கோடைகாலத்தில் அதிக தண்ணீர் குடித்து இருப்போம். உடலுக்கு தேவையான தண்ணீர் குடித்து உடலை ஆரோக்கியமாக வைத்து இருப்பது எனபல முறைகளை பின்பற்றி இருப்போம். ஆனால் மழைக்காலத்தில் இது முடியாமல் போகும். சூடாக ஏதாவது குடிக்க வேண்டும் என தோன்றும். இந்த பெருந்தொற்று காலத்தில் உடலை ஆரோக்கியமாக வைத்து இருப்பது மிகவும் அவசியம். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை சரியாக வைத்து இருந்தால் மழை காலத்தில் வரும் தொற்று நோய்கள் வராமல் பாதுகாக்கலாம்.மேலும், சில நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாகும் பானங்களை பற்றி தெரிந்து கொள்வோம்...




தேன் - எலுமிச்சை - இஞ்சி டீ - 3 கப் தண்ணீர் எடுத்து, அதில் சிறிது இஞ்சி மற்றும் தேயிலைகளை போட்டு கொதிக்க வைக்கவும், நல்ல கொதித்தபின் அதை இறக்கி, சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்து வடிக்கட்டி தேவையான அளவு தேன் சேர்த்து பருகலாம். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்துகிறது. மேலும், மழைக்காலத்தில் வரும் தோற்று நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.


இளநீர் எலுமிச்சை பானம் - இளநீரை உடைத்து நீர் தனியாக எடுத்து, வைத்து கொண்டு அதில் இருக்கும் தேங்காயை இந்த இளநீருடன் சேர்த்து கொள்ளவும். பின் அதில் எலுமிச்சை மற்றும், சில புதினா இலைகளை சேர்த்து தேவையான அளவு தேன் கலந்து பருகலாம்.


மழைக்காலத்தில் தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்போம். உடலுக்கு தேவையான நீர் சத்து கிடைக்க உதவியாக இருக்கும்.


ஆரஞ்சு மற்றும் இஞ்சி பானம் - ஆரஞ்சு மற்றும் கேரட் இரண்டையும் தனியாக சாறு எடுத்து கொள்ளவும். பின்னர் அதை இரண்டையும் ஒன்றாக கலந்து, மஞ்சள் சிறுதளவு, இஞ்சி சுவைக்காக சேர்த்து மிக்ஸியில் கொஞ்சம் அரைத்து அனைத்தையும் ஒன்றாக கலந்து கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் வடிகட்டி தேவையான அளவு எலுமிச்சை சாறு சேர்த்து பருகலாம்.


மழைக்காலத்திற்கு ஏற்ற பானமாக இருக்கும். இது உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி உடலை  சுறுசுறுப்பாக வைக்கிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்துகிறது.


மசாலா டீ - ஒரு கப் பால், தேவையான அளவு தண்ணீர், இஞ்சி, தேயிலை சேர்த்து கொதிக்க வைக்கவும். கிராம்பு, பட்டை சேர்த்தும் சிலர் தயாரிப்பார்கள். இது அவரவர் சுவைக்கு தகுந்தாற் போல் மாறுபடும். டீ நன்றாக கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டி அதனுடன் சில துளசி இலைகளை சேர்த்து பருகலாம். தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கொள்ளலாம்.இது மழை காலத்திற்கு ஏற்ற பானமாகும். உடலின் நோய் எதிப்பு சக்தியை அதிக படுத்துகிறது. மழைக்காலத்தில் அடிக்கடி டீ குடிக்க வேண்டும் போல தோன்றும். அதற்கு சிறந்த தீர்வாக அமையும்