நிலக்கடலை, வேர்க்கடலை, மல்லாட்டை ,என ஒவ்வொரு ஊரிலும் ஒரு இதற்கு ஒரு பெயர் உணவு. இது நிலக்கடலையில் எண்ணற்ற பயன்கள் இருக்கிறது. ஊட்டச்சத்து மிக்க ஆரோக்கியமான , குறைந்த கலோரிகள் கொண்ட காலை உணவிற்கு இதோ நிலக்கடலை வெஜிடபிள் சாலட் ரெசிபி




கடலை வெஜிடபிள்  சாலட் செய்வதற்கு தேவையான பொருள்கள்


ஊறவைத்த  நிலக்கடலை - 1 கப்


வாழைத் தண்டு -1/4 கப் ( பொடியாக நறுக்கியது )


வெள்ளரி காய் - 1/4 கப் ( பொடியாக நறுக்கியது )


கேரட்  - 1/4 கப் ( பொடியாக நறுக்கியது )


தக்காளி  -  1 (பொடியாக நறுக்கியது )


பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது )


எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,


கடுகு - ஒரு டீஸ்பூன்,


எண்ணெய் - அரை டீஸ்பூன்,


உப்பு - தேவையான அளவு


கொத்தமல்லி - 2 டீஸ்பூன். (பொடியாக நறுக்கியது )




செய்முறை



  • நிலக்கடலை 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். 12 மணி நேரம் முளை கட்டி வைக்க வேண்டும். இது இயற்கையாகவே கொஞ்சம் பெரிய தானியமாக இருப்பதால் முளைகட்டி வளர்க்க நீண்ட நேரம் எடுத்து கொள்ளும்.

  • ஒரு பாத்திரத்தில் முளைகட்டிய நிலக்கடலை, கேரட், வெள்ளரிக்காய், வாழைத்தண்டு, தக்காளி, பச்சை மிளகாய் போட்டு கலந்து கொள்ளவும்.

  • அடுத்து அதனுடன், எலுமிச்சை சாறு, மிளகு தூள், உப்பு சுவைக்கு தகுந்தாற் போல் சேர்த்து கொள்ளவும்.

  • கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, போட்டு தாளித்து சால்ட் உடன் சேர்க்கவும்.

  • அதன் மேலே கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறலாம்.

  • சுவையான ஆரோக்கியமான சால்ட் தயார்.




பயன்கள்


இது நார்சத்து நிறைந்தது. குறைவாக சாப்பிட்டாலே நிறைவாக இருக்கும். அதனால் உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு சிறந்த காலை  உணவாக இருக்கும்.


இதை செய்வதற்கு நேரம் குறைவாக எடுத்து கொள்ளும். மேலும், ஆரோக்கியமானது.


காலை உணவு தவிர்க்காமல் இதை சேர்த்து கொள்ளலாம். நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்து கொள்ள இதை எடுத்து கொள்ளலாம்.


இதில் புரதம், வைட்டமின் ஏ , வைட்டமின் சி, நார்சத்து, நீர்சத்து , சோடியம், ஆகிய ஊட்டச்சத்துகள் நிறைந்து இருக்கிறது.


ஆரோக்கியமான உணவு தேடுபவர்களுக்கு சிறந்த ஒரு சாய்ஸ் ஆக இருக்கும்.