உடல் எடையை குறைக்க வேண்டும் என பலரும் தற்போது முனைப்பு காட்டி வருகின்றனர். இது ஆரோக்கியமான விஷயமாக பார்க்கப்பட்டாலும் உடல் எடையை குறைக்க கடுமாயன உடற்பயிற்சிகள் மற்றும் தீவிர உணவு கட்டுப்பாடுகள் அவசியம் என பல்வேறு டயட் பிளான்களை பின்பற்றுபவர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் வெறும் முட்டையை வைத்தே உடல் எடையை குறைக்க முடியும் என்கிறார் Fast 800 என்னும் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் மைக்கல்.  


ஒரு நாளைக்கு 800 கலோரிகள் உடலுக்கு போதுமானது என்பதுதான் இவரின் கூற்று. முட்டையை காலை உணவாக சாப்பிடுவதனால்  அடிக்கடி பசி எடுக்காது. அதோடு அதில் அனைத்து சத்துக்களும் ஒருங்கே கிடைக்கிறது. அதற்கும் மேலாக முட்டையை சாப்பிடுவதனால் எடை குறைகிறது என்கிறார்.




காலையில் உணவுகளை எப்போதுமே தவிர்க்காதீர்கள். அது உங்களின் நாளை தொய்வாக்குவதுடன் அதிக உடல் பிரச்சனைகளையும் நாளடைவில் ஏற்படுத்தக்கூடியது.  காலையில் வேறு உணவுகளை சாப்பிடுவதை விட முட்டையை சாப்பிடுங்கள் என்கிறார் மைக்கல். வேகை வைத்தோ, ஆம்லட்டாகவோ ஏதோ ஒரு வடிவில் முட்டையை சாப்பிடுங்கள். ஆனால் அதில் கொழுப்பு நிறைந்த வேறு பொருட்களை சேர்க்க கூடாது. உதாரணத்திற்கு சீஸ் , இறைச்சி போன்றவை. டீ மற்றும் காஃபியுடன் (பால் கலக்காமல் ) சேர்த்து சாப்பிடலாம்.


முட்டையின் வெள்ளைக்கரு புரதச்சத்து மிக்கதாக அறியப்படுகிறது.மஞ்சள் கரு, கொழுப்பு நிறைந்ததாக கருதப்பட்டாலும், உடலுக்கு நன்மை செய்யும் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. முட்டை உடலில் உள்ள  கெட்ட கொலஸ்ட்ராலை அகற்றி, உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. அதோடு முட்டையில் உள்ள ஒமேகா-3 என்னும் கொழுப்பு அமிலங்கள் முடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு சிறந்தது மேலும்  மூளை செயல்பாட்டை பராமரிக்கவும் உதவியாக இருக்கும்.




ஃபாஸ்ட் 800 நிறுவனம் தனது பயனாளர்களுக்கு  ஒரு நாளைக்கு 800 கலோரிகளை உட்கொள்ள அனுமதிக்கிறது. 800 கலோரிகள் என்பது ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவைக் குறிக்கிறது அதோடு  காலை உணவாக முட்டைகளை உட்கொள்ளவும் ஊக்குவிக்குறது.  முட்டையையும் உணவில் சேர்ப்பதால் இது ஒரு நாளைக்கு 800 கலோரிகள் மட்டுமே உணவை எடுத்துக்கொள்வதற்கு உதவியாக இருக்கிறது.


ஃபாஸ்ட் 800 நிறுவனம் பரிந்துரைக்கும் இந்த முட்டை டயட்டை பின்பற்றும் பொழுது தண்ணீர் , ஜூஸ் போன்றவற்றை அதிகமாக குடிக்க வேண்டியது அவசியமாகிறது. பொதுவாக கார்போஹைட்ரேட்டுகளை உடல் எடை குறைப்பதில் இணைக்க மாட்டார்கள் ஆனால் ஃபாஸ் 800 மாவுச்சத்துள்ள கார்போஹைட்ரேட்டுகளை டயட்டில் சேர்ப்பது அவசியம் என்கிறது. உணவில் இருக்கும் கார்போஹைட்ரேட்டுகள் ஆரோக்கியமான ஒன்றாக இல்லாவிட்டாலும், அவற்றை முற்றிலுமாக அகற்றுவது நல்லதல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். காய்கறிகள் மற்றும் பழங்கள் போலவே  குறைந்த அளவு கார்போஹைட்ரேட்களையும் சேர்த்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.