1. புன்னகை


நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போதுதான் புன்னகைக்கிறோம். ஆனால் புன்னகை செய்வதும் நம்மை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் தெரியுமா? புன்னகை மூளை டோபமைனை அதிகரிக்க உதவுகிறது. டோபமைன் என்பது மகிழ்ச்சியை அதிகரிக்கும் ஹார்மோன். நமது முகத்தின் பாவனைகள் நம் மனதை பாதிக்கும் எனக் கண்டறிந்துள்ள ஆராய்ச்சியாளர்கள் முகத்தில் சோகம் இருந்தால் மனதிலும் சோகம் இருக்கும் எனக் கண்டறிந்துள்ளனர்.


அதற்காக எப்போதும் போலியான புன்னகையை முகத்தில் கொண்டு வர வேண்டும் என்பதில்லை. அடுத்த முறை நீங்கள் தாழ்வாக உணர்ந்தால், புன்னகைத்து என்ன நடக்கிறது என்று பாருங்கள். அல்லது கண்ணாடியில் உங்களைப் பார்த்து புன்னகைப்பதன் மூலம் ஒவ்வொரு காலையையும் தொடங்க முயற்சிக்கவும்.


2. உடற்பயிற்சி


உடற்பயிற்சி உங்கள் உடலுக்கு மட்டுமல்ல. வழக்கமான உடற்பயிற்சி மன அழுத்தம், பதட்ட உணர்வுகள் மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது, அதே நேரத்தில் சுயமரியாதையையும் மகிழ்ச்சியையும் அதிகரிக்கும்.


தினமும் ஒரு சிறிய அளவு உடற்பயிற்சி செய்வது கூடப் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் அதையே அளவுக்கு அதிகமாகச் செய்ய வேண்டாம். அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சுதானே. அது உங்களை விரக்தி அடையச் செய்யலாம். உடற்பயிற்சி இல்லையென்றாலும் கீழ்கண்டவற்றை செய்ய முயற்சி செய்யவும்


ஒவ்வொரு இரவும் இரவு உணவிற்குப் பிறகு சிறிது நடக்கவும். யோகா தொடக்கநிலை வகுப்பிற்கு பதிவு செய்யவும். 5 நிமிட ஸ்ட்ரெச்சுடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள். நீங்கள் வாழ்வில் சந்தித்த தோல்வியான தருணங்களை அதில் இருந்து எவ்வாறு மீண்டு வந்தீர்கள் என்பதை நினைவுகூரவும். உடலை கொஞ்சம் ஆக்டிவ்வாக வைத்திருக்கும் கோல்ஃப் நடனம் போன்ற ஏதேனும் ஒரு செயல்பாட்டை தொடங்கலாம். 


3. நிறைய தூங்குங்கள்


பெரும்பாலான பெரியவர்களுக்கு ஒவ்வொரு இரவும் குறைந்தது 7 மணிநேரம் நம்பகமான தூக்கம் தேவை. பகலில் உறங்கக்கூடாது தவறு என்பார்கள். உண்மையில் உங்கள் உடல் தூக்கம் கேட்கும்போதெல்லாம் சிறிது தூங்குங்கள். தூக்கம் உங்கள் மனச்சோர்வு, இதயபாதிப்பு, உடல்சோர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளைப் போக்கும்.


சிறந்த தூக்க வழக்கத்தை உருவாக்க உதவும் சில குறிப்புகள்:


தினமும் எவ்வளவு நேரம் தூங்குகிறீர்கள் என்பதைப் பதிவு செய்துகொள்ளுங்கள்.
தூக்கத்துக்கு முன்பு உங்களை இளைப்பாறலாக வைத்திருங்கள். 
தூக்கத்தால் உங்களுக்கு எவ்வளவு ஓய்வு கிடைக்கிறது என்பதையும் கவனிக்க முயற்சி செய்யுங்கள்.
உங்கள் படுக்கையறையை இருட்டாகவும், குளிர்ச்சியாகவும், அமைதியாகவும் வைத்திருங்கள்.
நீங்கள் தூங்க வேண்டியிருந்தால், அதை 20 நிமிடங்களுக்கு பவர்நாப்பாக மட்டுப்படுத்த முயற்சிக்கவும்.
நீங்கள் தொடர்ந்து தூங்குவதில் சிக்கல் இருந்தால், மருத்துவரிடம் பேசுங்கள்.


4. மனநிலையை மனதில் கொண்டு சாப்பிடுங்கள்


உங்கள் உணவுத் தேர்வுகள் உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதை நீங்கள் ஏற்கனவே அறிந்திருக்கலாம். ஆனால் சில உணவுகள் உங்கள் மனநிலையையும் பாதிக்கலாம். 




உதாரணத்திற்கு, கார்போஹைட்ரேட்டுகள் செரோடோனினை வெளியிடுகின்றன. காய்கறிகள், பீன்ஸ் மற்றும் முழு தானியங்கள் போன்ற சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளைத் தேர்ந்தெடுப்பது, செரோடோனின் உற்பத்தியை சீராக வைத்திருக்கும். மெலிந்த இறைச்சி, கோழி, பருப்பு வகைகள் மற்றும் பால் ஆகியவற்றில் புரதம் அதிகம். புரோட்டீன் நிறைந்த உணவுகள் டோபமைன் மற்றும் நோர்பைன்ப்ரைனை வெளியிடுகின்றன, அவை ஆற்றலையும் செறிவையும் அதிகரிக்கும். கொழுப்பு நிறைந்த மீன்களில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், அழற்சி எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டிருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.உங்களுக்கு மீன் சாப்பிடும் பழக்கம் இல்லையென்றால் அதற்கு மாற்றாக என்ன சாப்பிடலாம் என்பதை மருத்துவரிடம் ஆலோசனை செய்யவும்.


5. நன்றியுணர்வு பயிற்சி


வெறுமனே நன்றியுடன் இருப்பது உங்கள் மனநிலையை மற்ற நன்மைகளுடன் ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும். எடுத்துக்காட்டாக, நன்றியுணர்வைப் பயிற்சி செய்வது நமது மகிழ்ச்சியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. யாரோ ஒருவர் உங்களை நேசிக்கிறார். யாரோ ஒருவர் உங்களை அந்த நாளில் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார், இது போன்ற சின்னச் சின்ன விஷயங்களை அந்த நாளின் இறுதியில் நினைகூர்வது உங்களை மகிழ்ச்சிக்குறியவராக்கும்.