ஹைப்பர் பிக்மென்டேஷன் என்பது தோலின் நிறம் ஆனது இயல்பு நிலையில் இருந்து இன்னும் கொஞ்சம் நிற அடர்த்தியாக தெரியும். இது கறுப்பாகவோ, பிரவுன் நிறமாகவோ, தெரியும். அவரவர் தோலின் நிறத்தில் இருந்து இன்னும் அதிகமாக அடர்த்தியான நிறத்துடன் தோன்றும் இது சீக்கிரம் மாறாது. மேலும் வெயில் நேரத்தில் இது போன்ற நிற மாறுதல்கள் நடக்கும். இந்த நிற மாறுதல்கள் முகத்தில் இருந்து தொடங்கும். முகத்தில் இருக்கும் தோலானது மிகவும் மென்மையாக இருப்பதால் இது விரைவில் நிற மாறுதலுக்கு உட்படும். இது ஒரே நாளில் நடப்பதில்லை நாளடைவில் இது தொடரும். இது போன்ற தோல் மாற்றத்தில் மெலனின் என்ற சுரப்பி முக்கிய பங்கி வகிக்கிறது. மெலனின் ஆனது தோலின் நிறத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. தோலின் நிறமானது அவரவர் மரபணு சார்ந்து வந்தாலும், மெலனின் சுரப்பியும் கூடுதல் பங்களிக்கிறது.
இது போன்ற நிற மாறுதலுக்கு முக்கிய காரணம், ஹார்மோன் மாற்றங்கள், சில தோல் வியாதிகள் வெயிலில் நீண்ட நேரம் இருப்பது.
- ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோஜெஸ்டெரோன் ஹார்மோன் ஆனது மெலனின் சுரபிக்கு பங்களிக்கிறது அதனால் தோல் நிறம் மாறுதல் அடையும்.
- தோல் வியாதிகளான மாலினீமா , எக்சீமா , முக பரு போன்றவற்றால் தோல் நிறம் மாறுதல் அடையும்.
- நீண்ட நேரம் வெயிலில் இருந்தால் தோலின் நிறம் மாறுபடும். வெயில் ஆனது மெலனின் சுரப்பிற்கு பங்களிக்கும். அதனால் நீண்ட நேரம் வெயிலில் இருந்தால் தோலின் நிறம் மாறுதல் அடையும்.
யாருக்கு தான் ஆசை இருக்காது . நாமளும் வெள்ளையா இருக்கணும்னு . எல்லாத்துக்கும் ஏதாவது ஒரு சூழல் இந்த ஆசை வந்துட்டு பொய் இருக்கும் . சரி அது தான் நடக்கல இருக்குற கலர் பத்திரமா வச்சுக்கலாம் னு பாத்தா அதுவும் முடியல. இது மாதிரி தோல் நிறம் மாறிக்கிட்டே இருக்கு. இதை சரி செய்ய என்ன மாதிரியான விஷயங்கள் செய்யலாம். முக்கியமா தோல் வியாதிகள், ஹார்மோன் மாற்றங்கள் இருந்தால் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம். வெயிலில் அலைந்து நிற மாறுதல் அடைந்தால் அதற்கு சில முறைகள் இருக்கு அது என்னானு தெரிஞ்சுக்கலாம்.
- வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை எக்ஸ்ஃபோலைட்டிங் சிகிச்சை செய்து தோலில் இருக்கும் அடைதியான நிறமுள்ள செல்கள் வெளியேற்ற உதவுகிறது. கிளைகோலிக், சாலிசிலிக் மற்றும் லாக்டிக் அமிலம் போன்ற அமிலங்கள் நிறைந்த வேதியியல் எக்ஸ்போலியன்ட்கள் தோலின் அடர்த்தியான நிறத்தை சரி செய்ய உதவுகிறது.
- சன்ஸ்கிரீன் கிரீம் பயன்படுத்துவது ஓரளவிற்கு உதவும். கோடை காலத்தில் சூரியனின் புற ஊதா கதிர்கள் தீவிரமாக இருக்கும். தினமும் சன்ஸ்கிரீன் பயனப்டுத்துவது பாதுகாப்பாக இருக்கும்
- வெயில் நேரத்தில் போதுமான அளவு தண்ணீர் எடுத்து கொள்வது, பழங்கள் உண்பது ஓரளவிற்கு உதவி செய்யும்.