உறவுகளில், தம்பதிகளிடையே வாக்குவாதங்கள் ஏற்படுவது சகஜம், ஆனால் இந்த வாக்குவாதங்கள் கவனிக்கப்படாமல் நீண்டு கொண்டே போகும் போது, ​​அது உறவை மேலும் வலுவிழக்கச் செய்துவிடும். இது இருவருக்கும் இடையேயான தொடர்பில் பெரிய இடைவெளியை ஏற்படுத்தலாம் ஆனால் தம்பதிகள் ஒருவரையொருவர் விட்டு விலகாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான வழிகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.


நிபுணரும் ஹுகாம் ஹீலிங்கின் நிறுவனருமான கரினா கால்வர் கூறுகையில், “உறவைக் கட்டியெழுப்புவதில் இரு தரப்பினரும் முதலீடு செய்யும் போது சிக்கல் நிறைந்த உறவைச் சேமிக்க முடியும். எதையும் போலவே, ஒரு உறவு நீர் ஊற்றி வளர்க்கப்பட வேண்டும். நீர்ப்பாசனம் இல்லாமல் போகும்போது அது அழகான பூ மலர்வதைத் தடுக்கிறது. தவறாமல் தண்ணீர் ஊற்றும்போது, அது மலர்ந்து ஆரோக்கியமான நிலையான மற்றும் அன்பான ஒன்றாக உருவாகிறது” என்கிறார். அவர் உங்கள் உறவை மேம்படுத்த 3 முக்கியக் குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார்.


1. நீங்கள் மனதில் நினைப்பதை மறைக்காமல் சொல்லவும் - சில சமயங்களில் உறவில் நம் செயல்பாடு ‘அழகாக’ இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம், ஆனால் அவ்வாறு செய்வதன் மூலம் உறவில் நாம் நேர்மையாக இருக்க முடியாது, இது தொடர்ந்தால் உறவைப் பாதிக்கலாம். உங்கள் துணை ஒரு குறிப்பிட்ட ஆடையில் அழகாக இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள், மேலும் அவர்கள் உங்களிடம் உங்கள் கருத்தைக் கேட்கிறார்கள், ஆனால் நீங்கள் அவர்களைக் காயப்படுத்த பயப்படுவதால் நீங்கள் பொய் கூறுகிறீர்கள். இது நியாயமான பொய்யாகத் தோன்றலாம், அவர்களுடன் நேர்மையாக இருப்பதை விட அவர்களால் நீங்கள் விரும்பப்பட விழைகிறீர்கள். நேர்மையைத் தேர்ந்தெடுத்து, குறைந்தபட்சம் புண்படுத்தும் வகையில் சொல்லுங்கள். உங்கள் வார்த்தைகள் உண்மையாக இருக்க வேண்டும் மற்றும் உங்கள் பார்ட்னர் உங்கள் வார்த்தைகளை பைபிளாக நம்பலாம்.இது நீண்ட காலம் உறவு நிலைத்திருப்பதற்கு உதவும்.


2. ஒருவருக்கொருவர் முன்னுரிமை கொடுங்கள் - பிஸியாக இருப்பது இப்போதெல்லாம் வழக்கமாகிவிட்டது. நமது பார்ட்னர்களுக்காக நேரத்தை ஒதுக்குவதை மறந்துவிடுவதால், வேலையில் நாம் மூழ்கிவிடுகிறோம். நாள் முழுவதும் வேலை செய்துவிட்டு எப்படியிருந்தாலும் பிறகு அவர்களை வீட்டில் பார்ப்போம்தானே என்று நினைப்பதால் அங்கெ ஒருவருக்கு ஒருவர் முன்னுரிமை கொடுப்பது அடிபட்டுவிடுகிறது. நீண்ட கடினமான நாளிலிருந்து நீங்கள் சோர்வடையும் போது, ​​நீங்கள் ஃபன்னாக இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு, அது புரிந்துகொள்ளத்தக்கது. அதனால் நேரத்தை ஒருவருக்கு ஒருவர் செலவிட முன்னதாகவே ஏதாவது திட்டமிடுங்கள்.


3. ஒருவரையொருவர் பாராட்டுங்கள் - ஒரு உறவு இலகுவாக இருக்கும்போது, ​​​​நம் பார்ட்னர்களை பாராட்ட மறந்துவிடுகிறோம். அவர்கள் எவ்வளவு அழகாக இருக்கிறார்கள் அல்லது அவர்கள் நமக்கு எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை உணர்ந்தாலும் வெளிப்படுத்தத் தவறிவிடுகிறோம்.எப்படியும் அவர்களுக்கு இது தெரியும்தானே என்று நாம் கருதுகிறோம். ஆனால் அது தவறு. உறவுகளில் வெளிப்படுத்தாத உணர்வுகள் உணர்வுகளே இல்லை. சொல்லப்படாத பாராட்டுகள் பாராட்டுகளே இல்லை.