தந்தையர் தினம்(Fathers Day) உலகம் முழுவதும் மிகுந்த மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 18) கொண்டாடப்படுகிறது. நம் வாழ்க்கையை வடிவமைப்பதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கும் தந்தைகளை கொண்டாடுவதற்காக இந்த நாள் நினைவுகூரப்படுகிறது. தந்தைகள் மற்றும் தந்தையாக வாழ்வில் இருப்பவர்கள் தங்கள் குழந்தைகளின் வாழ்க்கையை சிறப்பாக மாற்றுவதில் அளிக்கும் பங்களிப்பை போற்ற, அங்கீகரிக்க உலகம் முழுவதும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. பொதுவாகவே இது ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த சந்தர்ப்பம் நெருங்கி வருவதால், மக்கள் இந்த நிகழ்வைக் கொண்டாடுவதற்கான ஆக்கப்பூர்வமான வழிகளைக் கண்டுபிடிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். தங்கள் தந்தையை எப்படி சிறப்பாக உணர வைப்பது என்பதில் தங்களது சிந்தனையை செலுத்துகின்றனர். அதற்கு முக்கியமான வழி, வாழ்த்து அட்டை அல்லது கடிதம் தான். கடிதம் எழுதுவது உன்னதமாகவும், புனிதமாகவும் இருக்கும். ஆனால் என்ன எழுதுவது என்று பலருக்கும் சந்தேகம் இருக்கலாம்.
அதற்காக, இங்கே சில அழகான கடித யோசனைகள் கொடுக்கப்பட்டுள்ளன, அதில் இருந்து உங்களுக்கு தேவையான கடிதத்தை எழுதுவதற்கான, மனதைக் கவரும் வகையிலான குறிப்புகளை எடுக்கலாம்.
- நன்றி சொல்லி கடிதம்
அன்புள்ள அப்பா, நான் உங்களை நன்றாக வளர்க்கும், அன்பான, அக்கறையுள்ள, நல்ல இதயமுள்ள நபராக அறிந்திருக்கிறேன். நீங்கள் ஒருபுறம் சிந்தனையுடனும் மென்மையாகவும் இருக்கிறீர்கள், மறுபுறம் மர்மமானவராகவும், விரைப்பாகவும் இருக்கிறீர்கள். நான் உங்களை ஒரு எழுத்தாளர், விமர்சகர், அறிவுஜீவி மற்றும் தத்துவவாதியாக அறிவேன். எனது எல்லா பிரச்சனைகளையும் தீர்க்கும் மற்றும் என் தவறுகளை மன்னிக்கக்கூடிய ஒரு நபராகவும் உங்களை நான் அறிவேன். எனக்காக நீங்கள் செய்த அனைத்திற்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். நான் உங்களை நேசிக்கிறேன், என் கடைசி மூச்சு வரை இன்னும் நேசிப்பேன் என்று உங்களிடம் சொல்ல விரும்புகிறேன்.
- நன்றியுணர்வு கடிதம்
என்னை நீங்கள் பள்ளியில் விட்டு செல்லும் போதெல்லாம், நான் உங்களிடம் திரும்பி வருவதற்காக, எப்போது கடைசி பெல் அடிக்கும் என காத்திருப்பேன். உங்கள் கடி ஜோக்குகள் என்னை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது. இன்று நான் என்னவாக இருக்கிறேன் என்பதற்கு முழு காரணம், எனது பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் நீங்கள் ஊக்கத்தால்தான். நீங்கள் காட்டிய பாதையில் நான் நடந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எல்லாவற்றிற்கும் நன்றி அப்பா, ஐ லவ் யூ!
- ஐ லவ் யூ லெட்டர்
நான் உங்களுக்கு ஒருபோதும் கடிதம் எழுதுவதே இல்லை, எப்போதும் அம்மாவுக்கு மட்டுமே எழுதுகிறேன். இப்போது எழுதுவதற்காக ஆச்சரியப்பட வேண்டாம். நான் என் மகிழ்ச்சியை வெளிப்படுத்த விரும்புகிறேன், என்னை உங்கள் வீட்டிற்குள் படைத்ததற்காக கடவுளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். நீங்கள் என்னை முத்தமிடும் போதெல்லாம் என் கைகளைப் பிடிக்கும் போதெல்லாம் என் இதயம் மகிழ்ச்சியால் நிரம்புகிறது. நான் உங்கள் மீது அவ்வளவு அன்பு செலுத்த, பல காரணங்கள் உள்ளன, அப்பா. கற்றுக்கொள்வது, பேசுவது, நடப்பது எப்படி என்பதைகூட நீங்கள்தான் எனக்குக் கற்றுக் கொடுத்தீர்கள். என் வாழ்நாள் முழுவதும் நான் உங்களைப் புகழ்வேன்.
- அன்பான கடிதம்
உங்களைப்போல் அற்புதமான தந்தையைப் பெற்ற நான் அதிர்ஷ்டசாலி. நீங்கள் என் அப்பா மட்டுமல்ல, என் சிறந்த நண்பர், பயிற்சியாளர் மற்றும் ஹீரோ. நீங்கள் தந்த ஊக்கம், ஆறுதல் மற்றும் வழிகாட்டுதலுக்காக நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன். நீங்கள் மதிப்புமிக்க மனிதர் மட்டுமல்ல வலுவான, அக்கறையுள்ள தந்தை. இவ்வளவு அழகான நினைவுகளை கொடுத்ததற்கு நன்றி.
- தூரமாக இருக்கும் அப்பாவுக்கு கடிதம்
என் வாழ்க்கையை கட்டியெழுப்ப நீங்கள் எவ்வளவு முக்கியம் என்பதை நான் மிகவும் தாமதமாகத்தான் உணர்ந்தேன். அதற்காக நான் உங்களுக்கு போதுமான அளவு நன்றி சொல்லவில்லை. நீங்கள் தான் என் முதல் சூப்பர் ஹீரோ, முதல் ரோல் மாடல், முதல்… எல்லாமே. இப்போது என் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் நான் உங்கள் அருகில் இல்லாததை நினைத்து வருந்துகிறேன். தடைகளை கடக்க எனக்கு பலத்தையும் ஞானத்தையும் கொடுத்ததற்கும், என்னுடன் பொறுமையாக இருந்ததற்கும் நன்றி. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் என்னைப் புரிந்துகொண்டு என்னை நேசித்ததற்கு நன்றி. ஐ லவ் யூ, அப்பா, நீங்கள்தான் என் உலகம்!