கேழ்வரகு  ஊட்டச்சத்து நிறைந்த ஒரு தானியம் ஆகும். இதில் கால்சியம் சத்து, விட்டமின்கள் நிறைந்து இருக்கிறது. இதை அனைத்து வயதினரும் எடுத்து கொள்ளலாம். இதில் கேழ்வரகு கூழ் , கேழ்வரகு அடை , கேழ்வரகு களி , ராகி மால்ட் என பல வகைகளில் கேழ்வரகு செய்து சாப்பிட்டு இருப்போம். இப்போது காய்கள் கலந்த ராகி சூப் செய்து சாப்பிட்டு பாருங்கள்.




ராகி சூப் செய்வதற்கு தேவையான பொருள்கள்


ராகி மாவு - 2 டீஸ்பூன்


கேரட், பீன்ஸ், முட்டை கோஸ், - 1 கப்


உப்பு - தேவையான அளவு


மிளகு - சுவைக்கு ஏற்ப




செய்முறை



  • ஒரு பாத்திரத்தில் 2 டீஸ்பூன் ராகி மாவை போட்டு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கட்டிகள் ஏதும் இல்லாமல் கலந்து கொள்ளவும்.

  • காய்களை அனைத்தையும் சிறிது சிறிதாக ஒரு கப் அளவிற்கு நறுக்கி கொள்ளவும்.

  • ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் கொதிக்க வைக்கவும். தண்ணீர் லேசாக சூடான பிறகு, கலந்து வைத்து ராகி மாவை அதனுடன் சேர்த்து கொள்ளவும்.

  • ஒரு கொதி வந்த பிறகு, அதனுடன் நறுக்கி வைத்த காய்களை போட்டு கலக்கவும்.

  • தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.

  • நன்றாக வெந்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு சூப் எடுத்து தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்து கொள்ளலாம்.

  • தேவையான அளவு மிளகு தூள் சேர்த்து கேழ்வரகு சூப் பரிமாறலாம்.


காய்கறிகள் கலந்து கேழ்வரகு சூப் தயார்.




யாரெல்லாம் எடுத்து கொள்ளலாம் ?


குழந்தைகள் , ஊட்டச்சத்து குறைபாடு இருப்பவர்கள், கர்ப்பிணி பெண்கள், உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள், கர்ப்பிணி பெண்கள், கால்சியம் சத்து குறைபாடு காரணமாக உடல் வலி, மூட்டு வலி இருப்பவர்கள் ராகி எடுத்து கொள்ளலாம்.


ராகியில் இருக்கும் ஊட்டச்சத்துகள் - மற்ற அணைத்து தானியங்களை விடவும், இதில் கால்சியம் மற்றும் பொட்டாசியம் சத்து நிறைந்து இருக்கிறது. மேலும், இதில் நார்சத்து, இரும்பு சத்து நிறைந்து இருக்கிறது. குறைந்த கலோரி கொண்ட உணவாகும். ஒரு வேலை உணவாக கேழ்வரகு எடுத்து கொள்ளலாம்.


ராகியின் பயன்கள் -



  • எலும்புகள் மற்றும் மூட்டுகளை வலுப்படுத்துகிறது.

  • பாலூட்டும் தாய்மார்கள் ராகி எடுத்து கொள்வதால், தாய் பால் சுரப்பதற்கு உதவும்.

  • இதில் இரும்பு சத்து நிறைந்து இருப்பதால் இரத்த சோகை பிரச்சனை இருப்பவர்கள் எடுத்து கொள்ளலாம்.

  • இது குறைந்த கலோரி கொண்ட உணவு. வளர் சிதை மாற்றம், உடல் பருமன் பிரச்சனைக்கு சிறந்தது.