எப்போதும் இளமையுடன் இருக்க வேண்டும் என்ற ஆசையிருந்தாலும் முதுமை பயணத்தின் தொடக்கத்திலேயே சருமத்தில் சுருக்கம் ஏற்பட தொடங்கிவிடும். இது இயற்கை என்றாலும் மாறுபட்ட வாழ்க்கை சூழல், உணவு முறை ஆகிய காரணத்தில் முகத்தில் சுருக்கம் ஏற்படுவது 30-களின் தொடக்கத்திலேயே தொடங்கிவிடும். 30 வயதில் குறைய தொடங்கும். இந்த நேரத்தில் சருமத்தில் கோடுகள், சுருக்கங்கள், நிறம் மாறுதல் போன்ற பிரச்சனைகள் வரும். இந்த வயதில் வரும் பிரச்சனையை எதிர் கொள்வதற்கு சில எளிய ஆலோசனைகளை பாப்போம். அதுவும் வீட்டு மருத்துவத்திலேயே சரும வறட்சியை சரிசெய்ய சில பரிந்துரைகளை காணலாம்.
சருமம் என்றும் இளமையுடன் இருக்க தினமும் ஒரு கைப்பிடி அளவு ஸ்ட்ராபெரி அல்லது 3 நெல்லிக்காய்களைச் சாப்பிடலாம். உள்ளே என்ன சாப்பிடுகிறோமோ அதுவே சரும ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.
தக்காளி பழச்சாறு, நன்றாகப் பழுத்த வாழைப்பழம் ஆகியவற்றை முகத்தில் தடவி வந்தால் முக சுருக்கம் மறையும்.
தரமான சந்தனப்பவுடருடன் கிளிசரின் சேர்த்து, பேஸ்ட் போன்று நன்கு குழைத்து, அதை முகத்தில் நன்கு பூசி, சிறிது நேரத்திற்குப் பின் கழுவிவிட வேண்டும். இதை வாரம் ஒருமுறை செய்து வர, முகச்சுருக்கம் நீங்கும். இதோடு கற்றாழை ஜெல் சேர்க்காலம். கற்றாழை மிகச் சிறந்தது. இதற்கு ஹீலிங் ப்ராபர்ட்டி அதிகம். கேரட், பீட்ரூட் சாறு தடவி வரலாம். இதோடு கடலை மாவு கலந்து பேஸ்ட்போல செய்து ஃபேஸ் பேக் போடலாம். கடலை மாவு, தயிர் ஒரு சிறந்த தேர்வு. வாரத்தில் இருமுறை இந்த ஃபேஸ் பேக் டிரை பண்ணலாம்.
வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, பி6, சி உள்ளட்டவை இருப்பதால் இதை சருமத்தில் தடவினால் செல் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும்.
Argan Oil என்ற ஒன்று இருக்கிறது. இதை பயன்படுத்தினாலும் சரும பாதிப்புகளை தவிர்க்கலாம்.
தயிரில் லாக்டிக் ஆசிட் உள்ளதாலும் வைட்டமின் ஈ சருமத்தில் உள்ள செல்களை புதுப்பிக்க உதவுகிறது. மஞ்சள் சிறப்பான கிருமி நாசினி. ரோஸ் வாட்டர், வைட்டமின் இ எண்ணெய் உள்ளிட்டவற்றையும் சரும பராமரிப்பிற்கு பயன்படுத்தலாம்.
சரும பராமரிப்பும், கெமோமில் டீயும்
முகப்பரு மற்றும் எக்ஸிமாவை (Eczema) குறைக்கிறது. இதில் உள்ள ஆன்டி-இன்ஃபல்மேட்ரி பண்புகள் முகப்பரு மற்றும் அதனால் ஏற்படும் தழும்புகளை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், படிப்படியாக முகப்பரு இருந்ததற்கான அடையாளங்களை குறைக்கும்.
கருவளையங்களுக்கு டாட்டா:
கெமோமில் எண்ணெய்யை அன்றாடம் பயன்படுத்துவதன் மூலம், சருமத்தின் நிறம் சீராக இருக்கும். ’even-looking skin tone’ பெற உதவுகிறது. கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களை குறைக்க இதை பயன்படுத்தலாம்.
இதோடு, கெமோமில் டீ குடிப்பதும் உடல்நலனுக்கு நல்லது.
சருமத்தை ஆரொக்கியத்துடன் பராமரிக்க போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிட வேண்டாம். அதிகமாக துரித உணவுகளையும் தவிர்க்க வேண்டும். சரிவிகித உணவு, சீரான உடற்பயிற்சி மிகவும் அவசியம்.