தம்பதிகளுக்கு இடையேயான தாம்பத்ய வாழ்வு சீராக இருந்தால் மற்றபடி எல்லாம் சிறப்பாகவே அமையும், குடும்பத்தில் குதூகலத்துக்கு குறைவு இருக்காது என்பது மனநல மருத்துவர்கள் பலரும் சொல்லும் கூற்று.

Continues below advertisement

தாம்பத்யத்தில் இருவரும் இன்பம் பெறுவதில் சில நேரங்களில் மருத்துவ ரீதியாக சிக்கல் ஏற்படலாம். அப்படிப்பட்ட நேரங்களில் தயங்காமல் காய்ச்சல், தலைவலிக்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதுபோல் செக்சாலஜிஸ்டை பார்ப்பதில் வெட்கமோ தயக்கமோ வேண்டாம்.

பலருக்கும் இல்லறத்தில் ஏற்படும் பொதுவான பிரச்சினை பிறப்புறுப்பில் தேவையான ஈரப்பதம் இல்லாததால் உறவின் போது ஏற்படும் வலி. இதற்கு லூப் பயன்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Continues below advertisement

ஆனால், சிக்கல் இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது விளம்பரங்களைப் பார்த்து ஏதேனும் ஒன்றை வாங்கிப் பயன்படுத்தும்போது பிறப்புறுப்பில் அழற்சி ஏற்பட்டுவிடுகிறது. இது கூடுதல் துன்பத்தை தந்துவிடுகிறது. அதனாலேயே மருத்துவர்கள், தம்பதியர் தயக்கம் காட்டாமல் தங்களை அணுகி விவரங்களை தெரிவித்து தகுந்த லூப்ரிகன்ட்டைப் பெற்றுக் கொள்ள அறிவுறுத்துகின்றனர்.

என்ன மாதிரியான லூப் வாங்க வேண்டும்?

லூப்ரிகன்ட்கள் பல்வேறு பேஸில் வருகின்றன. சில தண்ணீரை அடிப்படையாகக் கொண்டும், சில சிலிகோன், ஆயில், ஹைப்ரிட், என பல வகைகளில் வருகின்றன. Babeland’s BabeLube Silk ($10-24) என்ற லூப் தண்ணீர், சிலிகோன் என்ற இரண்டு கூறுகளையும் கொண்டுள்ளதால். உலகளவில் பலரின் வரவேற்பையும் பெற்றுள்ளது.

தண்ணீர் பேஸ் லூப்:

தண்ணீர் பேஸ் லூப் பயன்படுத்தும்போது சிலொகோன் செக்ஸ் டாய்ஸுடனான உறவு கூட எளிதாக இருக்கும் எனக் கூறுகின்றனர். மேலும் அவை காண்டம் கிழியும் அபாயத்தைத் தடுக்கும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.Blossom Organics Natural Moisturizing Personal Lubricant என்ற லூப்ரிகன்ட் பெண் பிறப்புறுப்பு வழியான செக்ஸுக்கு உகந்தது எனக் கூறப்படுகிறது. இது உங்களில் விரிப்புகளில் கரையை ஏற்படுத்தாது. தோலில் மென்மையாக செயல்படும், தண்ணீர் கொண்டு எளிதில் சுத்தப்படுத்தலாம்.

சிலிகோன் பேஸ் லூப்ரிகன்ட்:

நீங்கள் சிலிகோன் பேஸ் லூப்ரிகன்ட் தேர்வு செய்தால் Wet Platinum Lubricant  தான் சிறந்தது என பலரும் பரிந்துரைக்கின்றனர். ஆனால் செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்தினால் அதை சிலிகோன் பேஸ் லூப்ரிகன்ட் சேதப்படுத்திவிடும்.

ஆயில் பேஸ் லூப்ரிகன்ட்

ஆயில் பேஸ் லூப்ரிகன்ட்டும் பரவலாக பரிந்துரைக்கப்படுகிறது. YES OB இதில் சிறந்த பிராண்டாகக் கூறப்படுகிறது. ஆனால் இதில் காண்டம் சில நேரம் கிழியும் அபாயம் இருக்கிறது. மேலும் இவற்றின் விலையும் அதிகம்.

Aloe Cadabra, இதில் 90% ஆலோவீரா இருக்கிறது,  Sliquid Organics Natural Lubricating Gel ஆகியன நூறு சதவீதம் இயற்கையானது. பேரபன் இல்லாதது கூடுதல் சிறப்பம்சம்.