் அந்த காதல் வெற்றிக்கனியை எட்டாவிட்டால் நம்மில் பலர் ஓவர் எமோஷ்னலாக மாறுவோம். இன்னும் சிலரோ உச்சபச்சமாக சென்று தங்களை வருத்திக்கொள்ளவே துணிவார்கள். இவை எல்லாமே ஆக்ஸிடோசின் என்னும் ஹார்மோன்கள் செய்யும் வேலைதான். ஆக்ஸிடோசின் கார்மோனை காதல் ஹார்மோன்கள் என்றுதான் மருத்துவர்கள் வட்டாரத்தில் அழைக்கின்றனர்.


ஒருவர் மீது மற்றவர்களுக்கு ஏற்படும் பாலியல் பிணைப்பிற்கு காரணம் ஆக்ஸிடோசின்தான். அதன் அளவு அதிகரிகப்பதும் குறைவதும் ஒவ்வொருவரின் விருப்பத்தை சார்ந்தது. சிலர் பார்த்தவுடனே காதல் வயப்படும் நபர்கள் இருப்பார்கள் அதற்கு காரணம், அந்த நபருக்கு அதிகமாக ஆக்ஸிடோசின் அதிகமாக சுரப்பதுதான். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இது யாரை பார்த்தாலும் சுரக்காது, சில நேரங்களில் குறைவாகவே சுரக்கவும் வாய்ப்பிருக்கிறது. உலகில் காதலிக்கும் நபர்களில் வெறும் 5 சதவிகிதம்தான் , தங்கள் காதலர்களின் கரம் பிடிக்கிரார்களாம். மீதமுள்ள 95 % பிரேக் அப்தான்.




நீண்ட நாட்கள் காதலித்து வந்த நபர்கள் திடீரென பிரேக் அப் செய்துக்கொண்டால் அதற்கு காரணம் இந்த ஆக்ஸிடோசினின் அளவு குறைந்துவிடுவதுதான்.  அதற்காக தற்கொலை போன்ற விபரீத முடிவை எடுப்பது எவ்வளவு முட்டாள்தனம். மீண்டும் அந்த ஹார்மோன் சுரப்பதற்கான வாய்ப்புகள் ஏராளமாக உள்ளது. அதற்கான நேரத்தை கொடுக்க வேண்டுமே தவிர , மற்ற ரசாயன மாற்றங்களுக்கு இடம் கொடுக்க கூடாது. பொதுவாக ஆக்ஸிடோசின்  அளவு உடலில் குறைவதற்கான காரணம் என்ன என கேட்டால் உறவுகளுக்குள் இருக்கும் சந்தேகம் , டாக்ஸிக் ரிலேஷன்ஷிப், ஒருவர் மீது மற்றவர் செலுத்தும் ஆளுமை போன்ற காரணங்களைத்தான் சுட்டிக்காட்டுகின்றனர் மருத்துவர்கள்.




 


பிரேக் அப் ஆனால் மூலையில் போய் அமராதீர்கள் , இருட்டு அறையில் அமர்ந்துக்கொண்டு சோகமான பாடல்களை தயவுசெய்து கேட்காதீர்கள். அது உங்களுக்குள் இருக்கும் ரசாயன மாற்றங்களை வேறுமாதிரியாக திசை திருப்பி உங்களுக்கே ஆப்பு வைத்துவிடும். உறவில் இருந்து வெளியே வந்தவுடன் உங்களை அதிகமாக நேசிக்க தொடங்குகள். உங்களுக்கான நேரத்தை செலவிட தொடங்குகள் அதிதான் சிறப்பானதாக இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். உதாரணமாக  அடுத்தடுத்து பிடித்தமான வேலைகளில் நம்மை ஈடுபடுத்த வேண்டும். நண்பர்களுடன் அதிக நேரத்தை செலவிடலாம். பரந்து விரிந்து கிடக்கும் உலகத்தை சுற்றிப்பார்க்கலாம்.  பிடித்த விஷயங்களை எல்லாம் செய்யுங்கள். எந்த காரணத்தை கொண்டும் உங்களது கடந்த காலத்தையோ, உங்கள் முன்னால் காதலன் அல்லது காதலியையோ நினைத்து பார்க்கவே பார்க்காதீர்கள். அது சில சமயங்களில் வருத்தும் , சில சமயங்களில் வஞ்ச உணர்வை தூண்டும். வாழ்க்கையில் அவரவர் தங்கள் சொந்த முடிவை எடுப்பதற்கான உரிமை இருக்கிறது அல்லவா உங்களுக்கான உரிமைக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல , நீங்கள் நேசித்தவரின் உரிமைக்கும் மரியாதை கொடுத்து அதிலிருந்து வெளிவந்துவிடுங்கள். எல்லாம் அவன் / அவள் செயல் என எண்ணாமல் ஆக்ஸிடோசின் செயல் என எண்ணுங்கள் , சிம்பிளாக கடந்த காலத்தை கடந்துவிடலாம்.