இல்லறம் சிறக்க இந்த 5 விஷயங்களை ஒரு வருஷம் கூட மிஸ் பண்ணாம செய்யுங்க.. அப்புறம் பாருங்க அதோடு பலன!
சண்டையில் கிழியாத சட்டை எதுன்னு நம்ம வடிவேலு கேட்பது போல, சண்டை போடாத தம்பதிகள் இருக்க முடியாது.


ஆனால், ஊடலும் அதன் பின் கூடலும் தானே சுகம். அந்த சுகத்தை தக்க வைத்துக் கொள்ள இதோ சில டிப்ஸ்..
உங்களுக்கும் உங்கள் இணையருக்கும் சண்டை வராமல் இருக்க நீங்கள் செய்ய வேண்டியது இவை தான்..


1. அவ்வப்போது திட்டமிட்டு பயணம் செய்யுங்கள்
அவ்வப்போது திட்டமிட்டு எங்காவது சென்று வாருங்கள். நீங்கள் இருவரும் எவ்வளவு பரபரப்பான வேலையில் இருந்தாலும் சரி அவற்றையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு இருவரும் சேர்ந்து வெளியூருக்கு சென்று வாருங்கள். திருமணம் எப்போதும் இனிக்க இது மிகவும் முக்கியமானது. எக்காரணம் கொண்டும் பயணத்தை கைவிடாதீர்கள்.


2. நிதி நிலைமை குறித்து வெளிப்படையாக விவாதியுங்கள்..
குடும்பம் நடத்துவது நிதி நிலை சார்ந்ததே. அதனால் நிதி நிலைமை குறித்து இணையர் இருவருமே அவ்வப்போது வெளிப்படையாக பேசுங்கள். குடும்ப வரவு செலவுகளை சேமிப்புகளை சரியாக திட்டமிட்டு வாழ்ந்தாலே பல்வேறு பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலம.


3. பாலியல் உறவில் ஆக்டிவாக இருங்கள்.
கணவன், மனைவி இருவருமே எப்போதுமே பாலியல் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள தயங்காமல் இருக்க வேண்டும். இருவருமே ஒருவொருக்கொருவர் தேடி ஆனந்தம் அடைய வேண்டும். பாலியல் உறவில் புதுமைகளை முயற்சித்துப் பார்க்கலாம். சின்ன சின்ன ஆசைகள் திருமண உறவை நீடித்து நிலைத்து இருக்கச் செய்யும்.




4. பிடித்தமான டிவி ஷோக்களை சேர்ந்து பாருங்கள்..
கணவன், மனைவி இருவருக்குமே வெவ்வேறு ஜானர் சினிமா பிடிக்கலாம், வெவ்வேறு நடிகர், நடிகை ஆதர்சமாக இருக்கலாம். ஆனால் ஏதேனும் ஒரு ஷோவை இருவரும் இணைந்து பார்ப்பதாக தேர்வு செய்து கொள்ளுங்கள். ஒன்றாக அமர்ந்து விரும்பியதை கொரித்துக் கொண்டு கட்டியணைத்துக் கொண்டு பார்க்கும் ஷோக்கள் அத்தனை வலிமையாக உங்களை இணைக்கும். அது அந்த ஷோவின் மகிமை அல்ல. நீங்கள் ஒன்றாக இருக்கும் நேரத்தின் வலிமை. அந்த நேரமானது உங்கள் உறவை மேம்படுத்தும். உறுதியாக்கும்.




5. வீட்டை அழகுப்படுத்துங்கள்..
ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட காலத்தை தேர்வு செய்து வீட்டை முழுவதும் சுத்தம் செய்து உங்கள் விருப்பத்துக்கு ஏற்றவாறு நியூ லுக் கொடுங்கள். வீட்டை இணையருடன் இணைந்து சுத்தம் செய்வது ஓர் அழகியல் உணர்வின் வெளிப்பாடு. அந்த அழகியல் உணர்வு காதலைத் தூண்டும், காமத்தை வளமாக்கும், உறவை உறுதியாக்கும். வீட்டில் உங்கள் அறையில் உங்களுக்கும், உங்கள் இணையருக்கும் சுதந்திரம் தரும் சிறு இடத்தை உருவாக்குங்கள். அந்த சுதந்திரம் இன்னும் அழகானது. அவசியமானது.


திருமணம் முடிந்த நாளில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் இதை நீங்கள் செய்துவந்தால் எப்போதுமே பிணைப்புடன் இல்லறம் சிறக்க வாழலாம்.