சூடான நீரில் குளிப்பது உடலுக்கு நல்ல பலன்களைக் கொடுக்கும் என்றாலும் குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பது உங்களை விழிப்படையச் செய்வது மட்டுமல்லாமல் உடலில் இரத்த ஓட்டம் மற்றும் ஆக்ஸிஜன் உட்கொள்ளலை அதிகரிக்கிறது. குளிர்காலத்தில் குளிர்ந்த நீர் என்பதை நினைத்தாலே உங்களுக்கு உடல் சில்லிடுவது எனக்குப் புரிகிறது ஆனால் இது குறிப்பிடத்தக்க சில ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.
நீங்கள் குளிர்ந்த நீரில் ஏன் குளிக்க வேண்டும் என்பதற்கான சில காரணங்கள் இங்கே...
மேம்படுத்தப்பட்ட இரத்த ஓட்டம்
குளிர்ந்த நீரில் குளிப்பது மிக முக்கியமாக இரத்த சுழற்சியை அதிகரிக்கும். குளிர்ந்த நீர் உடலைத் தொடும் போது, அது நமது இரத்த ஓட்ட அமைப்பை அதன் இயக்கத்தை அதிகரிக்கிறது மேலும் நமது உடல் வெப்பநிலையை பராமரிக்க இதயத்துக்கு வேகமான விகிதத்தில் இரத்தத்தை செலுத்துகிறது. இது உடலில் உள்ள வீக்கத்தைக் குறைக்க இரத்த ஓட்ட அமைப்பைத் தூண்டுகிறது. மேலும் இருதய நோய்களைத் தடுக்க உதவுகிறது.
எரிச்சல் மற்றும் அரிப்பு அல்லது பிறவற்றை ஏற்படுத்தும் சருமம் உங்களுக்கு இருந்தால், குளிர் நீரானது, காயம் மற்றும் வீக்கம் அல்லது வெடிப்புகளை ஆற்றுப்படுத்தும் அதனைச் சமாளிக்க உதவும். அதற்கு பதிலாகச் சூடான நீர் தோல் உலர்வதற்கு வழிவகுக்கும் மற்றும் எரிச்சல் அல்லது சிவத்தல் ஆகியவற்றை அதிகரிக்கும்.
குளிர்ந்த நீர் உங்கள் உடலில் பட்டவுடன், ஒரு சிறிய அதிர்ச்சி ஏற்படுகிறது. இந்த அதிர்ச்சி உடலின் ஆக்ஸிஜன் உட்கொள்ளலை அதிகரிக்கிறது மற்றும் இதயத் துடிப்பை அதிகரிக்கிறது மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. கடினமான பயிற்சிக்குப் பிறகு குளிர்ந்த நீரும் நன்மை பயக்கும், ஏனெனில் இது புண் ஏற்பட்ட தசைகளை தளர்த்தும். மறுபுறம் சூடான நீர் தசைகளை தளர்த்தும் மற்றும் நல்ல தூக்கத்தை உறுதிப்படுத்த தூங்குவதற்கு முன்பு குளிப்பது சரியானது.
சருமத்தின் துளைகளைத் தளர்த்தும் சூடான நீரைப் போலன்றி, குளிர்ந்த நீர் துளைகளை இறுக்குகிறது மற்றும் இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துகிறது, இதன் விளைவாக ஆரோக்கியமான சருமம் பளபளப்பாகிறது. பல அழகு நிபுணர்கள், சருமம் வறண்டு போவதைத் தடுக்கவும், சரும அடுக்கைப் பாதுகாக்கவும், வெந்நீருக்குப் பதிலாக வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் முடியைக் கழுவ பரிந்துரைக்கின்றனர். குளிர்ந்த நீர் மயிர்க்கால்களை மூடி பலப்படுத்துகிறது.
குளிர் நீர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது மற்றும் ஒருவருக்கு நோய் வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது. "The Effect of Cold Showering on Health and Work: A Randomized Controlled Trial" என்ற தலைப்பில் ஒரு ஆய்வில், குளிர்ந்த நீரில் குளிப்பவர்கள் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்பு 29 சதவீதம் குறைவு என்று கண்டறியப்பட்டுள்ளது.