பொடி இட்லி, கோழி இட்லி போன்ற பல வகையாக இட்லிகளுக்கு சென்னையில் இந்த 9 இடங்கள் தான் மிகவும் பிரபலமானது என்று  கூறப்படுகிறது.


நாம் பெரிய 5 ஸ்டார் ஹோட்டல்களுக்குச் சென்றாலும் நம்மிடம் வந்து என்ன வேணும் ?என கேட்கும் போது, நாம் யோசித்தாலும் சட்டென்று நாம் கேட்பது இட்லி இருக்கா? என்று தான். அந்தளவிற்கு நம் உணவு முறைகளில் நம்முடன் சேர்ந்துப் பயணிக்கிறது இட்லி. காலை உணவாக மட்டுமின்றி அனைத்து வேளைகளையும் சாப்பிடக்கூடிய அளவிற்கு பல வகையான இட்லிகள் உள்ளது. அதிலும் குறிப்பாக சென்னை மக்கள் மிகவும் விரும்பிச்சாப்பிடக்கூடிய இட்லி வகைகள் மற்றும் அந்த உணவகங்கள் அமைந்துள்ள இடம் குறித்து இங்கே நாம் அறிந்துக்கொள்வோம்.


முருகன் இட்லி கடை பொடி இட்லி:


முருகன் இட்லி கடை மதுரையில் தொடங்கியிருந்தாலும் சென்னையிலும் மக்களிடம் நல்ல அங்கீகாரத்தைப்பெற்றுள்ளது. குறிப்பாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் சுற்றுலாப்பயணிகள் வந்தாலும் பல்வேறு வகையான சட்னிகளுடன் இட்லியைச் சாப்பிட விரும்புவார்கள். அதிலும் பொடி இட்லியில், நெய் மற்றும் மிளகாய்பொடி கலந்து செய்யப்படும் இட்லியின் சுவை கூடுதல் சுவையளிக்கும். இந்த வகையான இட்லிகள் சென்னையில் பல இடங்களிலும் காணப்படுகிறது.





ராமசேரி இட்லி:


சென்னை ஹாடோஸ் சாலையில் ராமசேரி இட்லி கிடைக்கப்பெறும். ராமசேரி என்பது கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள சிறிய கிராமமாகும். இங்கு வழக்கமான இட்லியை விட மிகவும் மெல்லியதாக இட்லி இருக்கும். இந்த வகையான இட்லிகளை நீங்கள் சுவைக்கும் போது உங்களுக்கு தடினமான தோசைகள் தான் நினைவுக்கு வரும். ஆனாலும் இந்த இட்லி மிகவும் மிருதுவாக இருக்கும். சென்னையின் மிகச்சிறந்த கேரள சமையல் உணவகங்களில் ஒன்றான கப்பா சக்க கந்தாரியில் தான் கிடைக்கப்பெறுகிறது.


.சரவணபவன் மினி இட்லி:


சென்னையில் பல்வேறு இடங்களில் உள்ள சரவணபவன் மினி இட்லி கிடைக்கப்பெறுகிறது. நெய் மற்றும் சாம்பாருடன் சிறிய அளவிலான இட்லியை கலந்து பரிமாறுகையில் இதன் சுவை மக்களை அதிகளவில் கவர்ந்துள்ளது.


குணா பாய் கடை செஸ்வான் இட்லி:


சென்னையில் பல இடங்களில் பல வெரைட்டியான இட்லிகள் உள்ளது போல் சௌகார்பேட்டையில் உள்ள குணா பாய் கடை செஸ்வான் இட்லியும் தான். பரபரப்பான சவுகார் பேட்டை பகுதியில் உள்ள இந்த கடையில் கேப்சிகம், வெங்காயம், சிறிது தக்காளி  மற்றும் வெங்காயத்துடன் சேர்த்து தனித்தன்மை வாய்ந்த மசாலா கலவையுடன் செய்யப்பட்ட செஷ்வான் இட்லி மிகவும் பிரபலமானது. எப்போதுமே இந்தக் கடையில் கூட்டம் அலைமோதும் என்றே கூறலாம்.


தட்டு இட்லி:


சென்னை அபிராமபுரம் சிபி ராமசாமி சாலையில் உள்ள உணவகத்தில் தட்டு இட்லி மிகவும் பிரபலமானது. பெங்களூருவின் சுவையை விரும்பும் சென்னை மக்களுக்குப் பிடித்தமான உணவகமாக உள்ளது. மற்ற இட்லிகளைப்போல் இல்லாமல் தட்டு அளவில் காணப்படும் இந்த தட்டு இட்லிகள் பஞ்சு போன்று இருக்கும். இட்லி பொடியுடன் கலந்து சாப்பிடும் முறை பேமஸாக உள்ளது. குறிப்பாக சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலும் தட்டு இட்லி மிகவும் பிரபலமானது.


 





 


கோழி இட்லி:


இட்லி என்றாலே பல வகையான சட்னிகள் தான் நமக்கு நினைக்கு வரும். ஆனால் அதுமட்டுமில்லை. ஞாயிறு அல்லது அனைத்து விசேச நாள்களிலும் பல வீடுகளில் காலை உணவு இட்லியாக இருந்தாலும் அதற்கு சிக்கன் அல்லது மட்டன் கிரேவி வைத்து சாப்பிடும் பழக்கம் உள்ளது. இப்படி தனிச்சுவையுடன் சென்னையில் கோழி இட்லி அவ்வை சண்முகம் சாலை, ராயப்பேட்டையில் சிடைக்கப்பெறுகின்றது. கோழி தொக்கு, பெப்பர் சிக்கன் போன்றவை இட்லிக்குப் பயன்படுத்தப்படுகிறது.


இதேப்போன்று உடுப்பு ஸ்டைல் இட்லி, நியூஉட்லேன்ஸ் மற்றும் கிருஷ்ணா உணவகத்தின் ரவா இட்லி, Kadubbu idli at Mathsya போன்றவையும் சென்னையில் மிகவும் பிரபலமாக உள்ளது.