மில்க் ஷேக் மற்றும் ஸ்மூத்தி விரும்பாதவர்கள் இல்லை. பழங்களுடன் பால் சேர்த்து சாப்பிடுவது வழக்கமான ஒன்று. ஆனால், வாழைப்பழத்துடன் பால் சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியமானது இல்லை என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதற்கான விளக்கத்தை இங்கே காணலாம்.
வாழைப்பழம், பால் இரண்டும் சேர்த்து சாப்பிடலாமா?
வாழைப்பழத்துடன் பால் சேர்த்து சாப்பிட ருசியாக இருந்தாலும் ஆனால் அது ஆரோக்கியமானது அல்ல. அது பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். வாழைப்பழம் மற்றும் பால் இரண்டையும் சாப்பிடுவது நல்லதா கெட்டதா? சிலர் வாழைப்பழத்தை பாலுடன் சேர்த்து சாப்பிடுவது அவ்வளவு நல்லதல்ல என்கின்றனர்.
இது தொடர்பாக ஊட்டச்சத்து நிபுணர் ஹரிஷ் குமார் தெரிவிக்கையில், ”வாழைப்பழம், பால் இரண்டையும் சேர்த்து சாப்பிடுவது பரிந்துரைக்கப்படுவதில்லை. அப்படி நீங்க சாப்பிட விரும்பினால், முதலில் பால் குடித்துவிட்டு, 20 நிமிடங்களுக்குப் பிறகு, வாழைப்பழம் சாப்பிடலாம். ஏனெனில், இது செரிமான செயல்திறனை பாதிக்கும். இரண்டையும் சேர்த்து சாப்பிடுவது தூக்கப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என்கிறார்.
சளி பிடிக்கும் வாய்ப்பு:
”உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்பவர்களும், ஜிம் செல்பவர்களுக்கும் பால், வாழைப்பழம் மில்க்ஷேக், ஸ்மூத்தி ஆகியவற்றை சாப்பிடுவது வழக்கம். இது தொடர்பாக ஊட்டச்சத்து நிபுணர் ஷில்பா அரோரா தெரிவிக்கையில்,”பால் உடன் வாழைப்பழம் சேர்த்து சாப்பிட்டால் அது ஒவ்வாமை இருப்பவர்களுக்கு சுவாசக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும்; சளி ஏற்பட வாய்ப்புள்ளது.” என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
வாழைப்பழத்துடன் பால் சேர்த்து சாப்பிடுவது ஏன் நல்லது என ஆயுர்வேத மருத்துவம் சொல்வதை காணலாம். ஒவ்வொரு உணவுக்கும் அதன் சொந்த சுவை, செரிமானத்திற்கு பிறகான விளைவு, ஓர் உணவை சாப்பிடுவது அது உடலுக்கு குளிர்ச்சியை தருமா அல்லது வெப்பத்தை அதிகப்படுத்துமா என்பது ஒவ்வொரு உணவுக்கு வேறுப்படும். அதற்கு ஏற்றவாறு சாப்பிட வேண்டும். ஆயுர்வேத மருத்துவத்தின் அடிப்படையில், பால் வாழைப்பழம் இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிட கூடாது என்று பரிந்துரைக்கிறது.
வசந்த் லாட் எழுதிய ’The Complete Book of Ayurvedic Home Remedies, A Comprehensive Guide to the Ancient Healing of India’ என்ற புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, பழங்கள் மற்றும் பால் இரண்டையும் சேர்த்து சாப்பிடுவது நல்லது அல்ல என்று குறிப்பிட்டுள்ளது.
தனித்தனியே சாப்பிடுவது நல்லது:
வாழைப்பழம், பால் இரண்டையும் சேர்த்து சாப்பிடுவது அதிலிருந்து டாக்ஸின்ஸ் வெளியாகி சைனஸ் உள்ளிட்ட பிரச்சனையை ஏற்படுத்திவிடும். இதனால் சளி, இருமல் ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது. செரிமான மண்டலத்தில் சீரற்ற நிலையை உருவாக்கிவிடும்.
எனவே, வாழைப்பழம், பால் இரண்டையும் சேர்த்து சாப்பிட கூடாது. இது உடல் நல பிரச்சனைக்கு ஏற்படுத்தும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பால், வாழைப்பத்தை தனித்தனியே சாப்பிட வேண்டும்.
பொறுப்புத்துறப்பு: இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.