உடல் பருமன் பிரச்சனை பெரியவர்களை மட்டும் பாதிப்பதில்லை. குழந்தைகளையும் சேர்த்து பாதிக்கிறது. உடல் எடை அதிகமாக இருந்தால், குழந்தைகள் அழகாக இருக்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை. அதில் ஆபத்தும் சேர்ந்து  இருக்கிறது. எடை அதிகரிப்பது, நீரிழுவு நோய், வளர் சிதை மாற்றம் போன்ற  பல்வேறு பிரச்சனைகளை தருகிறது. உடல் எடை  அதிகமாக இருக்கும் குழந்தைகள், வளர்ச்சி மந்தமாகவும், எதிலும் ஆர்வம் இல்லாமலும், சுறுசுறுப்பாக இல்லாமல் இருப்பார்கள். இதற்கு காரணம் உடல் பருமன். வயது, உயரம் இதை  வைத்து ஒரு குழந்தையில் உடல் எடை இருக்க வேண்டும்.




தாய்ப் பால் எடுத்து கொண்ட பிறகு, குழந்தைகளுக்கு உணவை பழக்கப்படுத்தும் போது, மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.  இயற்கை சுவை மாறாமல் குழந்தைகளுக்கு உணவை அளிக்க வேண்டும். முடிந்தவரை செயற்கை  சுவைகள்,கடைகளில் இருக்கும் உணவை பழக்கப்படுத்துதல்  போன்ற வற்றை தவிர்க்க வேண்டும்.


 




வீட்டில் சமைத்த உணவுகளை மட்டும் கொடுத்து பழக்குங்கள். இது குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தையும், மூளை வளர்ச்சியையும்  மேம்படுத்துகிறது.


குழந்தைகள் ஆரோக்கியமாக சாப்பிட இதோ அவர்களுக்கான உணவு பட்டியல். இது ஒரு  மாதிரி அட்டவணை மட்டுமே. குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவுகள், அவரவர் விருப்பத்திற்கும், ஆரோக்கியத்தை சமரசம் செய்யாமலும் இருக்க வேண்டும்.




காலை எழுந்ததும் - பால் + நாட்டு சர்க்கரை / பாதாம் பால் (வீட்டில் செய்தது )


காலை உணவு - இட்லி/ தோசை + காய்கறி  சட்னி /  பழங்கள் + ராகி கஞ்சி / சத்து  மாவு கஞ்சி


காலை உணவுக்கு பின் - காய்கறி சூப் / கீரை சூப்


மதிய உணவு - சாதம் / சப்பாத்தி +ஏதேனும் 1 காய் + பருப்பு + ரசம் +மோர்


மாலை - பாதாம் பருப்பு + பேரீச்சம் பழம் + வால்நெட்-2 / ஏதேனும் ஒரு பழம் / ஏதேனும் ஒரு தானியம் வேகவைத்து  கொடுக்கலாம்


இரவு - காய்கறி சாதம் / இட்லி/ சப்பாத்தி + காய்கறி மசாலா




தூங்குவதற்கு முன் - 1 கிளாஸ் பால்


இந்த மாதிரி ஒரு சரிவிகித உணவை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.


எந்த உணவை தவிர்க்க வேண்டும் - கடைகளில் விற்கும் சிப்ஸ் போன்றவை, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட ஸ்னாக்ஸ், சர்க்கரை, செயற்கை இனிப்பூட்டிகள், ஐஸ் கிரீம், சாக்லேட், பிஸ்கட் இவைகளை தவிர்க்க வேண்டும்.


குழந்தைகைளுக்கு இது போன்ற உணவுகளை கொடுக்காமல் இருக்க வேண்டும். ஏற்கனவே கொடுத்து பழக்கப்பட்டு இருந்தால், இந்த உணவுகளை எடுத்து  கொள்வதால் வரும் தீங்கை சொல்லி கொடுத்து கொஞ்சம் கொஞ்சம் ஆக பழக்கத்தை மாற்றுங்கள்.