புரத சத்து உடலுக்கு தேவைப்படும் மிக முக்கியமான ஊட்டச்சத்து ஆகும். இதை எடுத்து கொள்வதால், உடலுக்கு ஒரு வடிவத்தையும், உறுப்புக்கள் இயங்குவதற்கு தேவையான ஆற்றலையும், புரத சத்து வழங்குகிறது.
புரோடீன் அல்லது புரத சத்து என்பது, தசைகள், எலும்புகள்,முடி , நகம் ஆகியவற்றிற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. உடலுக்கு தேவையான ஆற்றல் பெரும்பாலும் கார்போஹைட்ரெட் மற்றும் ;கொழுப்பில் இருந்து கிடைக்கிறது. உடனடியாக பயன்படுத்த வேண்டிய ஆற்றலுக்கு இந்த புரத சத்து உதவுகிறது.
மேலும் புரத சத்து குறைவாக இருந்தால், முடி உதிர்தல், நகம் உடைந்து போதல், சத்து குறைபாடு காரணமாக உடல் இருத்தல் போன்ற பிரச்சனைகள் கூட வரும். எந்த வித செயல்களிலும் வேகமாக ஈடுபட முடியாமல், ஒரு விதமான சோர்வை தரும்.
புரத சத்து தசைகள் வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தசைகளுக்கு வடிவத்தை தருவதிலும், பிட்டாக இருக்க ஆசைப்படுபவர்கள் அனைவரும் புரத சத்து மிக்க உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். இவர்களுக்கு உடற்பயிற்சியில் ஈடுபடும் போது தேவையான ஆற்றலை புரத சத்து அளிக்கிறது.
உடல் எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் புரத சத்து மிக்க உணவை எடுத்து கொள்ள வேண்டும். புரத சத்து உடலில் வளர்சிதை மாற்றத்தை சரி செய்யும். வளர்சிதை மாற்றம் முறையாக நடந்தால், எடுத்து கொள்ளும் உணவில் இருந்து ஆற்றல் பயன்படுத்த பட்டு விடும். உடலில் கொழுப்பு சேர்வது குறையும். உடல் பருமன் இருப்பவர்கள் உடற்பயிற்சியில் ஈடுபடும் போது கொழுப்புகள் குறைந்து , தசைகள் அமைப்பாக இருக்கும். அதனால் உடல் பருமன் இருப்பவர்கள் புரத சத்து மிக்க உணவை எடுத்து கொள்ள வேண்டும்.
தசை மற்றும் எலும்பு வலிமைக்கு - தசைகள் மற்றும் எலும்புகள் வலிமையாக இருக்க புரத சத்து அவசியம். தசைக்கு வடிவத்தை கொடுப்பதற்கும், வலுவாக்குவதற்கும், எலும்புகளின் அடர்வு தன்மைக்கும் புரத சத்து அவசியம். அதிக உடற்பயிற்சியினால் தசை இழப்பு ஏற்படுவதை தடுக்க புரத சத்து அவசியம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க - நோய் எதிர்ப்பு மண்டலத்தில் டி செல்கள், பி செல்கள் மற்றும் ஆன்டிபாடிகள் ஆகியவற்றிற்கு உதவும்.இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். தொற்று நோய்கள் வராமல் தடுக்கும்.
இதய ஆரோக்கியம் - குழந்தை கருவில் இருக்கும் போது , முதலில் துடிக்க ஆரம்பிக்கும். உடலில் தொடர்ந்து இயங்கி கொண்டு இருக்கும், இதய தசைகள் வலுப்பெறவும், இதய துடிப்பை சீராக வைக்கவும், புரத சத்து அவசியம்.
புரத சத்து மிக்க உணவுகளை அன்றாடம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். முட்டை, முளைகட்டிய பாசிப்பயறு, உளர் பழங்கள், தானியங்கள் அனைத்தும் புரத சத்து மிக்க உணவுகள்.அன்றாட உணவில் இவற்றை சேர்த்து கொள்ளுங்கள். சுறுசுறுப்பாக நாள் முழுவதும் இயங்குங்கள்.