வீட்டில் உள்ள ஏசியை எந்தவித டெக்னீசியன் உதவி இல்லாமல் வீட்டிலேயே எளிமையான முறையில் நீங்களே சுத்தம் செய்யமுடியும்.
கோடைக்காலம் தொடங்கி மக்களை வாட்டி வதைக்கின்ற நிலையில், ஏசி இருந்தால் நன்றாக இருப்போம் என நினைப்போம். இது மட்டுமில்லாமல் வீட்டில் உள்ள பழைய ஏசிகளை சரிசெய்து விட வேண்டும் என்ற நினைத்து டெக்னீசியன்களுக்கு போன் செய்வோம். ஆனால் என்ன? இதோ மனநிலையோடு பலரும் வீட்டில் உள்ள ஏசியை சரிசெய்ய வேண்டும் என்று முன்பே அப்பாயின்மென்ட் வாங்கியிருப்பார்கள். எனவே நாம் புக்கிங் செய்தாலும் குறித்த நேரத்தில் அவர்களால் வரமுடியாது. ஒன்றிரண்டு வாரங்கள் கூட ஆகும் என்ற பதிலைத்தான் நமக்கு அளிப்பார்கள்.
இதேப்போன்று பல டெக்னீசியனும் பதில் அளிக்கும் நிலையில், உங்கள் ஏசியில் உள்ள கூலிங் பிரச்சனையை வீட்டிலே நீங்களே சரி செய்ய முடியும். ஆனால் நாம் ஏசியை சரிசெய்யும் போது என்ன செய்ய வேண்டும் என்ற கவலை வேண்டாம். மிகவும் ஈஸியான வழிமுறைகள் உங்களுக்காகவே உள்ளது.
ஏசியை சுத்தம் செய்யும் வழிமுறை இதோ..
உங்களது வீட்டில் உள்ள ஏசியை நீங்கள் சுத்தம் செய்வதற்கு முதலில் பவர் சப்ளையை நிறுத்திவிட வேண்டும். பின்னர் உங்களது ஏசி பேனலை திறந்து, ஃபில்டரை அகற்ற வேண்டும். ஒருவேளை உங்களது ஏசியில் ஒன்றுக்கும் மேற்பட்ட பில்டர் இருந்தால் ஒவ்வொன்றாக கழற்றி வைக்க வேண்டும். இதனையடுத்து புதிய டூத் பிரஷ் ஒன்றை எடுத்துக்கொண்டு எவப்பரேட்டரில் உள்ள தூசுக்களை மெல்ல மெல்ல அகற்ற வேண்டும். இவ்வாறு மேற்கொள்ளும் போது கவனத்துடன் செயல்பட வேண்டும். ஏனென்றால் காயிலில் உள்ள கம்பிகள் உங்களது கைகளை பதம் பார்த்துவிடும்.
அடுத்ததாக சுத்தமான துணியை எடுத்துக்கொண்டு, ஏசி ஃபில்டர்களை டேப் மீது வைத்து முழுமையாக சுத்தம் செய்ய வேண்டும். உங்களது பில்டரில் உள்ள ஈரம் காய்ந்தவுடன், எப்படி இருந்ததோ அப்படியே மாட்டிவிடுங்கள். இதனையடுத்து ஏசியை ஆண் செய்து ஜில்லென்ற கூலிங் உங்களுக்கு கிடைக்கிறதா? என்று செக் செய்துக்கொள்ளுங்கள்.
இதோடு உங்களது ஏசியில் அவுட்டோர் யூனிட் சுத்தம் செய்வது என்பது கடினமான விஷயம். எனவே இதற்கு முதலில் ஏசியை கண்ட்ரோல் செய்யும் ஃப்யூஸ்களை ஆஃப் செய்து விடுங்கள். பின்னர் ஏர் கண்டிஷனர் மேலே உள்ள கண்டென்சர் பின்ஸ் உள்ளே இருக்கும் காற்றை வெளியேற்றுங்கள். இதனையடுத்து உங்களது ஏர்-ப்ளோவுக்கு தடையாக உள்ள எந்தவொரு தூசி அல்லது அழுக்கை சுத்தம் செய்துவிடுங்கள். எனவே மேற்கண்ட முறைகளில் உங்கள் வீடுகளில் உள்ள ஏசியில் கூலிங் பிரச்சனையை நீங்களே சுலபமாக சரிசெய்ய முயற்சிசெய்யுங்கள்.