உடலில் உள்ள தொப்பையைக்குறைக்க வேண்டும் என்றால் தொடர்ந்து கோரக்கிழங்கு பவுடரைத் தேய்த்துக்குளிப்பதோடு, முறையான டயட் எடுத்துக்கொண்டாலே 10 நாள்களில் நல்ல ரிசஸ்ட் கிடைக்கும் என்கின்றனர் ஆயுர்வேத மருத்துவர்கள்.
இன்றைக்கு பலரும் சிந்திக்கும் ஒரே பிரச்சனை, எப்படி நாம் தொப்பையைக்குறைக்க வேண்டும் என்பதுதான். ஆம் இன்றைக்கு நாம் சாப்பிடும் உணவு முறை எந்தளவிற்கு மாறுகிறதோ? அந்தளவிற்கு உடல் எடை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தொப்பையைக்குறைப்பதற்காகவே ஜிம்கள் செல்வது, டயட் மேற்கொள்வது, நடைப்பயிற்சி போன்ற பலவற்றை நாம் முயற்சித்துவருகிறோம். இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் சுலபமான முறையில் 10 நாள்களில் உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைத்துவிடலாம் என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் Dr. Rachel Rebecca.
தொப்பையைக் குறைப்பதற்கான வழிமுறைகள் இதோ உங்களுக்காக.
நம்முடைய உடல் எடை அதிகரிப்பதற்கு உடலில் உள்ள பிரச்சனைத்தான் காரணம் எனக்கூறப்படுகிறது. எனவே இதற்கு நீங்கள் ரொம்ப சிரமப்பட வேண்டும். கோரக்கிழங்கு பவுடரை மட்டும் உபயோகிக்க மறந்துவிடாதீர்கள்.
ஆயுர்வேத சிகிச்சையில் உத்வர்தர்ணம் என்ற சிகிச்சை வழங்கப்படும் எனவும் இதற்கு கோரக்கிழங்கு பவுடரைத் தான் உபயோகிக்கிறோம் எனத் தெரிவிக்கும் ஆயுர்வேத மருத்துவர் இதனை இப்படி பயன்படுத்துங்கள் என்கிறார்.
உடல் தொப்பை மற்றும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு குறைப்பதற்கு முதலில் எப்போதும்போல் எண்ணெய் தேய்த்துக்குளிக்க வேண்டும். பின்னர் கோரக்கிழங்கு பவுடரை கீழிலிருந்து மேலாக ஒரு 4 முறை நன்றாக தேய்த்துக்குளிக்க வேண்டும்.
இப்படி தொடர்ந்து 10 நாள்கள் மேற்கொண்டாலே நல்ல ரிசஸ்ட் கிடைத்துவிடும். இதோடு மட்டுமின்றி நல்ல டயட்டையும் நீங்கள் பாலோ பண்ண வேண்டும். காலையில் சிறிதளவு உணவு, மதியம் நல்ல சாப்பாடு, இரவில் கஞ்சி,சூப் போன்று எவ்வளவு வேண்டுமானாலும் நீங்கள் பருகலாம். இதனால் உங்கள் உடல் எடையைக் குறைக்கலாம்.
குறிப்பாக பெண்கள்தான் குடும்பத்தோட ஆணிவேர் நீங்கள் என்பதால் உங்களை நீங்கள் நன்றாக முதலில் பார்த்துக்கொள்ளுங்கள். இவ்வாறு செய்தாலே உங்களது உடல் எடையை நீங்கள் எளிய முறையில் குறைத்துவிடலாம்.
தொப்பையைக் குறைப்பதற்காக வேறு சில வழிமுறைகள் இதோ உங்களுக்காக…
உடலில் உள்ள தொப்பையைக்குறைக்க வேண்டும் என்றால், தண்ணீரை அதிகளவில் குடிக்க வேண்டும். தண்ணீர் அதிகம் குடித்தால், அடிக்கடி பசி ஏற்படாமல் இருப்பதோடு உடலில் உள்ள கொழுப்புகளின் சேர்க்கையைக் குறைக்கிறது.
இதோடு நீங்கள் உணவில் உள்ள உப்பின் அளவைக்குறைத்துக்கொள்ள வேண்டும். இதனால் உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதலை விளைவிப்பதோடு, தொப்பையைக் குறைக்கவும் உதவியாக உள்ளது.
பச்சைக்காய்கறிகளை அதிகளவில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
ஜங்க் உணவுகள் உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
இதோடு இடுப்பைப் பக்கவாட்டில் வளைப்பது, வயிற்றை முன்புறம் அழுத்துவது போன்ற பயிற்சிகளை செய்து வந்தால், தொப்பைக் குறையும் எனவும் கூறினார்.