சாப்பாட்டுக்கு பெயர் போன இந்த ஊரில், உணவில் சேர்க்கும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு மருத்துவ குணம் இருக்கிறது. சமையல் முறையில் நிறைய வேறுபாடுகள் இருந்தாலும், ஒவ்வொன்றிற்கும் ஒரு மருத்துவ பின்னணி இருக்கிறது.  பழங்காலத்தில் இருந்து, பழக்கத்தில் இருந்து வரும் ஒரு முறை தாளித்தல். இது நம்ம ஊரில் மட்டும் தான் இதை பார்க்க முடியும். வேறு எந்த நாட்டு உணவு பழக்கங்களிலும் இல்லாத ஒன்று இந்த தாளித்தல் முறை. மற்ற நாடுகளில் எல்லாம் ட்ரெஸ்ஸிங் என்று சொல்வார்கள். ஆனாலும் அதுவும் நம்ம ஊரு தாளித்தல் முறைக்கு ஈடாகாது.




தள்ளித்தல் முறையில் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு மாதிரி இருக்கும். இப்போது இருக்கும் தாளித்தல் முறைக்கும், பழங்காலத்தில் இருந்த முறைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது. இப்போது எல்லாம் வெறும் கடுகு, உளுத்தம் பருப்பு,சீரகம், வெந்தயம்  மற்றும் கருவேப்பிலை மட்டும் பயன்படுத்த படுகிறது. அந்த காலத்தில் எல்லாம் மிளகு, ஏலம், மஞ்சள், பெருங்காயம், பூண்டு, சீரகம், சுக்கு, வெந்தயம் பயன்படுத்தப்பட்டன.


இவை ஒவ்வொன்றிற்கும் ஒரு மருத்துவ குணம் இருக்கிறது.


கடுகு மற்றும் சீரகம் செரிமானத்திற்கு உதவும். உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயம் உடலின் குளிர்ச்சிக்கு உதவும். மஞ்சள் சிறந்த ஆண்டிஆக்ஸிடென்கள் நிறைந்து. பெருங்காயம் ஆனது வயிறு உப்புசம் இல்லாமல் பார்த்து கொள்ளும். கருவேப்பிலை நார்சத்து நிறைந்தது இது மலசிக்கல் வராமல் பார்த்து கொள்ளும் .


சாதாரண தாளித்தல் முறை என்று எண்ணி இருப்போம்.ஆனால் ஒவ்வொன்றிற்கு ஒரு காரணம் இருக்கிறது. நம் முன்னோர்கள் உணவே மறுத்து என சும்மாவா சொன்னார்கள். ஒவ்வொரு உணவையும் மருந்தாகி சாப்பிட்டு இருக்கின்றனர்.  உணவை மருந்து போல் சாப்பிட்டதனால் தான் அவர்களுக்கு எந்த வேதியல் மருந்தும் எடுத்து கொள்ளாமல் நீண்ட காலம் நோய் நொடி இன்று ஆரோக்கியமாக வாழ்ந்தனர்.


தாளிப்பதற்கு சில டிப்ஸ் இங்கே


                             



  • தாளிப்பதற்கு எப்போதும் புதிய எண்ணையை பயன்படுத்துங்கள். ஏற்கனவே வறுத்த பொறித்த எண்ணெய்களை மீண்டும் எடுத்து வைத்து உபயோகிக்காதீர்கள் இது உடலில் கெட்ட கொழுப்புகள் சேரும்.


 



  • கடுகு நன்றாக வெடித்து வர வேண்டும். அப்போது தான் கடுகின் சுவை உணவில் சேரும்.


 



  • கடுகு எண்ணையில் போட்ட உடன் வெடித்து கையில் தெறிக்காமல் இருக்க ஒரு கரண்டியை வைத்து லேசாக கலந்து விட்டு கொண்டே இருக்க வேண்டும்.


 



  • கடுகு உளுத்தம்பருப்பு, பெருங்காயம், மஞ்சள், சீரகம், வெந்தயம், கருவேப்பிலை அனைத்தையும் பயன் படுத்தி கொள்ளுங்கள்.


 



  • உங்கள் சுவைக்கு தகுந்தாற் போல் இந்த தாளித்தல் முறையை பின்பற்றுங்கள்