இந்திய சமையலறைகளில் முக்கியமான மசாலா பொருள் கிராம்பு. இதன் தனித்துவமான சுவை உணவிற்கு ருசி தருகிறது.  மேலும், உணவில் கிராம் சேர்த்து கொள்வதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.


கிராம்பின் அறிவியல் பெயர் Syzygium aromaticum. இதில் பல மருத்துவ குணங்கள் ஒளிந்திருக்கிறது. கிராம்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வயிற்று வலி, பல் வலி, தொண்டை வலி ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணி. கிராம்பில் யூஜெனால் என்ற தனிமம் இருக்கிறது. இதனால் மன அழுத்தம், வயிற்றுக் கோளாறுகள், பார்கின்சன் நோய், உடல்வலி போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாகிறது. இதில் உள்ள வைட்டமின் ஈ, வைட்டமின் சி, ஃபோலேட், ரிபோஃப்ளேவின், வைட்டமின் ஏ, தியாமின், வைட்டமின் டி, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் போன்ற உடலுக்கு அத்தியாவசியமாக இருக்கிறது.


பொதுவாக கிராம்பை இப்போதுதான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் இல்லை. எல்லா நேரங்களிலும் கிராம்பு சாப்பிடலாம். குறிப்பாக, தூங்குவதற்கு முன்,  கிராம்பு உட்கொண்டால், அதன் பலன்கள் அதிகம்.


இரவு தூங்குவதற்கு முன், கிராம்பை எப்படி சாப்பிட வேண்டும்?


இரவில் படுக்கும் முன் இரண்டு கிராம்புகளை மென்று சாப்பிடுங்கள். அதோடு, 1 கிளாஸ் சுடு த்ண்ணீர் குடிக்க வேண்டும். இது முகப்பரு உள்ளிட்ட பல பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது.


 ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ள கிராம்பில்,  முகப்பரு வராமல் இருக்க உதவும் ஒரு குறிப்பிட்ட வகை சாலிசிலேட்டும் உள்ளது.


கிராம்பை இரவில் உட்கொள்வதால் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்ற வயிற்று பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். செரிமான மண்டலம் சீராக வேலை செய்ய வைக்கிறது.


இது தொண்டை புண் மற்றும் வலியிலிருந்து விடுபட உதவுகிறது.


சளி, இருமல், வைரஸ் தொற்று, மூச்சுக்குழாய் அழற்சி, சைனஸ், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட கிராம்பை தினமும் எடுத்க்துக் கொள்ளலாம்.


பற்களில் சொத்தை இருந்தால், கிராம்பை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து சாப்பிடலாம். பல்வலியைப் போக்க கிராம்பு மிகச் சிறப்பாக செயல்படுகிறது.


கிராம்பு சாப்பிடுவதால் வாயில் இருந்து துர்நாற்றம் வீசும் பாக்டீரியாக்கள் அழிக்கப்படுகின்றன. மேலும், கிராம்பு நாக்கு மற்றும் மேல் தொண்டை பகுதியில் உள்ள பாக்டீரியாக்களை சுத்தம் செய்ய உதவுகிறது.


கை, கால் நடுக்கம் பிரச்சனை இருப்பவர்கள், தூங்குவதற்கு முன் ஒன்று அல்லது இரண்டு கிராம்புகளை வெதுவெதுப்பான நீருடன் எடுத்துக் கொள்ளலாம். தொடர்ந்து சாப்பிட்டால், பலன் தெரியும்.


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நினைப்பவர்கள், தினமும் கிராம்பு எடுத்துக் கொள்ளலாம்.