யூரிக் அமிலம் என்பது ஒரு கழிவுப்பொருள். உடலில் டி.என்.ஏ. எனும் மரபணுச்சரடு உற்பத்திக்குப் பியூரின் என்ற மூலக்கூறுகள் தேவை. இவை நாம் சாப்பிடும் அசைவ உணவில் அதிகம் இருக்கின்றன. சைவ உணவுகளில் தேவைக்கு இருக்கின்றன. குடலில் இவை உறிஞ்சப்பட்டு, உடல் செல்களில் வளர்சிதை மாற்றம் அடையும்போது, அதன் கடைசிப் பொருளாகவும் கழிவுப் பொருளாகவும் யூரிக் அமிலத்தை உற்பத்திசெய்கின்றன.


சாதாரணமாக, ஒரு டெசி லிட்டர் ரத்தத்தில் பெண்களுக்கு 6 மிகி வரையிலும் ஆண்களுக்கு 7 மிகி வரையிலும் யூரிக் அமிலம் இருந்தால், அது இயல்புநிலை. இந்த அளவு அதிகரிக்கும்போதுதான் ஆபத்து. இது ரத்தத்தில் பயணிக்கும்போது எலும்பு மூட்டுகளில் படிமங்களாகப் படிகிறது. இதன் விளைவால், ‘கவுட்’(Gout) எனும் மூட்டுவலி வருகிறது. இது சிறுநீரகத்துக்குச் சென்று சிறுநீரில் வெளியேறும்போது சிறுநீரகக் கற்களாக மாறுகிறது. இதுவரை யூரிக் அமிலத்தால், இந்த இரண்டு பிரச்சினைகள் மட்டுமே ஏற்படுவதாக மருத்துவத் துறை சொல்லிவந்தது. இப்போது புதிதாக சிறுநீரகப் பாதிப்பும் ஏற்படுகிறது.


யூரிக் அமிலத்தால் ஏற்படும் மூட்டு வலிக்கு புதினா இலைகள் நல்ல தீர்வு தெரியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.


ஒரு கை அளவு நறுக்கிய புதினா இலைகள்


2 கப் தண்ணீர்


1 டேபிள் ஸ்பூன் வெல்லம்


அரை டீஸ்பூன் எலுமிச்சை


ஒரு டீஸ்பூன் சீரகத் தூள்
 
தேவையான அளவு பிங்க் சால்ட்
 
புதினா சாறு தயாரிப்பது எப்படி?


இந்த மின்ட் பானத்தை தயாரிப்பது எளிது. சில புதினா இலைகளை எடுத்து நன்றாக அலசிக் கொள்ளவும். அதை ஜூஸர் மிக்சரில் போட்டு வெல்லம், எலுமிச்சை சாறு, சீரகத் தூள், பிங்க் சால்ட் எல்லாவற்றையும் சேர்த்து ஹை ஸ்பீடில் போட்டு அரைக்கவும். பின்னர் ஐஸ் கட்டிகள் சேர்த்து பரிமாறவும்.


புதினா இலையில் தயாரிக்கப்படும் டீ அற்புதமான ஒரு பானமாகும். சோகமான மனநிலை, வயிறு கோளாறு, மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது.


ஒவ்வாமையைக் குணப்படுத்தும் மிக அதிகமான ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்புத்திறன் உள்ளது.



செரிமானத்திற்கு உதவுகிறது. தலைவலியை நீக்கவும் புதினா அருமருந்தாக உள்ளது.


நீங்கள் எங்கேயாவது வெளியில் செல்லும் போது புதினா இலைகளை கொஞ்சம் எடுத்துச் சாப்பிட்டு சென்றால் வாய் துர்நாற்றம் இருக்காது. எனவே இனிமேல் எந்த மவுத்பிரஷ்னசும் உங்களுக்குத் தேவைப்படாது.


பெண்கள் தாய்ப்பால் கொடுக்கும் போது ஏற்படும் வலியைக்குறைக்கிறது.


குமட்டலைத்தடுக்கிறது.


மேலும் தற்போது மழைக்காலம் என்பதால் அனைவருக்கும் சளி, இருமல் போன்ற ஏற்படும். எனவே சூடாக புதினா தேநீர் அருந்தி வந்தால் நமக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்படாது. குறிப்பாக இதில் மெந்தால் எனப்படும் இயற்கையான நறுமயச் சிதைவு இருப்பதால் சளி மற்றும் நாள்பட்ட சளியை உடைக்க உதவுகிறது.


மன சோர்வை நீக்கி கவனக்குறைபாடு இல்லாமல் ஆக்குகிறது. மேலும் நினைவாற்றலையும் அதிகரிக்கச்செய்கிறது.


தினமும் அல்லது வாரம் ஒரு முறை புதினாவை அரைத்து முகத்தில் தேய்த்துவந்தால் முகப்பருகள் வராமல் தடுக்கிறது. மேலும் தொற்று, அரிப்புகளைக் குணப்படுத்தவும் உதவியாக உள்ளது.