விழுப்புரம்: குண்டலப்புலியூர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு துறை டிஎஸ்பி மனோகர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவினர் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள 600 கிலோ ரேஷன் அரிசி உள்ளது குறித்து ஆய்வு செய்தனர்.


குண்டலப்புலியூர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்யபட்டதாகவும் அடித்து துன்புறுத்தியதாகவு வழக்கில் ஆசிரம நிர்வாகி ஜீபின் பேபி அவரது மனைவி மரியா பணியாளர்கள் சதீஷ், கோபிநாத், பிஜீ மேனன் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 8 கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கு விசாரனை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு சிபிசிஐடி எஸ்பி அருன் பாலகோபாலன் தலைமையில் இரண்டு ஏடி எஸ்பி 4 காவல் ஆய்வாளர்கள் அடங்கிய 25 பேர் கொண்ட குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.


சிபிசிஐடி போலீசார் நேற்றைய தினம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் ஆய்வு மேற்கொண்டு கூடுதல் ஆவணங்களை கைப்பற்றி சென்றனர். இந்நிலையில் இன்றும் இரண்டாவது நாளாக விசாரணை செய்து வருகின்ற நிலையில் குண்டலப்புலியூர் அன்பு ஜோதி ஆசிரமத்தில் குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு துறை டி எஸ் பி மனோகர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவினர் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள 600 கிலோ ரேஷன் அரிசி உள்ளது குறித்து ஆய்வு செய்தனர். ஆசிரமத்தில் ரேஷன் அரிசி பொதுமக்களால் அன்பளிப்பாக கொடுக்கப்பட்டதா அல்லது ரேஷன் அரிசி கடத்தி விற்பனை செய்பவர்களிடமிருந்து பெறப்பட்டதா என்றும் அருகிலுள்ள கிராமங்களிலிருந்து வாங்கப்பட்டதா என்பது குறித்து ஆய்வு செய்து சென்றனர். தற்போது சிபிசிஐடி போலீசாரிடம் இவ்வழக்கு உள்ளதால் இவ்விசாரனைக்கு பின்னரே ரேஷன் அரிசி தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்படும் என  குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு துறை டிஎஸ்பி மனோகர் தெரிவித்தார்.