சமையலறை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும் என விரும்பவர்களுக்கு சில டிப்ஸ். சமையல் வேலை நடக்கும் இடம் என்பதால் எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது சற்று சவாலானதாக இருக்கும். நேரம் எடுக்காமல் இருக்க சமையலறையை சுத்தமாக நிர்வகிக்க கொஞ்சம் திட்டமிடல் இருந்தால் போதும்.


சமையலறையில் தேவையில்லாத பொருட்களை எல்லாம் நீக்கிவிட்டாலே பாதி இடம் சுத்தமாகிவிடும். எப்போதுமே உபயோகிக்காத டப்பா, தட்டு, பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை நீக்கவும்.


ஆல் க்ளியர்:


சமையலறை மேடை மீது உள்ளவற்றை நீக்கி வேறொரு இடத்திற்கு மாற்றவும். அதோடு,உங்களுக்கு மிகவும் அவசியம் என்பதை மட்டும் மேடை மீது வைக்கவும். மற்றவற்றை அறையில் கொடுக்கப்பட்டுள்ள ஷெல்ஃபில் வைக்கவும். மேடை மீது உள்ளவற்றை நீக்கிவிட்டு அங்குள்ள குப்பைகளை நீக்கவும். சிறிது தண்ணீர் ஊற்றவும். வினிகர் அல்லது சோப் லிக்குவிட் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி மேடையை தேய்த்து நன்றாக ஊற விடவும். எலுமிச்சை பழச்சாறு சேர்ப்பதும் பளிச்சென இருக்க உதவும். 


அவசியத்திற்கு முக்கியத்துவம்:


மேடை மீது எல்லா பொருட்களையும் வைக்காமல் நீங்கள் பயன்படுத்துவதற்கு அவசியமானதை மட்டும் வைக்க வேண்டும். பயன்படுத்தாமல் இருக்கும் பொருட்களை மேடை மீது வைக்க கூட்டாது என்ற விதியை பின்பற்றுவது சுத்தமாக வைத்திருக்க உதவும். 


ஆர்கனைசர்ஸ்:


எண்ணெய் வைக்கும் டப்பா, மசாலா வைக்கும் குட்டி டப்பாக்கள் வைப்பதற்கு ட்ரே போன்றவற்றை பயன்படுத்தலாம். சமையல் எண்ணெய் பாட்டில் / டப்பா போன்றவற்றை அடுப்பிற்கு அருகில் வைக்க வேண்டாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. சிறிய டப்பாவில் உள்ளதை அருகில் வைக்கலாம்.மற்றவைகளை வேறு இடத்தில் வைக்கலாம். 


சமையறையை அதன் பயன்பாடு, நிர்வாகம் ஆகியவற்றின் அடிப்படையில் மாதம் ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ சுத்தம் செய்யலாம். இல்லையெனில், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்யலாம். வீட்டில் உள்ள அனைவரும் சமையலறையின் ஒவ்வொரு பகுதியாக பிரித்து சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ளலாம். வேலையை பகிர்ந்து செய்தால் ஒருவருக்கு மட்டும் சுமையாக இருக்காது அதே போல சமையலறையில் பொருட்கள் எங்கிருக்கிறது என்பது குடும்ப நபர்கள் எல்லாரும் தெரிந்துகொள்ள முடியும்.


சமையலறையின் அளவு எப்படியிருக்கிறோ அதற்கேற்றவாறே அதை நிர்வகிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளவும். சில இடங்கள் ஷெல்ப் நிறைய இருக்காது. அப்படியிருக்கும்போது இருக்கும் இடத்திற்கேற்றவாறு சமையலறையை பயன்படுத்தலாம். சுத்தம் செய்ய முடியவில்லையே என்ற குற்றவுணர்வுக்கு உள்ளாக வேண்டாம் என்பது பலரின் கருத்தாக உள்ளது.