உப்புமா என்ற பெயரை கேட்டாலே பெரும்பாலோனோருக்கு டென்ஷன் ஆகும். எப்போதும் உப்புமா சாப்பிடு அலுத்து போய் இருந்தால் இதை படியுங்கள். இதில் இருக்கும் ஊட்டச்சத்துகள், ஆரோக்கியம் பற்றி தெரிந்து கொள்ளும் போது இனிமேல் இந்த உப்புமா வேண்டாம் என்று சொல்ல மாட்டீர்கள்




கேழ்வரகு அவல் உப்புமா செய்வதற்கு தேவையான பொருள்கள்


கேழ்வரகு அவல் - 1 கப்


வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது )


கடுகு - 1/2 டீஸ்பூன்


உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்


கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்


காய்ந்த மிளகாய் - 2


பெருங்காயத்தூள் - சிறிதளவு


மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை


கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு


எண்ணெய் - ஒரு டீஸ்பூன்


உப்பு - தேவையான அளவு




செய்முறை



  • கேழ்வரகு அவலை நன்றாக சுத்தம் செய்து 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும்.

  • கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு , உளுந்தப்பருப்பு, பெருங்காயம், மிளகாய், கடலை பருப்பு, சேர்த்து தாளித்து கொள்ளவும். அதனுடன்  வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும்.

  • நன்றாக வதங்கிய பிறகு அதனுடன், கேழ்வரகு அவல் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

  • இதனுடன், மஞ்சள் தூள் , தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். அடுப்பை சிம்மில் வைத்து விடுங்கள்

  • பிறகு, கருவேப்பிலை, கொத்தமல்லி இலைகள் மேலே தூவி விடவும்.


கேழ்வரகு அவல் உப்புமா தயார்





பயன்கள்


கேழ்வரகு புரத சத்து மற்றும் கால்சியம் சத்து நிறைந்த உணவு.


குறைந்த கலோரி இருப்பதால், உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் அனைவரும் இதை காலை உணவாக எடுத்து கொள்ளலாம்.


நீரிழிவு நோயாளிகள் இந்த உணவை எடுத்து கொள்வதால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.


மிகவும் எளிமையான, சீக்கிரம் செரிமானம் ஆக கூடிய உணவாக இருக்கிறது.


தூக்கம் வராமல் நாளை புத்துணர்வுடன் ஆரம்பிக்க இந்த கேழ்வரகு அவல் உப்புமா சிறந்த தேர்வு


கேழ்வரகில் இருக்கும் கால்சியம் சத்து எலும்புகள் அடர்த்தியாக இருப்பதற்கும், மூட்டு வலிகள் வராமல் தடுக்கும்.


ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக வரும் வலிகள் குறையும்.


எப்போதும் எடுத்து கொள்ளும், இட்லி, தோசைக்கு பதில், சிறந்த மாற்றாக இருக்கும்.


உப்புமா பிடிக்காதவர்கள் அனைவரும் இந்த கேழ்வரகு உப்புமா எடுத்து கொள்ளலாம்.