Mosambi Juice Benefits: நாம் எடுத்து கொள்ளும் உணவுகள் நமக்கே தெரியாமல் எண்ணற்ற நன்மைகளை நமக்கு தருகிறது. அடிக்கடி எடுத்து கொள்ளும் சாத்துக்குடி ஜூஸ் பல்வேறு நன்மைகளை தருகிறது. இது சிட்ரஸ் பழ வகையை சேர்ந்தது. ஒவ்வொரு ஊரிலும் இதற்கு ஒரு பெயர் உண்டு. இது அதிகமாக ஜூஸ் ஆக எடுத்து கொள்ள படுகிறது. பழமாக சாப்பிடுவது குறைந்து அதிகமாக ஜூஸ் ஆக எடுத்து கொள்ள படுகிறது. இந்த ஜூஸ் உடலில் நீர்ச்சத்தை அதிக படுத்துகிறது. இதில், வைட்டமின் சி, பைட்டோ நியுட்ரியன்கள், ஆண்டி ஆக்ஸிடென்ட்கள், தாதுக்கள் நிறைந்து இருக்கிறது. இது நீர்சத்து நிறைந்த ஒரு பழமாகும். இது அனைத்து பருவ நிலைகளிலும் எடுத்து கொள்ள முடியும்.
பசியை தூண்டுகிறது - இது உமிழ் நீரை சுரப்பிகளை தூண்டுகிறது. அதனால் பசியை அதிகரிக்கும். செரிமான பிரச்சனை, பசியின்மை பிரச்சனைகள் இருப்பவர்கள், இதை எடுத்து கொள்ளும் போது பசியை தூண்டும்.
கர்ப்பிணி பெண்கள் - கர்ப்ப காலத்தில் முதல் மாதத்தில் வரும் குமட்டல் வாந்தி போன்ற தொந்தரவுகள் வரும். அந்த நேரத்தில் சாத்துக்குடி ஜூஸ் குடிப்பது குமட்டல், மற்றும் வாந்தி வருவதை குறைக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்துகிறது - வாரத்திற்கு 3 முறை இந்த சாத்துக்குடி ஜூஸ் குடிப்பது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிக படுத்துகிறது. அதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. சளி , இருமல், காய்ச்சல் போன்ற பாக்டீரியா தொந்தரவுகள் வராமல் தடுக்கும்.
வயிறு புண்களை குணமாக்கும்- நீண்ட நாட்களாக இருக்கும் வயிறு புண்கள் மற்றும் வாய் புண்கள் இருப்பவர்கள் இதை எடுத்து கொள்ளலாம். இது வயிற்றில் இருக்கும் அமில சுரப்பை சமநிலை படுத்துகிறது. அதனால் வயிறு புண்கள் சரி ஆகும். வெறும் வயிற்றில் எடுத்து கொள்ள கூடாது. இது சிட்ரஸ் வகை பழம் அதனால், வெறும் வயிற்றில் எடுத்து கொள்ள கூடாது
ஸ்கர்வி வராமல் தடுக்கும் - ஸ்கர்வி ஆனது வைட்டமின் சி குறைபாட்டால் வரும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகும். சாத்துக்குடி குடிப்பது ஸ்கர்வி வராமல் தடுக்கும். இது ஈறுகளில் வீக்கம் மற்றும் இரத்தம் வடிதல் போன்ற அறிகுறிகள் இருக்கும். சாத்துக்குடி எடுத்து கொள்வதால், இது போன்ற வைட்டமின் சி பிரச்சனை குறையும்.
எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது - சாத்துக்குடி ஜூஸ் எடுப்பதால் இது எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எலும்புகளின் திசு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதனால் சாத்துக்குடி ஜூஸ் எடுத்து கொள்ளலாம். இதனுடன் சர்க்கரை சேர்க்காமல் எடுத்து கொள்ள வேண்டும்.
சாத்துக்குடி ஜூஸ் குடிப்பது இது போன்ற எண்ணற்ற பயன்களை தருகிறது.