தண்ணீர் அருந்துவது அவசியம். அதுவும் கோடையில் தண்ணீர் பாட்டிலை கூடவே எடுத்துச் செல்வது மிக மிக அவசியம். ஆனால் அதைவிட முக்கியம் நீங்கள் பயன்படுத்தும் தண்ணீர் பாட்டில் சுத்தமாக இருக்கிறது என்பது தான்.
கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்தப்படுகின்றன. பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் வேலைக்கு செல்லும் பெரியவர்கள் வரை தண்ணீர் பாட்டில்களை எடுத்துச் செல்கிறோம். இதற்கிடையில் பாட்டில்களின் தூய்மை மிகவும் முக்கியமானது. கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள் மிக விரைவாக அழுக்காகிவிடும்.
அசுத்தமான தண்ணீர் பாட்டில்களால் பல நோய்கள் வர வாய்ப்புண்டு. இதை தவிர்க்க தண்ணீர் பாட்டில்களை சுத்தபடுத்துவதற்கான சரியான முறையை பாட்டிலில் தண்ணீரை ஊற்றிக்கொள்ளவும்
வெதுவெதுப்பான தண்ணீரை பாட்டிலில் ஊற்றிக்கொண்டு பாத்திரம் கழுவும் சோப்பு தண்ணீரை சில துளிகள் சேர்த்துக்கொண்டு நன்றாக பாட்டிலை குளுக்கி 2-4 நிமிடங்கள் வரை வைத்துவிடவும்.
பிற்கு நன்றாக தேய்க்கவும் இப்போது பாட்டிலை பிரஷின் உதவி கொண்டு நன்றாக தேய்த்துக் களுவவும். பாட்டிலின் அடிப்பகுதி மட்டுமில்லாமல் உள்புறத்திலும் மூடியையும் நன்றாக கழுவவேண்டும்.
கழுவிய பின் காய வைக்கவும்
கழுவிய பாட்டிலை நன்றாக அலசி காயவைக்கவும். பேப்பர் டவலைக் கொண்டு காய வைக்கவும். ஈரப்பதத்தினால் கிருமிகள் பல மறுபடியும் வரக்கூடும் என்பதால் காய வைத்த பிறகு பாட்டிலை நன்றாக மூடி விட வேண்டும்.
ப்ளீச்சைக் கொண்டு ஆழமாக சுத்தப்படுத்துதல்
சிறிதளவு ப்ளீச்சுடன் குளிர்ந்த நீரையும் சேர்த்து கழுவுவதால் பாட்டிலை ஆழமாக சுத்தப்படுத்தலாம். ப்ளீச் மற்றும் குளிர்ந்த நீரையும் சேர்த்து பாட்டிலில் ஊத்தி நன்றாக குளுக்கி ஓர் இரவு முழுவதும் விட்டுவிட வேண்டும். மறுநாள் காலையில் பிரஷைக் கொண்டு நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
வினிகர் கொண்டு சுத்தம் செய்யுதல்
அரை கப் வினீகருடன் ஒரு தேய்க்கரண்டி ப்ளீச் மற்றும் குளிர்ந்த நீரையும் கலது பாட்டிலில் ஊற்றி நன்றாக குளுக்கி ஓர் இரவு முழுவதும் விட்டுவிட வேண்டும். மறுநாள் காலையில் பிரஷைக் கொண்டு நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.